Thursday, June 3, 2021

GEETHANJALI

 

கீதாஞ்சலி -   நங்கநல்லூர்  J  K  SIVAN --
தாகூர் 


65.  எனக்கு  சுவையூட்டி,   என்னை  அனுபவி.....


65.  What divine drink wouldst thou have, my God, from this overflowing cup of my life?
My poet, is it thy delight to see thy creation through my eyes and
to stand at the portals of my ears silently to listen to thine own eternal harmony?
Thy world is weaving words in my mind and thy joy is adding music to them.
Thou givest thyself to me in love and then feelest thine own entire sweetness in me.


''கிருஷ்ணா,   உன்னை தானடா  தாகூர்  நேரடியாக  கேட்கிறார் போல் இருக்கிறது ?
 என்னை என்று நினைத்து ஏமாந்து போனேன். இப்படி ஒரு கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்?

உனக்கு பிடித்த  தெய்வீக பானம்,   இதோ   பொங்கி வழிகிறதே  என் வாழ்க்கைக்  கோப்பையில்.  இந்தா அதை  எடுத்துக்  கொள் .  என்  முழு வாழ்க்கையே  உன்னை மகிழ்விக்க  காத்திருக்கும்   உனக்குப்  பிடித்த பானம்  நிறைந்த கோப்பை தான்.  நீ ரசிகன் மட்டும் அல்ல.  ஐயா,    கிருஷ்ண  கவிஞரே,  என் விழிகள் வழியாக  இப்  பரந்த உலகில் உம்முடைய  மாயப்  படைப்புகளைக் கண்டு மகிழ  விருப்பமா?  

 என் காது மடல்களில் ஒய்யாரமாக  சாய்ந்து நின்று கொண்டு  உன்னுடைய அமர, அழிவில்லா, முடிவில்லா  இசையை நீயே  கேட்டு மகிழ விருப்பமா?    

ஐயா,  மாய கிருஷ்ணரே,   இந்த  உலகம் இருக்கிறதே அது என்ன செய்கிறது  பார்த்தீரா?  வார்த்தைகளைப்  பின்னி   ஜோடித்து என் மனதை இயக்குகிறது.  அந்த  வார்த்தைகளின் கோர்வைக்கு  நீங்கள்   தானே   இசை அமைப்பாளர் .   அதில்  உமக்குப்   பிரத்யேக சந்தோஷம் உண்டு  என்பதும்  எனக்கும் தெரியும்.

 கிருஷ்ணா,  எனக்கு நன்றாக தெரியுமாடா,    நீ  உன்னை  முழு கலப்பற்ற அன்புடன்  எனக்கு  தந்து என்னை  இனிப்பாக்கி  அந்த  இனிப்பை  என்னில்  அனுபவித்து மகிழ்பவன். அதுவும் நான் அறிந்த உண்மை தான்.  நன்றி கிருஷ்ணா உனக்கு. 

 

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...