Thursday, June 17, 2021

narayaneeyam



 நாராயணீயம்   நங்கநல்லூர்   J  K  SIVAN 

தசகம் 6  


6.  விஷ்ணுவின் விராட் ஸ்வரூபம், விஸ்வரூப தர்சனம்

ப்ரம்ம ஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரைத் தெரியாத ஹிந்து  எவராவது  இருந்தால் அவர்  கோவில் பக்கமே செல்லாத , ராமாயண, பாரத, பாகவத ப்ரவசனங்களை கேட்காத காதுகளை உடைய செவிடனாக இருக்கலாம் என்று  சொன்னால் பொருந்தும். 

இப்போது கேசட், யூ  ட்யூப்,   வாட்ஸாப்பில் அவரைக்  கேட்பவர்கள் அரிது.  என் இள வயது காலத்தில்  அப்போ தெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் அந்த உபன்யாச சக்ரவர்த்தி எழுதிய ஜெயமங்கள ஸ்தோத்ரம், சுந்தரகாண்டம் புத்தகங்கள் பூஜை அறையில் இருந்தது. பாவம்,  அவருக்கு ஒரு உபாதை. தொழு நோய். அவருக்கு தெரியாதா எந்த வைத்தியர் குணமாக்குபவர் என்று?. ஸ்ரீ குருவாயூரப்பன் திருவடிகளைப்  பிடித்துக் கொண்டார்.

அவரது நோயின் கொடுமை உச்சக் கட்டத்தில் இருந்ததால் கோவிலுக்குள்ளோ, கோவில் புஷ்கரணியில் ஸ்னானம் செய்யவோ குருவாயூரில் அனுமதிக்கவில்லை. நாராயணீயம் விடாமல் பாராயணம் செய்தார், பிரவசனம் செய்தார். அது முடிந்த சில வருஷங்களில் வியாதி இருந்த இடம் தெரியாமல் போய் அவர் குருவாயூரப்பனை நேரில் தரிசனம் செய்தார். குளத்தில் ஸ்னானம் செய்தார்.

இனி, ஸ்ரீ மேல்பத்தூர் நாராயண நம்பூதிரி அளித்த ஸ்ரீ நாராயணீயம் ஆறாவது தசகத்துக்கு செல்வோம்

1. एवं चतुर्दशजगन्मयतां गतस्य पातालमीश तव पादतलं वदन्ति । 
पादोर्ध्वदेशमपि देव रसातलं ते गुल्फद्वयं खलु महातलमद्भुतात्मन् ॥१॥ 

 ēvaṁ caturdaśajaganmayatāṁ gatasya pātālamīśa tava pādatalaṁ vadanti |
pādōrdhvadēśamapi dēva rasātalaṁ tē gulphadvayaṁ khalu mahātalamadbhutātman || 6-1 ||

ஏவம் சதுர்தஸ ஜகந்மயதாம் கதஸ்ய பாதாலம் ஈஸ தவ பாததலம் வதந்தி 
பாதோர்த்த்வ தேஸமபி தேவ ரஸாதலம் தே குல்பத்வயம் கலு மஹாதலம் அத்புதாத்மந். (1)

ஹே,  என் தெய்வமே குருவாயூர் கொச்சு கிருஷ்ணா, எப்படியப்பா நீ பதினான்கு உலகையும் ஒன்று சேர்த்த விராட் ஸ்வரூபமாக காட்சி அளித்தாய்? நினைத்தே பார்க்க முடியவில்லையே? உன் திருவடி பாதங்கள் பாதாளத்தையும் தாண்டி கீழே செல்ல, மேல் பாதம் ரஸாதளத்தில் தென்பட, தண்டை அணிந்த கணுக் கால்கள் மஹா தளத்தில் காணப்பட அடேயப்பா, மேலே மேலே எப்படி சொல்லிக்கொண்டே போவேன். வார்த்தை தேடுகிறேன்.

2 जङ्घे तलातलमथो सुतलं च जानू किञ्चोरुभागयुगलं वितलातले द्वे । 
क्षोणीतलं जघनमम्बरमङ्ग नाभि- र्वक्षश्च शक्रनिलयस्तव चक्रपाणे ॥२॥

jaṅghē talātalamathō sutalaṁ ca jānū kiñcōrubhāgayugalaṁ vitalātalē dvē |
kṣōṇītalaṁ jaghanamaṁbaramaṅga nābhi rvakṣaśca śakranilayastava cakrapāṇē || 6-2 ||

ஜங்க்கே தலாதலம் அதோஸுதலஞ்ச ஜாநூ கிம் சோருபாகயுகலம் விதலாதலே த்வே 
க்ஷோணீதலம் ஜகநம் அம்பரம் அங்க நாபி: வக்ஷஸ்ச ஸக்ர நிலயஸ்தவ சக்ரபாணே 2

ஓ குருவாயூரப்பா, சுதர்சன சக்ரதாரி, முழங்காலுக்கு கீழே முன்புறம் தலா தளத்தில் இருக்கிறதே. முழங்கால் முட்டிகள் சுதல லோகத்தில் கண்ணில் படுகிறதே. அடேயப்பா, உன் இரு தொடைக ளும் விதல அதல லோகங்களா? அப்படியென்றால் உன் இடுப்பின் முன்புறம் பூமியோ? தொப்புள் பகுதி ஆகாசம் போல இருக்கிறது. உன் மார்பு அகண்டு இந்திர லோகமாக தெரிகிறது. இந்திரன் அங்கே ஆசனத்தில் தேவர்களோடு அமர்ந்திருப்பதை பார்க்கிறேனே . 

3.ग्रीवा महस्तव मुखं च जनस्तपस्तु फालं शिरस्तव समस्तमयस्य सत्यम् ।
 एवं जगन्मयतनो जगदाश्रितैर- प्यन्यैर्निबद्धवपुषे भगवन्नमस्ते ॥३॥

grīvā mahastava mukhaṁ ca janastapastu phālaṁ śirastava samastamayasya satyam |
ēvaṁ jaganmayatanō jagadāśritaira-pyanyairnibaddhavapuṣē bhagavannamastē || 6-3 ||

க்ரீவா மஹஸ்தவ முகஞ் ச ஜநஸ்தபஸ்துபாலம் ஸிரஸ்தவ ஸமஸ்தமயஸ்ய ஸத்யம். 
ஏவம் ஜகந்மயதநோ ஜகதாஸ்ரிதைர:அப்யந்யைர் நிபத்த வபுஷே பகவந் நமஸ்தே (3) 

அப்பனே, குருவாயூரா , உன் உடம்பின் சில பகுதிகளை பதினாலு லோகங்களில் சிலதாக பார்த்தேனே. மீதியைச்  சொல்கிறேன். உன் கழுத்து பூரா மஹ லோகம் , முகம் ஜன லோகம். ரொம்ப பொருத்தம். நெற்றியோ தபோ லோகம், உனது சிரம் சத்யலோகம், உன் தேகமே பிரபஞ்சம்,  அப்பனே, நீ எங்கும் நிறைந்தவன் என்பதை இதைவிட வேறு எப்படி சொல்வேன்? அப்பா என்னுடைய சாஷ்டாங்க நமஸ்காரத்தை உனக்கு செலுத்துகிறேன்.

4 त्वद्ब्रह्मरन्ध्रपदमीश्वर विश्वकन्द छन्दांसि केशव घनास्तव केशपाशा: । 
उल्लासिचिल्लियुगलं द्रुहिणस्य गेहं पक्ष्माणि रात्रिदिवसौ सविता च नेत्रै ॥४॥

tvadbrahmarandhrapadamīśvara viśvakanda chandāṁsi kēśava ghanāstava kēśapāśāḥ |
ullāsicilliyugalaṁ druhiṇasya gēhaṁ pakṣmāṇi rātridivasau savitā ca nētrē || 6-4 ||

த்வத் ப்ரஹ்மரந்த்ர பதம் ஈஸ்வர விஸ்வகந்த சந்தாம்ஸி கேஸவ கநாஸ்தவ கேஸபாஸா:                  உல்லாஸி சில்லியுகலம் த்ருஹிணஸ்ய கேஹம். பக்ஷ்மாணி ராத்ரிதிவஸெள ஸவிதா ச நேத்ரே.4

 என் உண்ணி கிருஷ்ணா, நீ தான் இந்த பிரபஞ்சத்தின் ஆதாரம். உன் உடம்பில் உள்ளவை தான் இந்த பிரபஞ்சத்தில் காணும் யாவையும். உன் சிரசின் உச்சியில் ப்ரம்மரந்திரத்திலிருந்து பிறந்தது தான் வேதங்கள் . துளியும் சந்தேகத்துக்கு இடமே இல்லை. மேலே காணும் கருநிற மேகங்கள் எல்லாமே உன் கரிய புருவங்கள். ப்ரம்மாவின் லோகம் தான்  உன் கண் இமைகள் தான் ஐயனே.  இரவும் பகலும் உன் கண்கள், அப்பப்பா, சூரியன் அல்லவோ அவை! ஒளியே காட்டிக் கொடுக்கிறதே!.

5. निश्शेषविश्वरचना च कटाक्षमोक्ष: कर्णौ दिशोऽश्वियुगलं तव नासिके द्वे ।
 लोभत्रपे च भगवन्नधरोत्तरोष्ठौ तारागणाश्च दशना: शमनश्च दंष्ट्रा ॥५॥

niśśēṣaviśvaracanā ca kaṭākṣamōkṣaḥ karṇau diśō:’śviyugalaṁ tava nāsikē dvē |
lōbhatrapē ca bhagavannadharōttarōṣṭhau tārāgaṇāśca daśanāḥ śamanaśca daṁṣṭrā || 6-5 ||

நி: ஸேஷ விஸ்வரசநா ச கடாக்ஷமோக்ஷ: கர்ணெள திஸோ ஸ்வியுகளம் தவ நாஸிகே த்வே 
லோபத்ரபே ச பகவந்நதரோத்த ரோஷ்டாடெள தாராகணாஸ்ச தஸநா: ஸமநஸ்ச தம்ஷ்ரா. 5

ஓ, குருவாயூரப்பா, நான் தான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே. உன் கடைக்கண் விழி ஒன்றே போதுமே, பிரபஞ்சம் உயிர் பெற்று எழுவதற்கு. உன் இரு செவிகள் தான் திசைகள்.  உன் காது தானே  நாலா பக்கத்து செய்திகளையும்  எங்களைக்  கேட்க வைக்கிறது.  உனது நாசித்வாரம் மூச்சு இழுத்து வெளிவிடுகிறதே  இந்த இரு செயலும் தான் அஸ்வினி தேவதைகள்.   
  
கீழுதடு மேலுதடு ரெண்டுமே, லோபம் எனும் சுயநலம், பேராசை இவற்றை அடக்குபவை,  தன்மையான குணத்தை அளிப்பவை. 

பற்கள்; தான் நக்ஷ்த்ரங்கள், கடைவாய் பற்கள் தான் எமதர்மன் என்கிறார் நாராயண நம்பூதிரி. அவர் கண்களுக்கு இதெல்லாம் தெரிந்து தானே ஸ்லோகமாக வந்திருக்கிறது. எதிரே உட்கார்ந்து பார்த்தவரல் லவா?

6. माया विलासहसितं श्वसितं समीरो जिह्वा जलं वचनमीश शकुन्तपङ्क्ति: । 
सिद्धादय: स्वरगणा मुखरन्ध्रमग्नि- र्देवा भुजा: स्तनयुगं तव धर्मदेव: ॥६॥

māyā vilāsahasitaṁ śvasitaṁ samīrō jihvā jalaṁ vacanamīśa śakuntapaṅktiḥ |
siddhādayaḥ svaragaṇā mukharandhramagni-rdēvā bhujāḥ stanayugaṁ tava dharmadēvaḥ || 6-6 ||   

மாயா விலாஸ ஹஸிதம் ஸ்வஸிதம் ஸமீரோ ஜிஹ்வா ஜலமா வசநமீஸ ஸகுந்த பங்க்தி:                   ஸித்தாய: ஸ்வரகணா முகரந்த்ரம் அக்நி: தேவா புஜா: ஸ்தநயுகம் தவ தர்மதேவ: 6

என்னுடைய ப்ரபோ, வாதபுரீசா, உன் காந்த புன்னகை தான் ஐயா மாயை.! உன் மூச்சு தான் உலகத்தில் ப்ராண வாயு ,காற்று.     நாக்கு தான் ஜலம். வார்த்தைகள் தான் பக்ஷிகள் இனம்.    சப்தம் கானம் தான் சித்தர்கள். வாய் அக்னி, கரங்கள் எல்லாமே  உபதேவதைகள்.  மார்பு தான்  தர்மதேவதை.. 

पृष्ठं त्वधर्म इह देव मन: सुधांशु - रव्यक्तमेव हृदयंबुजमम्बुजाक्ष । 
कुक्षि: समुद्रनिवहा वसनं तु सन्ध्ये शेफ: प्रजापतिरसौ वृषणौ च मित्र: ॥७॥ 7

pr̥ṣṭhaṁ tvadharma iha dēva manaḥ sudhāṁśu-ravyaktamēva hr̥dayāṁbujamaṁbujākṣa |                                                                      kukṣiḥ samudranivahā vasanaṁ tu sandhyē śēphaḥ prajāpatirasau vr̥ṣaṇau ca mitraḥ || 6-7 || 

ப்ருஷ்டம் த்வதர்ம இஹ தேவ மந: ஸுதாம்ஸு: அவ்யக்தமேவ ஹ்ருதயாம்புஜம் அம்புஜாக்ஷ: குக்ஷி : ஸமுத்ரநிவஹா வஸநம் து ஸந்த்யே ஸேப: ப்ரஜாபதிரஸெள வ்ருஷணெள ச மித்ர:

என் தாமரைக்கண்ணா, ப்ரபோ, உன் முதுகுக்கு கீழே பின்புறம் அதர்மத்தை குறிக்கும். நல்லது கெட்டது எல்லாமே உன்னுள்ளே தானே. மனம் சந்த்ரன், நாபிப் பிரதேசம் எல்லையற்ற சமுத்திரம். உன் மேலாடை இடுப்பு வஸ்திரம் தான் அந்தி, விடியற்காலை நேரங்கள். உன் உறுப்புகள் ப்ரம்மா, மித்ரன் ஆகியோர். விண்ணும் மண்ணும் நீயே என்று ஒரு வரியில் சொல்லாமல் ஏன் எப்படி நீட்டி சொல்கிறேன்? என் கண்ணால் பார்த்த ஆனந்தத்தை மற்றவருக்காக விவரிக்க வேண்டாமா?

8. श्रोणीस्थलं मृगगणा: पदयोर्नखास्ते हस्त्युष्ट्रसैन्धवमुखा गमनं तु काल: ।
 विप्रादिवर्णभवनं वदनाब्जबाहु- चारूरुयुग्मचरणं करुणांबुधे ते ॥८॥

śrōṇīsthalaṁ mr̥gagaṇāḥ padayōrnakhāstē hastyuṣṭrasaindhavamukhā gamanaṁ tu kālaḥ |
viprādivarṇabhavanaṁ vadanābjabāhu-cārūruyugmacaraṇaṁ karuṇāṁbudhē tē || 6-8 ||

ஸ்ரோணீஸ்த்தலம் ம்ருககணா: பதயோர்நகாஸ்தே ஹஸ்த்யுஷ்ட்ரஸைந்த்தவமுகா கமநம் து கால: விப்ராதி வர்ண பவநம் வதனாப்ஜ பாஹு சாரூருயுக்ம சரணம் கருணாம் புதே தே.

''ஹே கருணாமூர்த்தி, உன் இடுப்பு பிரதேசத்தில் இருந்து உயிர் பெற்றவை தான் விலங்குகள். கால் நகங்கள் தான்  யானைகள்  ஒட்டகங்கள், குதிரைகள் போல் மிருகங்களாயின. பகவானே உன் அசைவு தான் காலம். உன் உடம்பிலிருந்து உருவான மனித உயிர்கள் தான் அவரவர் ஸ்வதர்ம தொழில், கர்மத்துக்கு தக்கவாறு தோன்றின. புருஷ சூக்தம் இதை தான் சொல்கிறது. இதில் ஜாதி எங்கே வந்தது?

9. संसारचक्रमयि चक्रधर क्रियास्ते वीर्यं महासुरगणोऽस्थिकुलानि शैला: । 
नाड्यस्सरित्समुदयस्तरवश्च रोम जीयादिदं वपुरनिर्वचनीयमीश ॥९॥

saṁsāracakramayi cakradhara kriyāstē vīryaṁ mahāsuragaṇō:’sthikulāni śailāḥ |                                                                                      nāḍyassaritsamudayastaravaśca rōma jīyādidaṁ vapuranirvacanīyamīśa || 6-9 ||

ஸம்ஸார சக்ரம் அயி சக்ரதர க்ரியாஸ்தே வீர்யம் மஹாஸுரகணோ ஸ்த்தி குலாநி ஸைலா: 
நாட்யஸ்ஸரித் ஸமுதய: தரவஸ்ச ரோம ஜீயாதிதம் வபுர் அநிர்வசநீயம் ஈஸ (9) 

''என் தெய்வமே, சுதர்சன சக்ரமேந்தியவனே, உன் செயல் தான் உலக வாழ்க்கை சக்ரம் எனும் ஓய்வில்லாத பிறப்பு இறப்பு ஸம்ஸார அனுபவம். உனது வீர பௌருஷம் தான் அசுரர்களையும் கட்டுக்குள் வைப்பது. உன் எலும்புகள் தான் மஹாசக்தி வாய்ந்த மலைகள். உன் நாடி நரம்புகள் தான் எண்ணற்ற ஆறு ஏரி குளம் போன்ற நீர் நிலைகள். உன் தலை முடிகளாகத்தான் எண்ணற்ற தாவர வர்க்கத்தை பார்க்கிறேன். அப்பா என் குருவாயூர் கிருஷ்ணா. போதும் போதும், உன்னுடைய விராட் தரிசனத்தை, உருவத்தை, முழுதுமாக விவரிக்க என்னால் இயலவில்லை. ஜெயவிஜயீபவ..

10. ईदृग्जगन्मयवपुस्तव कर्मभाजां कर्मावसानसमये स्मरणीयमाहु: । 
तस्यान्तरात्मवपुषे विमलात्मने ते वातालयाधिप नमोऽस्तु निरुन्धि रोगान् ॥१०॥

īdr̥gjaganmayavapustava karmabhājāṁ karmāvasānasamayē smaraṇīyamāhuḥ |

tasyāntarātmavapuṣē vimalātmanē tē vātālayādhipa namō:’stu nirundhi rōgān || 6-10 ||

ஈக்ருத் ஜகந்மய வபுஸ்தவ கர்ம பாஜாம் கர்மாவஸாந ஸமயே ஸ்மரணீயம் ஆஹு: 
தஸ்யாந்தராத்ம வபுஷே விமலாத்மநே தே வாதாலயாதிப நமோ ஸ்து நிருந்தி ரோகாந்.

நாராயண பட்டத்ரி ஸ்ரீமந் நாராயணனின் விராட் ஸ்வரூபத்தை வர்ணிக்கிறார். ஸ்ரீமந் நாராயணனின் விராட் ஸ்வரூபத்தை வைதீக கர்மங்கள் முடித்த பின்னும், மரண காலத்திலும் த்யானம் செய்வது வழக்கம். இவ்வளவு பெரிய விராட் ஸ்வரூபத்தின் முக்கிய அங்கமாக நீ உள்ளுறைகிறாய். பூலோக வாசிகள் கர்மத்தால் சம்சார பந்தத்தில் உழல்பவர்கள் உன்னுடைய விராட் ஸ்வரூபத்தை நினைவு கூர்தல் வேண்டும். அண்ட சராசரமாக தோன்றுபவன் நீ. சத்வ ஸம்பன்னன். யாக யஞனங்களின் முடிவு, பலன், நீ.     மரணத்தின் பின் மோக்ஷம் முக்தி தருபவன்.

ஹே என் ப்ரபோ, குருவாயூரப்பா, என் ,மீதும் உன் கருணை வை. என் தேஹ உபாதைகள், துன்பங்களை அகற்று. உனக்கு என் ஸாஷ்டாங்க நமஸ் காரங்கள்.
 
தொடரும் 

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...