Sunday, June 27, 2021

narayaneeyam


 


ஸ்ரீமந் நாராயணீயம் - நங்கநல்லூர் J K SIVAN
த³ஶகம் -13


13, ஹிரண்யாக்ஷன் வதம்


हिरण्याक्षं तावद्वरद भवदन्वेषणपरं
चरन्तं सांवर्ते पयसि निजजङ्घापरिमिते ।
भवद्भक्तो गत्वा कपटपटुधीर्नारदमुनि:
शनैरूचे नन्दन् दनुजमपि निन्दंस्तव बलम् ॥१॥

hiraṇyākṣaṁ tāvadvarada bhavadanvēṣaṇaparaṁ
carantaṁ sāṁvartē payasi nijajaṅghāparimitē |
bhavadbhaktō gatvā kapaṭapaṭudhīrnāradamuniḥ
śanairūcē nandan danujamapi nindaṁstava balam || 13-1 ||

ஹிரண்யாக்ஷம் தாவத்₃வரத₃ ப₄வத₃ந்வேஷணபரம்
சரந்தம் ஸாம்வர்தே பயஸி நிஜஜங்கா₄பரிமிதே |
ப₄வத்₃ப₄க்தோ க₃த்வா கபடபடுதீ₄ர்நாரத₃முநி:
ஶநைரூசே நந்த₃ந் த₃நுஜமபி நிந்த₃ம்ஸ்தவ ப₃லம் || 1||

ஸ்ரீமந் நாராயணனைப் பற்றி அவனைக்காட்டிலும் அதிகம் தெரிந்தால் தான் நாராயணீயம் எழுத முடியும். விளையாட்டல்ல அது. சமஸ்க்ரிதத்தில் நாராயணனை அவன் அவதாரங்களை, மஹிமையைப் பற்றி ஆரம்பத்திலிருந்து தொடர்ச்சியாக ஒரு சம்பவம் விடாமல் பாடுகிறார் மேல்பத்தூர் நாராயண நம்பூதிரி. கையில் பேப்பர் துண்டோ, எதிரே புத்தகமோ இல்லை. கண்களை வேறு மூடிக்கொண்டுவிட்டார். அவர் எதிரில் தோன்றுவது மனக்கண் முன்னாள் அந்த நாராயணன் குருவாயூரப்பனாக , கண்ணைத் திறந்தாலும் எதிரே சந்நிதியில் உன்னி கிருஷ்ணனாக. அவனைப் பார்த்தாலே போதுமே, அவன் சரித்திரம் கண் முன்னால் எழுத்தாக தோன்றுமே. அதைப் பாடுவதில் என்ன சிரமம்?

நாராயணன் பெரிய ஸ்வேத வராஹனாக பாதாளம் சென்றபோது நாரதர் சும்மாவா இருப்பார்? நேராக ஹிரண்யாக்ஷன் எங்கிருக்கிறான் என்று தேடி அவனை கண்டுபிடித்து அவன் முன் போய் நின்றார். ஹிரண்யாக்ஷன் எவ்வளவு பெரிய பூதாகார வடிவம் என்று காட்டுவதற்கு உலகத்தையே விழுங்கிய பிரளய ஜலம் அவன் முழங்கால் அளவுக்கு தான் வந்தது என்கிறார். சமயோசிதமாக ஹிரண்யாக்ஷா உன்னைப்போல் மஹா வீரன் எவனாவது உண்டா? அந்த நாராயணன் உனக்கு முன் எம்மாத்திரம்? என்று அவன் வீரத்தை பலத்தை புகழ்கிறார். முட்டாள் முகஸ்துதிக்கு மயங்குபவன் அல்லவா?

स मायावी विष्णुर्हरति भवदीयां वसुमतीं
प्रभो कष्टं कष्टं किमिदमिति तेनाभिगदित: ।
नदन् क्वासौ क्वासविति स मुनिना दर्शितपथो
भवन्तं सम्प्रापद्धरणिधरमुद्यन्तमुदकात् ॥२॥

sa māyāvī viṣṇurharati bhavadīyāṁ vasumatīṁ
prabhō kaṣṭaṁ kaṣṭaṁ kimidamiti tēnābhigaditaḥ |
nadan kvāsau kvāsāviti sa muninā darśitapathō
bhavantaṁ samprāpaddharaṇidharamudyantamudakāt || 13-2 ||

ஸ மாயாவீ விஷ்ணுர்ஹரதி ப₄வதீ₃யாம் வஸுமதீம்
ப்ரபோ₄ கஷ்டம் கஷ்டம் கிமித₃மிதி தேநாபி₄க₃தி₃த: |
நத₃ந் க்வாஸௌ க்வாஸவிதி ஸ முநிநா த₃ர்ஶிதபதோ₂
ப₄வந்தம் ஸம்ப்ராபத்₃த₄ரணித₄ரமுத்₃யந்தமுத₃காத் || 2||

''ஹிரண்யாக்ஷா, நான் எதற்கு இங்கு உன்னிடம் ஓடோடி வந்தேன் தெரியுமா? உனக்குச் சொந்தமான இந்த பூமியை, அந்த நாராயணன் மெதுவாக தூக்கிக் கொண்டு செல்ல முயற்சிக்கிறான். இது உனக்குத் தெரியுமோ தெரியாதோ என்று எனக்கு கவலையாக இருந்தது. அது உண்மையாக இருந்தால் அதை நடக்கவிடலாமா நீ?

''அப்படியா நாரதா, சொல் எங்கே இருக்கிறான் அந்த நாராயணன்? எங்கே அவன்?''
''அதோ பார் அங்கே''
நாராயணன் பூவராஹனாக அசையும் இடத்தை காட்டுகிறார் நாராதர்.
குருவாயூரப்பா நீ அப்போது தான் வராஹனாக உன் கோரைப் பற்களுக்கிடையே ஜாக்ரதையாக பூமியைச் சுமந்து ஜலத்தை விட்டு கரையேறி வந்துகொண்டிருந்தாய்.


अहो आरण्योऽयं मृग इति हसन्तं बहुतरै-
र्दुरुक्तैर्विध्यन्तं दितिसुतमवज्ञाय भगवन् ।
महीं दृष्ट्वा दंष्ट्राशिरसि चकितां स्वेन महसा
पयोधावाधाय प्रसभमुदयुङ्क्था मृधविधौ ॥३॥

ahō āraṇyō:’yaṁ mr̥ga iti hasantaṁ bahutarai-
rduruktairvidhyantaṁ ditisutamavajñāya bhagavan |
mahīṁ dr̥ṣṭvā daṁṣṭrāśirasi cakitāṁ svēna mahasā
payōdhāvādhāya prasabhamudayuṅkthā mr̥dhavidhau || 13-3 ||

அஹோ ஆரண்யோ(அ)யம் ம்ருக₃ இதி ஹஸந்தம் ப₃ஹுதரை-
ர்து₃ருக்தைர்வித்₄யந்தம் தி₃திஸுதமவஜ்ஞாய ப₄க₃வந் |
மஹீம் த்₃ருஷ்ட்வா த₃ம்ஷ்ட்ராஶிரஸி சகிதாம் ஸ்வேந மஹஸா
பயோதா₄வாதா₄ய ப்ரஸப₄முத₃யுங்க்தா₂ ம்ருத₄விதௌ₄ || 3||

நாரதா என்ன இது. மஹா விஷ்ணு என்கிற நாராயணனைக் காட்டுகிறேன் என்று ஒரு பெரிய பன்றியைக் காட்டுகிறாய். இவ்வளவு பெரிய பன்றியை இதற்கு முன் பார்தததே இல்லையே . கொழுத்த மிருகம்'' என்று ஏளனமாக பேசினான். குருவாயூரப்பா, நீ இந்த சந்தர்ப்பத்துக்காக தானே காத்திருந்தாய். இவ்வளவு பெரிய ஹிரண்யாக்ஷன் அசுரனைப் பார்த்து நடுங்கிய பூமாதேவியை ஜாக்கிரதையாக கீழே இறக்கி ஜலத்தில் விட்டுவிட்டு நீ அசுரனை நெருங்கினாய். அவன் நகர்ந்து விடாமல் அவனோடு யுத்தம் புரிய தயாரானாய்.
நான் சொல்வது சரிதானே'' என்கிறார் நம்பூதிரி .

''ஆமாம் என்பது போல் தலையசைத்து புன்னகைக்கிறான் உண்ணிகிருஷ்ணன் ''.


गदापाणौ दैत्ये त्वमपि हि गृहीतोन्नतगदो
नियुद्धेन क्रीडन् घटघटरवोद्घुष्टवियता ।
रणालोकौत्सुक्यान्मिलति सुरसङ्घे द्रुतममुं
निरुन्ध्या: सन्ध्यात: प्रथममिति धात्रा जगदिषे ॥४॥

gadāpāṇau daityē tvamapi hi gr̥hītōnnatagadō
niyuddhēna krīḍanghaṭaghaṭaravōdghuṣṭaviyatā |
raṇālōkautsukyānmilati surasaṅghē drutamamuṁ
nirundhyāḥ sandhyātaḥ prathamamiti dhātrā jagadiṣē || 13-4 ||

க₃தா₃பாணௌ தை₃த்யே த்வமபி ஹி க்₃ருஹீதோந்நதக₃தோ₃
நியுத்₃தே₄ந க்ரீட₃ந் க₄டக₄டரவோத்₃கு₄ஷ்டவியதா |
ரணாலோகௌத்ஸுக்யாந்மிலதி ஸுரஸங்கே₄ த்₃ருதமமும்
நிருந்த்₄யா: ஸந்த்₄யாத: ப்ரத₂மமிதி தா₄த்ரா ஜக₃தி₃ஷே || 4||

ஹிரண்யாக்ஷன் அலட்சியமாக தனது பெரிய கதாயுதத்தை எடுத்துக் கொண்டு வராஹனை நெருங்கினான். நீயும் ஒரு கதாயுதத்தை ஏந்தினாய். உன்னிடம் தான் இருக்கிறதே கௌமோதகி.
கட, கட என்று சப்தம் எங்கும் எதிரொலித்தது. நேரம் ஓடியது. பிரம்மதேவன் ''நாராயணா, இந்த ராக்ஷஸன் அஸ்தமனத்துக்குள் கொல்லப்படவேண்டும் '' என்று நினைவூட்டினான்.


गदोन्मर्दे तस्मिंस्तव खलु गदायां दितिभुवो
गदाघाताद्भूमौ झटिति पतितायामहह! भो: ।
मृदुस्मेरास्यस्त्वं दनुजकुलनिर्मूलनचणं
महाचक्रं स्मृत्वा करभुवि दधानो रुरुचिषे ॥५॥

gadōnmardē tasmiṁstava khalu gadāyāṁ ditibhuvō
gadāghātādbhūmau jhaṭiti patitāyāmahaha bhōḥ |
mr̥dusmērāsyastvaṁ danujakulanirmūlanacaṇaṁ
mahācakraṁ smr̥tvā karabhuvi dadhānō ruruciṣē || 13-5 ||

க₃தோ₃ந்மர்தே₃ தஸ்மிம்ஸ்தவ க₂லு க₃தா₃யாம் தி₃திபு₄வோ
க₃தா₃கா₄தாத்₃பூ₄மௌ ஜ₂டிதி பதிதாயாமஹஹ! போ₄: |
ம்ருது₃ஸ்மேராஸ்யஸ்த்வம் த₃நுஜகுலநிர்மூலநசணம்
மஹாசக்ரம் ஸ்ம்ருத்வா கரபு₄வி த₃தா₄நோ ருருசிஷே || 5||

யுத்தம் மும்முரமாயிற்று. நாராயணா, உனது கதை கீழே விழுந்தது. நீ புன்னகைத்து உன் சுதர்சன சக்ரத்தை ஏந்தினாய். எத்தனை தீயவர்களை, ராக்ஷஸர்களை சுதர்சன சக்ரம் அழித்திருக்கிறது.


तत: शूलं कालप्रतिमरुषि दैत्ये विसृजति
त्वयि छिन्दत्येनत् करकलितचक्रप्रहरणात् ।
समारुष्टो मुष्ट्या स खलु वितुदंस्त्वां समतनोत्
गलन्माये मायास्त्वयि किल जगन्मोहनकरी: ॥६॥

tataḥ śūlaṁ kālapratimaruṣi daityē visr̥jati
tvayi chindatyēnat karakalitacakrapraharaṇāt |
samāruṣṭō muṣṭyā sa khalu vitudaṁstvāṁ samatanōt
galanmāyē māyāstvayi kila jaganmōhanakarīḥ || 13-6 ||

தத: ஶூலம் காலப்ரதிமருஷி தை₃த்யே விஸ்ருஜதி
த்வயி சி₂ந்த₃த்யேநத் கரகலிதசக்ரப்ரஹரணாத் |
ஸமாருஷ்டோ முஷ்ட்யா ஸ க₂லு விதுத₃ம்ஸ்த்வாம் ஸமதநோத்
க₃லந்மாயே மாயாஸ்த்வயி கில ஜக₃ந்மோஹநகரீ: || 6||

கோபம் பொங்க ஹிரண்யாக்ஷன் ஒரு பெரிய ஈட்டியை எடுத்து உன் மேல் வீசினான். நொடிப்பொழுதில் அவனது ஈட்டி சுதர்சன சக்கரத்தால் துண்டுகளாக ஒடிந்து கீழே விழுந்தது. கண்கள் சிவக்க கை முஷ்டிகளை மடக்கி ஹிரண்யாக்ஷன் உன்மேல் தாவினான். அவனது மாயாஜால தந்திரங்களை உபயோகித்து உன் பிடியிலிருந்து தப்பி உன்னை தாக்கினான்.

भवच्चक्रज्योतिष्कणलवनिपातेन विधुते
ततो मायाचक्रे विततघनरोषान्धमनसम् ।
गरिष्ठाभिर्मुष्टिप्रहृतिभिरभिघ्नन्तमसुरं
स्वपादाङ्गुष्ठेन श्रवणपदमूले निरवधी: ॥७॥

bhavaccakrajyōtiṣkaṇalavanipātēna vidhutē
tatō māyācakrē vitataghanarōṣāndhamanasam |
gariṣṭhābhirmuṣṭiprahr̥tibhirabhighnantamasuraṁ
svapādāṅguṣṭhēna śravaṇapadamūlē niravadhīḥ || 13-7 ||
[** karāgrēnnasvēna **]

ப₄வச்சக்ரஜ்யோதிஷ்கணலவநிபாதேந விது₄தே
ததோ மாயாசக்ரே விததக₄நரோஷாந்த₄மநஸம் |
க₃ரிஷ்டா₂பி₄ர்முஷ்டிப்ரஹ்ருதிபி₄ரபி₄க்₄நந்தமஸுரம்
ஸ்வபாதா₃ங்கு₃ஷ்டே₂ந ஶ்ரவணபத₃மூலே நிரவதீ₄: || 7||

ஆஹா நாராயணா, உன் சுதர்சன சக்ரம் அவன் மந்திர தந்திரங்களை எரித்தது , கோபத்தில் மதி மயங்கி ஹிரண்யாக்ஷன் கோபமாக கத்தினான் உன்னை தாக்க முற்பட்டான். உனது பலம் அவன் அறியாதவன். உன் கால் பெருவிரலால் அவன் காதருகே கழுத்தில் அவன் உயிர்நிலையில் அவனை அடித்த அடி யை அவன் எதிர்பார்க்கவில்லை.

महाकाय: सो॓ऽयं तव चरणपातप्रमथितो
गलद्रक्तो वक्त्रादपतदृषिभि: श्लाघितहति: ।
तदा त्वामुद्दामप्रमदभरविद्योतिहृदया
मुनीन्द्रा: सान्द्राभि: स्तुतिभिरनुवन्नध्वरतनुम् ॥८॥

mahākāyassō:’yaṁ tava karasarōjapramathitō
galadraktō vaktrādapatadr̥ṣibhiḥ ślāghitahatiḥ |
tadā tvāmuddāmapramadabharavidyōtihr̥dayā
munīndrāssāndrābhiḥ stutibhiranuvannadhvaratanum || 13-8 ||

மஹாகாய: ஸோ(அ)யம் தவ சரணபாதப்ரமதி₂தோ
க₃லத்₃ரக்தோ வக்த்ராத₃பதத்₃ருஷிபி₄: ஶ்லாகி₄தஹதி: |
ததா₃ த்வாமுத்₃தா₃மப்ரமத₃ப₄ரவித்₃யோதிஹ்ருத₃யா
முநீந்த்₃ரா: ஸாந்த்₃ராபி₄: ஸ்துதிபி₄ரநுவந்நத்₄வரதநும் || 8||

ஹிரண்யாக்ஷனால் அந்த பேரிடி போன்ற அடியைத் தாங்க முடியாமல் தலை சுற்றி, கண்கள் இருந்து, ஓவென்று கத்தியவாறு கீழே விழுந்தான். அவன் வாயிலிருந்து ரத்தக் கடல். ஒரே அடியில் ராக்ஷஸனை நீ வீழ்த்தியதில் அவன் உயிருக்கு மன்றாடியவாறு கீழே கிடந்தான். அவன் உயிர் சிறிது நேரத்தில் பிரிந்தது. தேவர்கள் முனிவர்கள் ரிஷிகள், விண்ணவர் மூவுலகத்தோரும் உனது வீரத்தை போற்றியதோடு அந்த கொடிய ராக்ஷஸனை வதம் செய்ததற்கு யஞ பூவராஹ மூர்த்தி உனக்கு நன்றி செலுத்தி மகிழ்ந்தனர்.


त्वचि छन्दो रोमस्वपि कुशगणश्चक्षुषि घृतं
चतुर्होतारोऽङ्घ्रौ स्रुगपि वदने चोदर इडा ।
ग्रहा जिह्वायां ते परपुरुष कर्णे च चमसा
विभो सोमो वीर्यं वरद गलदेशेऽप्युपसद: ॥९॥

tvaci cchandō rōmasvapi kuśagaṇaścakṣuṣi ghr̥taṁ
caturhōtārō:’ṅghrau srugapi vadanē cōdara iḍā |
grahā jihvāyāṁ tē parapuruṣa karṇē ca camasā
vibhō sōmō vīryaṁ varada galadēśē:’pyupasadaḥ || 13-9 ||

த்வசி ச₂ந்தோ₃ ரோமஸ்வபி குஶக₃ணஶ்சக்ஷுஷி க்₄ருதம்
சதுர்ஹோதாரோ(அ)ங்க்₄ரௌ ஸ்ருக₃பி வத₃நே சோத₃ர இடா₃ |
க்₃ரஹா ஜிஹ்வாயாம் தே பரபுருஷ கர்ணே ச சமஸா
விபோ₄ ஸோமோ வீர்யம் வரத₃ க₃லதே₃ஶே(அ)ப்யுபஸத₃: || 9||

ஹிரண்யாக்ஷனை வதம் செயது பூமாதேவியை மீட்ட நாராயணா, உனது மஹிமையை எப்படி பாடுவேன். பெரிய கடவுளே, பெருமாளே, உனது சருமம் காயத்ரி மந்திரம் போன்ற வேத மந்த்ர சப்த சக்தி நிரம்பியவை. உனது ரோமங்கள் தர்ப்பை புல் போன்ற புனிதமானவை. உனது கண்கள் தா யாகத்தில் வார்க்கும் நெய் . உனது கால்கள் தான் யாகத்தீ வளர்க்கும் ரிஷிகள். உனது முகம் தான் தாராளமாக யாகத்திற்கு தேவையான நெய்யைக் கொண்ட ஸ்ருக் எனும் பாத்திரம். உனது வயிறு தான் யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருள்களை கொள்ளும் பாத்திரம். உனது நாக்கு தான் சோம ரசத்தை சேமித்து வைக்க சரியான பாத்திரம். உனது அகன்ற காதுகள் தான் சோமரசத்தை பருகும் பாத்திரங்கள். உனது சக்தி தான் சோமரசம்.
உனது கழுத்து தான் யாகத்தை நடத்தை நடத்தும் முறையான உபநிஷத.

मुनीन्द्रैरित्यादिस्तवनमुखरैर्मोदितमना
महीयस्या मूर्त्या विमलतरकीर्त्या च विलसन् ।
स्वधिष्ण्यं सम्प्राप्त: सुखरसविहारी मधुरिपो
निरुन्ध्या रोगं मे सकलमपि वातालयपते ॥१०॥

munīndrairityādistavanamukharairmōditamanā
mahīyasyā mūrtyā vimalatarakīrtyā ca vilasan |
svadhiṣṇyaṁ samprāptaḥ sukharasavihārī madhuripō
nirundhyā rōgaṁ mē sakalamapi vātālayapatē || 13-10 ||

முநீந்த்₃ரைரித்யாதி₃ஸ்தவநமுக₂ரைர்மோதி₃தமநா
மஹீயஸ்யா மூர்த்யா விமலதரகீர்த்யா ச விலஸந் |
ஸ்வதி₄ஷ்ண்யம் ஸம்ப்ராப்த: ஸுக₂ரஸவிஹாரீ மது₄ரிபோ
நிருந்த்₄யா ரோக₃ம் மே ஸகலமபி வாதாலயபதே || 10||

வந்த காரியம் முடிந்த திருப்தியில்,மனதில் மகிழ்வோடு, ரிஷிகள் யோகிகள் முனீஸ்வரர் மகிழ்ந்து புகழ, மிகப்பெரிய சரீரத்தோடு நாராயணா நீ உன் இருப்பிடம் வைகுண்டத்துக்கு திரும்பினாய்.
எண்டே குருவாயூரப்பா, மது எனும் ராக்ஷஸனை மாய்த்தவனே. என் ரோகத்தையும் அழித்து என்னை காப்பாற்று.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...