கீதாஞ்சலி - நங்கநல்லூர் J K SIVAN --
தாகூர்.
41 காத்திருந்து கண் பூத்தது
41. Where dost thou stand behind them all, my lover, hiding thyself in the shadows?
They push thee and pass thee by on the dusty road, taking thee for naught.
I wait here weary hours spreading my offerings for thee,
while passers-by come and take my flowers, one by one,
and my basket is nearly empty.
The morning time is past, and the noon.
In the shade of evening my eyes are drowsy with sleep.
Men going home glance at me and smile and fill me with shame.
I sit like a beggar maid, drawing my skirt over my face, and
when they ask me, what it is I want, I drop my eyes and answer them not.
Oh, how, indeed, could I tell them that for thee I wait,
and that thou hast promised to come. How could I utter for shame
that I keep for my dowry this poverty.
Ah, I hug this pride in the secret of my heart.
I sit on the grass and gaze upon the sky and dream of the sudden splendour of thy coming--
-all the lights ablaze, golden pennons flying over thy car, and they at the roadside standing agape,
when they see thee come down from thy seat to raise me from the dust,
and set at thy side this ragged beggar girl a-tremble with shame and pride,
like a creeper in a summer breeze.
But time glides on and still no sound of the wheels of thy chariot.
Many a procession passes by with noise and shouts and glamour of glory.
Is it only thou who wouldst stand in the shadow silent and behind them all?
And only I who would wait and weep and wear out my heart in vain longing?
என் உள்ளங்கவர் கள்வா, எங்கே போனாய் ? ஏன் எதற்காக எல்லோருக்கும் பின்னால் சென்று எங்கோ இருளில் நின்று கொண்டு ஒதுங்கி, ஓரமாக நிற்கிறாய்? எல்லோரும் ஏதோ அவசரத்தில் உன்னை பிடித்து தள்ளிவிட்டு உன்னை தரையில் புழுதியில் விழ வைத்து விட்டு உன்னைப்பற்றி துளியும் சிந்தனை இன்றி, எதற்கு எங்கோ அவசரமாக செல்கிறார்கள்? ஒருவருக்கும் நீ லக்ஷியமில்லையா? எல்லோரும் அப்படி இருந்தாலும் நான் அப்படியில்லையே.
என்னைப்பார். நான் உன்னையே வேண்டி மணிக்கணக்காக கால் கடுக்க விழி இமைக்காமல் உன்னையே நினைத்து, நீ வரும் வழி பார்த்து காத்திருக்கிறேன். உன்னால் எனக்கு எத்தனை பெருமை தெரியுமா? எத்தனையோ பேர் என்னிடம் பூ வாங்கி செல்கிறார்கள். என் கையில் உனக்கு அளிக்கவேண்டும் என என்னாலியன்ற உனக்கு பிடித்த புஷ்பங்கள் பறித்து, வாங்கி, அடுக்கி கூடை நிறைய வைத்திருக்கிறேன். வா, வந்து பெற்றுக் கொள், ஒன்று ஒன்றாக எடுத்துக் கொண்டு விடு. எல்லாம் உனக்கே கூடை காலியாகட்டும். வருவோர் போவோர் எல்லாம் என் முன்னே நின்று ஒவ்வொரு பூவாக எடுத்துச் செல்கிறார்களே. நீ எங்கே காணோம்? உனக்காக அல்லவோ இதெல்லாம்!

காலையில் வந்தேன், சூரியன் உச்சிக்கு போய் பகல் வந்தது,வெயில் குறைந்து மாலை, இனி இருள் வந்துவிடும். காத்திருந்து ரொம்ப களைத்துப் போய்விட்டேன். தூக்கம் தூக்கமாக வருகிறது. காலையில் என்னை கடந்து சென்றவர்கள் மாலையில் வீடு திரும்பும்போது என்னைப்பார்த்து ஒரு நையாண்டி சிரிப்பு. தலையாட்டல். உனக்காக காத்திருக்கும் ஏமாந்த சோணகிரி என்பதாலா? நிறையபேர் நின்று ''எதற்காக உட்கார்ந்து இருக்கிறாய் இவ்வளவு நேரமாக, என்ன வேண்டும் உனக்கு ?'' என்று கேட்கிறார்கள். கண்களை தாழ்த்தி கீழே பார்த்தவாறு பேசாமல் ''ஒன்றுமில்லை'' என்று தலையாட்டத்தான் முடிகிறது.
உன்னைத்தவிர எல்லோரும் என் கண்ணில் படுகிறார்கள் கிருஷ்ணா. எங்கே அத்தனை பேர்களுக்கும் பின்னால் நீ எங்கோ ஒளிந்து மறைந்து நின்று கொண்டிருக்கிறாய்? நீ என்ன நிழலா? எவ்வளவு மக்கள் வருகிறார்கள் போகிறார்கள். உன்னை ஒரு பொருட்டாகவே எவரும் கருதவில்லையே. எவ்வளவு மணியாக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். என் எதிரே பார்த்தாயா எத்தனை பொருட்கள் உனக்கு பிடிக்குமே என்று பரப்பி வைத்திருக்கிறேன். நிறைய பூக்கள் மலையாக குவித்து வைத்திருக்கிறேன். வருவோர் போவோர் ஒவ்வொன்று எடுத்துப்போகிறார்கள். நான் தடுக்கவில்லை. போகட்டுமே. என் கூடைகள் காலி.
எல்லோரும் என்னை வேடிக்கை பார்க்கிறார்கள். பைத்தியம் என சொல்லி சிரிக்கிறார்கள். எனக்கு வெட்கம் பிடுங்கி தின்கிறது. நான் பிச்சைக்காரப் பெண் போல அனாதையாக என் பாவாடை நுனியால், கிழிந்த முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.

''ஏன் பெண்ணே இப்படி சோகமாக இருக்கிறாய்? என்ன குறை உனக்கு? என்று சிலர் கேட்டார்கள். நான் தலையை குனிந்து கொண்டேன். என்ன பதில் சொல்ல முடியும்???
'' நான் என் கிருஷ்ணனுக்காக காத்திருக்கிறேன் என்றா அவர்களிடம் சொல்லமுடியும்? என் கிருஷ்ணன் வருவதாக சொன்னான் வருவான்... என்றா சொல்வேன். உனக்கு கொடுக்க என்னிடம் இருக்கும் ஸ்த்ரீதனம் என்ன தெரியுமா... என் ஏழ்மை, வறுமை, இயலாமை இது தான் கிருஷ்ணா....
''கண்ணனைக் காணேன் ,இன்னும் வரக் காணேனே. வரேன் என்று சொல்லி வார்த்தை தவறிவிட்டான் '' என்று பாடட்டுமா.. வேறு எப்படி சொல்வேன்?
இதோ இந்த புல் தரையில் அமர்ந்து வானத்தை பார்த்தவாறு நீ வருவாய் என கனவு காண்கிறேன். பொன் போல் ஒளியோடு, தலையில் இறகோடு, உன் ரதம் அழகாக பெரிய சிறகு விரித்து பறந்து வருவது போல் , நீ வரும் அந்த அழகை வாய் பிளந்து எல்லோரும் பார்ப்பது போல், தேரிலிருந்து ஜம்மென்று கம்பீரமாக இறங்கி என்னை நோக்கி நீ வருவது போல், இந்த புழுதியில் நடந்து வந்து இந்த ஏழைப் பிச்சைக்காரியை, என்னை, அலாக்காக தூக்கிக்கொண்டு உன் அருகில் தேரில் அமர்த்திக்கொண்டு..... நான் நாணத்தால் நடுங்க வியர்க்க, அதே சமயம் பெருமிதம் பெற, கோடைக்கால காற்றில் ஆடும் கொடியாக......''.
என் மனம் கற்பனையில் மகிழ, நேரம் தான் பறக்கிறது. உன் தேரல்ல.. உன் தேர் சக்கர ஓசை இன்னும் கேட்கவில்லையே. தெருவில் எத்தனை வாகனங்களின் சப்தம். இழுத்துச் செல்லும் மிருகங்கள், மனிதர்களின் ஓசை... கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள் எத்தனை பெருமையோடு, சந்தோஷத்தோடு..... நீ எங்கே?? அத்தனைக்கும் பின்னால் எங்கே யோவா? உனக்காக நான் மட்டும் தான் அழுதுகொண்டு காத்திருக்கிறேனா, இதயம் வெடிக்க, கண்களில் ஏமாற்ற கண்ணீரோடு?? எல்லாம் வீணா? சொல் கிருஷ்ணா?.

No comments:
Post a Comment