ஆதி சங்கரர் - நங்கநல்லூர் J K SIVAN
சுப்ரமண்ய புஜங்கம்
2. சங்கரர் கண்ட செந்தூரான்...
சுப்ரமண்ய புஜங்கம் நிறைய பக்தர்களைக் கவர்கிறது என அறியும்போது ஆனந்தம் என்னைக் காற்றில் பறக்க வைக்கிறது. புஜங்கம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
புஜங்கம்' என்றால் 'தோளால் நகர்ந்து செல்லும் பாம்பு' என்று பொருள். இச்சொல் வடமொழியில் உள்ள ஒருவகை யாப்பைக் குறிக்கும். இப்புஜங்கக் கவியுள் அமைந்து கிடக்கும் சொற்கோவை பாம்பொன்று வளைந்து வளைந்து செல்லுவது போல் இருப்பதால் இத்தகைய கவிக்குப் புஜங்கம் எனப் பெயருண்டாயிற்று.
பாம்புக்கு தோளும் இல்லை,காலும் இல்லை, விலா எலும்பு சதைகளால் ஊர்ந்து வளைந்து செல்கிறது. வளைந்து செல்வதால் வேகம் கிடைக்கிறது. ஏற்கனவே சொன்னேன். புஜங்கம் வடமொழியில் உள்ள ஒருவகை இசை சந்தம் .ஆதி சங்கரரின் சொல் கட்டு இப்புஜங்கச் ஸ்லோகங்களில் பாம்பொன்று வளைந்து வளைந்து செல்வதை நினைவு படுத்தும்.
கோகர்ணேஸ்வரர் கனவில் சொன்னதை நினைவில் கொண்டு திருச்செந்தூர் சென்ற ஆதி சங்கர் தனது சரும நோய் (ஒரு கொடியவனின் மாந்த்ரீகத்தால் உண்டானது) சுப்பிரமணியனை வழிபட்டு உடல் ஆரோக்யம் பெறுகிறார். திருச்செந்தூர் ஷண்முகன் சந்நிதியில் ஆதிசேஷன் முருகன் திருவடிகளில் வழிபாடு செய்தலைக் காண்கிறார். அந்த காட்சியே புஜங்கம் சந்தத்தில் சுப்ரமணிய புஜங்கமாக 33
சுப்பிரமணிய புஜங்கத்திற்கு பல மஹான்கள் பல மொழியில் வியாக்யானம் எழுதியுள்ளார்கள் .ஏதோ நமக்கு தெரிந்த ஒரு சில வார்த்தைகளில் ஷண்முகனை நாமும் இதுவரை 4 ஸ்லோகங்களில் அனுபவித்து மேலும் இனி தொடர்கிறோம்.
5. यथाब्धेस्तरङ्गा लयं यान्ति तुङ्गा-
स्थैवापदः सन्निधौ सेवतां मे ।
इतीवोर्मिपङ्गक्तीर्नृणां दर्शयन्तं
सदा भावये हृत्सरोजे गुहं तम् ॥५॥
yathAbdhes tharangA layam yAnthi thungA, thatthaivA padha sannidhou sevyamAne
itheevormi panktheer nrinAm darshayantham, sadA bhAvaye hrithsaroje guham tham
யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா
ஸ்தைவாபத ஸந்நிதௌ ஸேவதாம் மே
இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்
ஸதா பாவயே ஹுருத்ஸரோஜே குஹம் தம் (5)
அலையும் கடலும் வேறு வேறு அல்ல. அமைதியான கடல் கொந்தளித்து அலையாகி நுரையோடு கரை நோக்கி ஓடிவருகிறது. கரையை மோதிவிட்டு சாதுவாக திரும்பி கடலுக்கு செல்கிறது. அதைக் காட்டி தான் சுப்ரமண்யர், உன்னை நோக்கி ஓடிவரும் பக்தர்களின் மன கொந்தளிப்பை அடக்கி அமைதி பெற்று துன்பங்கள் அகன்று இன்பமாக வாழ வைக்கிறாய். குஹா, ஷண்முகா, அதை உணர்ந்த நானும் உன் திருவடி சரணமென்று உன்னை நாடி ஓடி வருகிறேன்.
6. गिरौ मन्निवासे नरा येऽधिरूढा-
स्तदा पर्वते राजते तेऽधिरूढाः ।
इतीव ब्रुवन् गन्धशैलाधिरूढः
स देवो मुदे मे सदा षण्मुखोऽस्तु ॥६॥
girou mannivAse narA yedhi rUdA :, thadhA parvathe rAjathe thedhirUdA :
itheeva bruvan gandha shailAdhirUdah :, sadevo mudhe me sadA shanmukhostu
கிரௌ மந்நிவாஸே நரா யேஸ்தி ரூடா
ஸ்ததா பர்வதே ராஜதே தேஸ்தி ரூடா
இதீவ ப்ருவன் கந்தசைலாதி ரூடா
ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து (6)
ஷண்முகனுக்கு மலை என்றால் ரொம்ப பிடிக்கும். உயர்ந்தவன் என்பதால் உயரே இருப்பவன். நம்மை உயர்த்துபவன். ஷண்முகா, கந்தமாதன பர்வதத்தின் உச்சியில் நிற்கிறாய். என்ன அர்த்தம் என்று புரிகிறது. என்னை இவ்வளவு உயரத்தில் மலை மீது ஏறி வந்து தரிசிக்கும் பக்தர்களே, அடுத்து இனி நீங்கள் கைலாச மலை ஏறவேண்டிய அவசியமே இல்லை. இந்த சுப்பனைப் பார்த்தாலே போதும் அப்பனை தேடிப் போக வேண்டாம் என்று தானே.
7. महाम्भोधितीरे महापापचोरे
मुनीन्द्रानुकूले सुगन्धाख्यशैले ।
गुहायां वसन्तं स्वभासा लसन्तं
जनार्तिं हरन्तं श्रयामो गुहं तम् ॥७॥
mahAmbodhitheere mahApApachore, muneendrAnukoole sugandhAkhya shaile
guhAyAm vasantham svabhAsA lasantham, janArthim harantham shrayAmo guham tham
மஹாம்போதி தீரே மஹாபாபசோரே
முனீந்த்ரானுகூலே ஸகந்தாக்யசைலே
குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்
ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம்தம் (7)
முனீந்த்ரானுகூலே ஸகந்தாக்யசைலே
குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்
ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம்தம் (7)
திருச்செந்தூர் ஷண்முகா, நீ சுகந்த மலையில் கடல் கரையில் வாழ்பவன். இந்த இருந்த என் இதய குஹையில் வசிக்கும் குஹா, பாபங்கள், துயர், கவலை எல்லாம் தீர்க்கும் ப்ரபோ, ஞான ஒளியே, உன்னைப் போற்றி பாடுகிறேன்.
8. लसत्वर्णगेहे नृणां कामदोहे
सुमस्तोमसंछन्नमाणिक्यमञ्चे ।
समुद्यत्सहस्रार्कतुल्यप्रकाशं
सदा भावये कार्तिकेयं सुरेशम् ॥८॥
lasat swarna gehai nrinAm kAmadohe, sumasthoma sanchanna mANikya manche
samudyath sahasrArka thulyaprakAsham, sadA bhAvaye kArtikeyam suresham
லஸத்ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காமதோஹே
ஸுமஸ்தோம ஸஞ்ச்சன்ன மாணிக்ய மஞ்சே
ஸமுத்யஸ் ஸ்ஹஸ்ரார்க துல்ய ப்ரகாசம்
ஸதாபாவயே கார்த்திகேயம் சுரேசம்
அடாடா என்ன அழகு. சுப்ரமண்யா , உன்னுடைய பொன்னிற அறையில் மரகத, மாணிக்க கட்டிலில் எண்ணற்ற சுகந்த மலர்கள் கமகமவென மணக்க ஆயிரம் சூர்யர்களின் பிரகாசத்தை விட ஒளி மிகுந்தவனாக, நீ காட்சி தருகிறாய். ஒவ்வொரு பக்தனின் மனத்திலும், இதயத்திலும் எழுகிற நல் விருப்பங்களுக்கு நீ தான் தீர்வு, விடை, தேவ சேனாபதே, லோகநாயகன் மகனே, கார்த்திகேயா, உன்னை வணங்கி துதிக்கிறேன்.
9. रणद्धंसके मञ्जुलेऽत्यन्तशोणे
मनोहारिलावण्यपीयूषपूर्णे ।
मनःषट्पदो मे भवत्क्लेशतप्तः
सदा मोदतां स्कन्द ते पादपद्मे ॥९॥
raNat hamsake manjuleth yanthashoNe, manohAri lAvaNya peeyusha poorNe
manash : - shatpadho me bhava klesha taptha :, sadA modathAm skanda te pAda padme
9 ரணத்தம்ஸகே மஞ்சுளேத்யந்த சோணே
மனோஹாரி லாவண்ய பீயூஷபூர்ணே
மனஷ்ஷட்பதோ மே பவக்லேசதப்த
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே (9)
வண்டுக்கு ஒரே வேலை வாசமிகு மலர்களை சுற்றி வட்டமிடுவது. நான் ஒரு வந்து தான். எண்ணற்ற துன்பங்களை, இடையூறுகளை, சுமந்து, உழல்பவன். உன்னை நாடி சுற்றுபவன். உன் சலங்கை ஒலி கலீர் கலீர் என்றும், தண்டை ஒலி சலங் சலங் என்றும் ஆர்ப்பரிக்க, தேன் சொட்டும் நின் தாமரை திருவடிகளை பற்றினேன் இனி என்னை ரக்ஷிப்பது நின் கடமையன்றோ, சுப்ரமணியா.
10, सुवर्णाभदिव्याम्बरैर्भासमानां
क्वणत्किङ्किणीमेखलाशोभमानाम् ।
लसद्धेमपट्टेन विद्योतमानां
कटिं भावये स्कन्द ते दीप्यमानाम् ॥१०॥
suvarnAbha divyAm barodh bhAsa mAnam, kvaNath kinkiNi mekhalA shobha mAnam
lasad dhemapattena vidhyotha mAnam, katim bhAvaye Skanda te deepya mAnam
ஸவர்ணாபதிவ்யாம்பரைர் பாஸமானாம்
க்வணத்கிங்கிணீ மேகலா சோபமானாம்
லஸத்தேம பட்டேன வித்யோதமானாம்
கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம் (10)
சுப்ரமண்யா, உன் இடையில் நீ தரித்த மஞ்சள் பீதாம்பர வஸ்திரம் உன் மாமனை நினைவூட்டுகிறது. அதை இறுக்கி பிடித்து உன் இடுப்பில் நீ அணிந்த ஒட்டியாணம் தங்கமணிகள் கோர்க்கப்பட்டு சப்த ஸ்வரமும் நீ அசையும்போது ஒலிக்கிறதே. அந்த பொன்னிற ஒட்டியாணம் கண் கூசும் அளவுக்கு ஒளி வீசுகிறதே. அழகே உருவான முருகா,உன்னை வணங்குகிறேன்.
தொடரும்
No comments:
Post a Comment