பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
28 திருவானைக்கா விஜயம்
நமது மஹா பெரியவா சரித்திரத்தில் முக்கிய மான ஒரு விஷயம், திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் அம்பாளுக்கு தாடங்க பிரதிஷ்டை பற்றியது. அதற்கு முன்னர் தாடங்கம் என்பது காதில் அணியும் ஆபரணம், ஓலை, அது சாதரணமானது அல்ல, மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீ சக்ரம் என்று புரிந்து கொள்ள ஸ்ரீ சக்ரம் பற்றிய சிறு குறிப்பு தான் இந்த கட்டுரை.
''அம்பாளுக்கு முன்னாலே ஸ்ரீ சக்கரம் பார்த்தியா?''
''ஓ பார்த்தேனே. ரொம்ப அழகா பெரிசா கோலம் போட்டிருக்கிறதே. ''
நமக்கு இவ்வளவு தான் தெரியும் என்றால் நாம் ஒன்றுமே அறியாதவர்கள்.
நவசக்ரம் , ஸ்ரீ சக்ரம் என்பது 64 கோடி பரிகார தேவதைகள் (யோகினிகள்) , வாசம் செய்வது. அவர்கள் அத்தனைபேரும் சக்தி பெறுவது லலிதா பரமேஸ்வரி இடமிருந்து. தாந்த்ரீக உபாசனையில் இது முக்கியம். பிரபஞ்சம் உருவானது மட்டுமல்ல மனோதத்துவம் அடங்கிய விஷயம். நமது உடலில் ஆறு சக்ரங்கள் இருக்கிறது தெரியுமா? 64 என்பது ஷஷ்டி (6) சதுர் (4) உள்ளடக்கியது. இப்படி யோகினிகளால் வழிபடப்படும் சக்தி ஸ்வரூபிணியை சக்ரவடிவில் அமைத்தவர் ஆதி சங்கர பகவத் பாதாள் .
ஸ்ரீசக்கரம் வெறும் கோடுகள் , கோலம் இல்லை. ரொம்ப உயர்ந்த நமக்கு புரியாத அக்ஷர கணக்கு, சேஷாத்திரக் கணக்கு, விஞ்ஞான அறிவு பூராவும் அறிந்தவர்கள் மட்டுமே ஸ்ரீ சக்ரம் வரைய முடியும். அப்படி சரியாக வரைந்தால் தான் பலன் கை மேலே.
திருவானைக்காவல் அம்பாள் அகிலாண்டே சுவரி, காமாக்ஷி உக்ரமாக இருந்தாள் . எப்படி அவளை சாந்தமடைய செய்வது? ஸ்ரீ சக்கரம் ஒன்று தான் வழி.
ஸ்ரீசக்ரத்தில் 9 கட்டுகள். நவ ஆவரணங்கள் . ஒன்பது சுற்றுகள். நம் கண்ணுக்கு சாதாரண கோடுகள், முக்கோணங்கள் மாதிரி தெரியும். . அடேயப்பா இதில் தான் சர்வ சக்தியும் அடக்கம். நடுவில் தெரியும் முக்கோண மத்தியில் தான் ஸ்ரீ சக்ரராஜ சிம்ஹாசனி உறைகிறாள். பிந்து என்கிற புள்ளி. ஓம் என்கிற சப்தத்துக்கு உருவம் உண்டு. அது ஸ்ரீ சக்ரமானது. மனிதன் புலனடக்கி ஆத்ம ஸ்வரூபமாக காண்பது தான் ஸ்ரீசக்ர தத்வம். ஸ்ரீ சக்ர ராஜம்.
ஸ்ரீ சக்ரத்தை பார்த்தால் கீழ் நோக்கி 5 த்ரிகோணம், மேல் நோக்கி 4 முக்கோணம், இதையே சிவாத்மகம் என்கிறோம். 64 கோடி யோகினிகள் தேவதைகள் தவிர 51 கணேசர் கள், 9 கிரகங்கள், அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்கள், 7 யோகினிகள், 12 ராசிகள், 51 பீட தேவதைகள் என்று 157 தேவதைகளின் ரூபமாக அம்பிகை ஸ்ரீசக்கரத்தில் இருக்கி றாள் என்றால் எவ்வளவு சொல்லமுடியாத சக்தி கொண்டவள். அவளை நாம் பக்தியோடு சக்ர ஸ்வரூபமாக , மஹா மேருவாக, வழிபடுகிறோம் என்றால் எவ்வளவு ஸ்ரத்தையாக இருக்கவேண்டும்.
திருவேற்காட்டில் கரு மாரியம்மன், மாங்காடு காமாக்ஷி தென் குன்றத்தூர் காத்யாயனி அம்மன் ஆகிய மூவரையும் பவுர்ணமி தினத்தன்று ஒரே நாளில் தரிசனம் செய்வது தான் திரிசக்கர தரிசனம்.
ஆடி பவுர்ணமியன்று இந்த தரிசனம் நிறைய பக்தர்களால் மேற்கொள்ளப்படுகிறது.
திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியின் காதுகளில் தாடங்க வடிவில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்து அம்பாளை சாந்தநாயகி யாக்கியவர் ஆதி சங்கரர்.
மாங்காட்டுக்கு ஆதிசங்கரர் வந்திருக்கிறார். தனது கையாலேயே அர்த்த மேருவை பிரதிஷ்டை செய்தார். அதில் அஷ்ட கந்தங்கள் எனப்படும் சந்தனம். அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கோரோஜனை , சிவாஜித், ஜடாமாஞ்சில், கச்சோலம் எனும் எட்டு விதமான சுகந்தமான பொருள்கள் அடக்கம். . ஆதிசங்கரர் இன்னொரு முக்கிய சென்னையி லுள்ள அம்பாள் கோவிலுக்கும் வந்து சக்ரப்ரதிஷ்டை செய்தார். அது தான் தம்பு செட்டித்தெரு காளிகாம்பாள் கோவில். குபேரன் வழிபட்ட தலம். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்தமேரு சக்கரம் இன்றும் பார்க்கலாம். The picture of Akilandeswari drawn by the immortal artist SILPI, is attached
CONTINUED
No comments:
Post a Comment