Sunday, June 13, 2021

GEETHANJALI


 

கீதாஞ்சலி  -  நங்கநல்லூர்  J K  SIVAN --தாகூர் 

69.   ஓயாது இயங்கும் உயிர்ச்சக்தி 

69  The same stream of life that runs through my veins night and day runs through the world and dances in rhythmic measures.
It is the same life that shoots in joy through the dust of the earth in numberless blades of grass andbreaks into tumultuous waves of leaves and flowers.
It is the same life that is rocked in the ocean-cradle of birth and of death, in ebb and in flow.
I feel my limbs are made glorious by the touch of this world of life. And my pride is from the life-throb of ages dancing in my blood this moment.

கிருஷ்ணா,  எனக்குப் புரிகிறதடா.  ஏதோ ஒரு  உயிர்ச்சக்தியை , என்னுள்  ஓடவிட்டிருக்கிறாய். அது கடகடவென்று  என் நாடி நரம்புகளில் ஓடுகிறது, இரவும் பகலுமாக. அதால் தான் எனக்கு அசைவு  பேச்சு எண்ணம் எல்லாமே. என்னுள் மட்டும் அல்ல, இந்த பிரபஞ்சத்தில், இந்த உலகத்திலேயும் அந்த உயிரோட்டம் தெரிகிறது.  ஆடுகிறது, அசைகிறது இயங்குகிறது எல்லாம் ஒரே சீராக அளவாக.அந்த சக்தி தான்  உலகின் மண்ணில் கலந்த சந்தோஷம், ஆனந்தம்  எங்கும் பச்சை பசேலென புல்லாக அலைபோல் காற்றில் ஆடும் இலையாக, பூவாக, இந்த உயிரோட்டம் எல்லையில்லாதது என்று புரிகிறது.  கண்ணுக்கெட்டாத   ஜனன மரணம் கலந்த    ஓ வென்ற ஓசையோடு அலையும் சாகரம். மேலும் கீழும்  உயர்ந்து தாழ்ந்தும்  ஓடும் நதி, பிரவாகம் எல்லாமே. ஒரு க்ஷணம் யோசித்துப்பார்க்கிறேன், இந்த உயிரோட்டம் மட்டும் இல்லாவிட்டால்??? என் உடலில் இப்படி  ஒரு ஆனந்தம் நடமாட்டம்  இருக்குமா?காலம் காலமாக  தொடர்ந்து உலகை ஆட்டிவைக்கும்  எல்லாமே  என்னுள் ஓடும் ரத்தத்தின் ஓட்டம் தான்.. எங்கும் எதிலும் நீ,உன் உயிர்ச்சக்தி கண்ணா.  உன்னை நினைத்தாலே எவ்வளவு பெருமை எனக்கு!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...