Saturday, April 24, 2021

CHANAKYA

 சாணக்கியன்.    --    நங்கநல்லூர்  J K  SIVAN --


சகலகலா வல்லவன் கௌடில்யன் சொற்கள்.
 
यथा चतुर्भिः कनकं परीक्ष्यते
निघर्षणच्छेदनतापताडनैः।
तथा चतुर्भिः पुरुषः परीक्ष्यते
त्यागेन शीलेन गुणेन कर्मणा॥ ०५-०२

yathā caturbhiḥ kanakaṃ parīkṣyate
nigharṣaṇacchedanatāpatāḍanaiḥ।
tathā caturbhiḥ puruṣaḥ parīkṣyate
tyāgena śīlena guṇena karmaṇā॥ 05-02


தங்கத்தை  ஒளிரச்  செய்ய  நான்கு வழிகள்  உண்டு.  அதை நன்றாக  தேய்க்க வேண்டும், துண்டு துண்டாக வெட்டவேண்டும், நெருப்பில்  காய்ச்ச வேண்டும்,  அடிக்கவேண்டும்...  இப்படி எல்லாம்  தங்கம்  சித்ரவதைப் பட்டு தான் மெருகேறி, விலையுயர்ந்த  ஆபரணமாக  ஏர் கண்டிஷன் அறையில் கண்ணாடி  பெட்டகத்தில்  மெத்து மெத்தென்று  வெல்வெட்டில்  உட்காருகிறது.   ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் முன்னேற, பிறரால் போற்றத்தக்கவனாக  வேண்டுமானால்,  அவன் குணம்,  நடத்தை, தியாகம், செயல்கள் ஆகிய நான்கும் தான்   அவனை ஸ்புடம் போட்டு  பூரணமனிதனாக்குகிறது. 

दारिद्र्यनाशनं दानं शीलं दुर्गतिनाशनम्।
अज्ञाननाशिनी प्रज्ञा भावना भयनाशिनी॥ ०५-११
dāridryanāśanaṃ dānaṃ śīlaṃ durgatināśanam।
ajñānanāśinī prajñā bhāvanā bhayanāśinī॥ 05-11

வறுமை  அகல வேண்டுமானால்  தான தர்மம் அவசியம்.  துன்பம்  அகல வேண்டுமானால்  நன்னடத்தை அவசியம் ,  அறியாமை விலக  பகுத்தறியவேண்டும்.  பயம் அகல வேண்டுமானால்  தைர்யம் தன்னம்பிக்கை அவசியம் 

जन्ममृत्यू हि यात्येको भुनक्त्येकः शुभाशुभम्।
नरकेषु पतत्येक एको याति परां गतिम्॥ ०५-१३

janmamṛtyū hi yātyeko bhunaktyekaḥ śubhāśubham।
narakeṣu patatyekaeko yāti parāṃ gatim॥ 05-13

ஒவ்வொரு மனிதனும் தனியாகவே  இந்த  உலகில் அறிமுகமாகிறான்.   இந்த உலகை விட்டு விலகும்போதும் அவ்வாறே, அவன் எவ்வளவு பெரிய  மக்கள் தலைவனாக இருந்தபோதும், தனியே தான்  செல்லவேண்டும். என்பது நியதி.   அவனது   பூர்வ ஜென்ம கர்மாக்கள் அவனை அவன் வாழ்நாளில் அவனை   நல்லவனாகவோ கெட்டவனாகவோ   அவன் செயல்களில் காட்டுகிறது.   நரகமோ  ஸ்வர்க்கமோ  எங்கு செல்லவேண்டுமானால் அவன் தனித்தே தான் போகவேண்டும்.  
 
सत्येन धार्यते पृथ्वी सत्येन तपते रविः।
सत्येन वाति वायुश्च सर्वं सत्ये प्रतिष्ठितम्॥ ०५-१९

satyena dhāryate pṛthvī satyena tapate raviḥ।
satyena vāti vāyuśca sarvaṃ satye pratiṣṭhitam॥ 05-19

நம்மையெல்லாம்  தாங்கும் இந்த பூமி ஏதோ ஒரு சத்தியத்திற்கு கட்டுப்பட்டுள்ளது.   அந்த சத்யம் தனது சக்தியால்  சூரியனை ஒவ்வொரு  நாளும்  நேரம் தவறாமல் தனது பணியை, உலகை ஒளிபெற,   செய்விக்கிறது.  காற்றை  வீசச் செய்கிறது.  எல்லாமே  அந்த சத்தியத்தின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது. நம்மையும் சேர்த்து தான் சொல்கிறேன். 
कालः पचति भूतानि कालः संहरते प्रजाः।
कालः सुप्तेषु जागर्ति कालो हि दुरतिक्रमः॥ ०६-०७

kālaḥ pacati bhūtāni kālaḥ saṃharate prajāḥ।
kālaḥ supteṣu jāgarti kālo hi duratikramaḥ॥ 06-07

காலம்  தான் உலகத்தின் சகல ஜீவராசிகளையும்  உயிருடன் இயக்குகிறது.  அதுவே  முடிவைத் தருகிறது.  எல்லாம்  உறங்கும் வேளையிலும்  காலம்  உறங்காமல் விழித்துள்ளது.  காலம் வெல்ல முடியாதது. எவராலும்  கட்டுப்படுத்த முடியாத ஒன்று. அதுவும் மேலே சொன்ன ஒரு சத்தியத்துக்கு உட்பட்டு செயல்படுகிறது.  
சாணக்கியன் சொற்கள் மேலும் கேட்போம்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...