Sunday, June 6, 2021

BILVASHTKAM

 




ஆதி சங்கரர்  -    நங்கநல்லூர்  J K  SIVAN 

பில்வாஷ்டகம்.

நம் மூதாதையர்  எதற்கு நமக்கு  துளசி  வில்வ  இலைகளை புனிதமானது  விஷ்ணு, சிவனுக்கு அர்ச்சனை செய்ய ஏற்றது, அதை பிரசாதமாக  சிறிது தினமும் இரு வேளைகளிலும்  கோவிலுக்கு சென்று  உட்கொள்ளவேண்டும் என்று வைத்தார்கள்?   ஆமாம்,   அவற்றின் மூலிகைத்தன்மை யை நன்றாக அறிந்தவர்கள் அவர்கள். ஆகவே தான் பக்தியை அதில் புகுத்தி  நல்ல வழி  காட்டினார்கள்.


இப்போது கொரோனா சமயத்தில் பாய் பாயாக படத்தோடு துளசி இலையை எப்படியெல்லாம் சாப்பிடவேண்டும் என்று சொல்கிறார்கள்.  நமக்கு இப்போதாவது புரிந்தால் சரி. வில்வமும்  அப்படியே  மிகச் சிறப்பு வாய்ந்தது.  என் எதிர் வீட்டில்  வில்வ மரம். அதன் பழங்களை  கொடுப்பார்கள். மிகவும் அற்புதமான பழம் அது. அதன் சக்தி அதிசயமானது.

வில்வ  இலையில் மூன்று தளங்களாக இருப்பது விசேஷம்.  அதை சிவனுக்கு அர்ச்சனை செயது முக்தி அடைந்தவர்களை பற்றி நிறைய  புராண நூல்கள் சொல்கிறது.   ஆதி சங்கரர்  ஒரு எட்டு ஸ்லோகமாக   அஷ்டகமாகி,   வில்வத்தைப் பற்றி சொல்கிறார். வில்வாஷ்டகம் கேட்டிருப்போம். அதன் அர்த்தமும் தெரிந்து கொள்வது நல்லது தானே.   படியுங்கள்:  

 त्रिदलं त्रिगुणाकारं त्रिनॆत्रं च त्रियायुधं
त्रिजन्म पापसंहारम् ऎकबिल्वं शिवार्पणं

Tridalam trigunakaram trinetram cha triyayudham
Trijanmapapasamharam ekabilvam shivarpanam

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் ஸிவார்பணம்.

பரமேஸ்வரா, உனக்கு  ஒரே ஒரு வில்வ தளத்தை அர்ப்பணிக்கிறேன், அது மூன்று பாகமாக உள்ளது   எதைக்  குறிக்கிறது என்று யோசித்தேன். உடனே விடை கிடைத்து விட்டது. மனிதனை ஆட்டுவிக்கும் மூன்று குணங்கள், சத்வ, ரஜோ, தமோ குணங்கள்  அவை. உன்னுடைய மூன்று நேத்ரங்கள் போல்,   உன்னுடைய  திரி சூலம் போல,   என் கர்மவினைகளை, பாபங்களை மூன்று பிறவியிலும் நான் செய்ததை  அழிப்பவை .

त्रिशाखैः बिल्वपत्रैश्च अच्चिद्रैः कॊमलैः शुभैः
तवपूजां करिष्यामि ऎकबिल्वं शिवार्पणं

Trishakhaih bilvapatraishcha hyachchidraih komalaih shubhaih
Tavavapujam karishhyami ekabilvam shivarpanam

த்ரிஸாகைர் பில்வ பத்ரைஸ்ச அர்ச்சித்ரை: கோமலை ஸுபை:
தவ பூஜாம் கரிஷ்யாமி ஏக பில்வம் ஸிவார்பணம்.

இந்த  ஒரு வில்வ தளத்தை பாருங்கள், எவ்வளவு அழகாக  அளவோடு  மூன்று பிரிவுகளாக ஒரு வித  துவாரமும், துளையும், இன்றி  ஒன்றாக இருக்கிறது.  முத்தொழில் புரியும்  ப்ரம்மா விஷ்ணு மகேஸ்வரன் மூவரும் ஒன்றே என்கிறமாதிரி. இந்த ஒரு தளத்தை உனக்கு  அர்ப்பணிக்கிறேன் சர்வேசா,  சிவா.

कॊटि कन्या महादानं तिलपर्वत कॊटयः
काञ्चनं क्षीलदानॆन ऎकबिल्वं शिवार्पणं

Koti kanya maha danam tila parvata kotayah
Kanchanam sheela danena ekabilvam shivarpanam

கோடிகன்யாமஹாதானம் கில பர்வத – கோடய:
காஞ்சனம் ஸீலதாநேந ஏக பில்வம் ஸிவார்பணம்.

ஒரே ஒரு  வில்வதளத்தை சிவனுக்கு  அர்ச்சனை செய்வது எதற்கு சமம் என்றால்,  கோடி கன்னிப்பெண்களுக்கு கல்யாணம் செய்து கன்னிகா தானம் செய்வதற்கும்,  ஒரு மலையளவு எள்ளு போன்றதானியங்களை தானம் செய்வதற்கும்,  நிறைய  தங்கத்தை  வாரி தானமாக வழங்குவதாலும்  கிடைக்கும்  பலனை விட  அதிகமாக  தருவது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.


काशीक्षॆत्र निवासं च कालभैरव दर्शनं
प्रयागॆ माधवं दृष्ट्वा ऎकबिल्वं शिवार्पणं

Kashikshetranivasam cha kalabhairavadarshanam
Prayagamadhavam druishtva ekabilvam shivarpanam

காஸிஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்ஸனம்
ப்ரயாகே மாதவம் த்ருஷ்ட்வா ஏக பில்வம் ஸிவார்பணம்.

பரமேஸ்வரா  இந்தா என்று  ஒரு வில்வ இலையை  அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன் இன்னும் என்ன தெரியுமா,  காசி க்ஷேத்ரத்தில்  பலகாலம் வசித்து  தினமும் காசி விஸ்வநாதனை தரிசிப்பது,  காலபைரவனை வணங்குவது பிரயாகையில்  மாதவன்  ஆலயத்திற்கு சென்று நமஸ்கரிப்பது போன்றவையால் கிடைக்கும் பலனை விட சிறந்தது  ஒரே ஒரு வில்வ இலை  அர்ச்சனையால்  கிடைப்பது.


इन्दुवारॆ व्रतं स्थित्वा निराहारॊ महॆश्वराः
नक्तं हौष्यामि दॆवॆश ऎकबिल्वं शिवार्पणं

Induvare vratam sthitwa niraharo maheshwara
Naktam haoushyami devecha eka bilvam shivarpanam  

இந்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஸ்வர:
நக்தம் கௌஷ்யாமி தேவேஸ ஏக பில்வம் ஸிவார்பணம்.

சோமவார விரதம் என்பார்கள்,  திங்கட்கிழமை ஜலம் கூட பருகாமல்  உபவாச விரதம் இருந்து  பரமேஸ்வரனுக்கு  பூஜை பண்ணினால் கிடைக்கும் பலனை விட கூடுதலாக  எளிதில் பரமேஸ்வரனுக்கு   ஒரே ஒரு  வில்வ இலையை அர்ப்பணிப்பதால்  பெறலாம்  என்கிறார்  ஆதி சங்கரர்.

மீதியை அடுத்த பதிவில் அறிவோம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...