வேமனா - நங்கநல்லூர் J K SIVAN
தேனான வேமனா- 1
ஒரு தேசத்தின் முன்னேற்றத்துக்கு உயிர் நாடி அதன் கிராமங்கள். சில வசதிகளுக்காக ஏற்பட்டவை பட்டினங்கள். அங்கே வேலை, உத்யோகம், நீதி மன்றம், வங்கிகள், பெரிய பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் எல்லாம் ஒவ்வொன்றாக தோன்றின. இதெல்லாம் வெள்ளைக்காரர்கள் வந்த பிறகு வந்த மாற்ற ங்கள். அதற்கு முன்னர் நாடு முழுதுமே சில்லறை, நடுத்தர பெரிய க்ராமங்களாகத்தான் திகழ்ந்தன. வேண்டிய படிப்பு அங்கேயே கிடைத்தது. முக்கிய உத்யோகம் விளைச்சல், பயிர்த்தொழில், விவசாயம். அதுவே சுபிக்ஷத் தின் அறிகுறி. மற்றது அதற்கு மேல் தேவைப்பட்ட சௌகர்யங்கள். சோம்பேறித் தனத்தை வளர்த்தவை.
ஒவ்வொரு வீட்டிலும் கிராமத்தில் பெரிய நெல் குதிர்கள், களஞ்சியங்கள் இருக்கும். அதில் தான் அறுவடை, சாகுபடியான நெல்லை சேமித்து வருஷமுழுதும் உணவு எல்லோருக்கும் தாராள மாக கிடைத்தது. மின்சாரம் தேவைப்பட வில்லை. அதனால் நெல்லை உரலில் இடித்து உமி நீக்கி அரிசியாக முறத்தில் புடைத்து சமைத்தார்கள். கைக்குத்தல் அரிசி உடலுக்கு நல்லது என இன்று யாரோ ஒரு டாக்டர் சொல்லி நாம் அறிகிறோம்.
நமது தமிழில் தவிர, பிறமொழிகளில் உள்ள அற்புத படைப்புகளை நான் நெல் களஞ்சியங் களாக அள்ள அள்ள குறையாதவைகளாகக் கருதி இந்த கட்டுரை எழுதுகிறேன். இன்று ஒரு கைப்பிடி அதில் எடுத்து கொடுக்கிறேன். நமது இலக்கிய களஞ்சியத்தில் தமிழ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சமஸ்க்ரிதம், ஆங்கிலம் எல்லாமே இருக்கும். எல்லாமே மணிகள். ஆகவே எப்போதாவது ஒரு கைப்பிடி எடுத்து அனுபவிக்கும் போது அது தமிழ் மணியாக த்தான் இருக்க வேண்டும் என்பதே இல்லை. ஆப்ரிக்க மொழிகளில் மணிகள் கிடைத்தாலும் நமது களஞ்சியத்தில் இடம் பெறும். இன்று தெலுங்கு சிக்கியது.
என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன். ஒவ்வொரு புது வருஷம் வந்தாலும் நாம் ஏதாவது ஒரு தீர்மானம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். இன்று முதல் நமது வயது ஒரு வருஷம் கூடிவிட்டதே. ஏதாவது செய்ய வேண்டாமா?. இன்று முதல் சாம்பார் சாதம் ரெண்டாவது ரவுண்டு சாப்பிடக் கூடாது. வெளியே போண்டா, மசால் வடையைக் கண்ணால் பார்ப்பதையே கூட விட்டு விட வேண்டும். யார் வீட்டிலாவது காபி கொடுத்தால் இப்போது தானே சாப்பிட்டேன் என்று ஒரு பொய் சொல்லி சாப்பிடாமல் இருக்க வேண்டும்... இது போல் நிறைய பேர் ஏதாவது புதிதாக ஒரு பிரதிஞை எடுத்துக் கொள்வார்கள். இன்றிலி ருந்து மனைவியிடம் அன்பாக இருக்கிறேன் என்று முடிவெடுத்து ரெண்டு நிமிஷம் கூட ஆகி யிருக்காது எலியும் பூனையும் ஒன்றை ஒன்று விரட்டிக் கொண்டிருக்கும்.சிகரெட் பிடிக்க மாட்டேன், சினிமா போக மாட்டேன். காலையில் சீக்கிரம் எழுந்து கோவிலுக்கு போவேன், வாட்சப்பில் தெரிந்து கொண்டபடி மனைவி சமைத்த சமையல் சரியில்லை என்றாலும் முக மலர்ச்சியுடன்உண்டு ''ஆஹா, இதைப் போன்ற அமிர்தம் தேவர்களுக்கு கூட கிடைக்காது'' என்று வாழ்த்த வேண்டும் என்றெல்லாம் நினைப் போம் . இதெல்லாம் சும்மா ஒரு உதாரணம்.. இன்னும் எத்தனை எத்தனையோ....ஆனால் இவையாவும் பிரசவ வைராக்கியம், ஸ்மசான வைராக்கியம் போல் உடனே மறைந்துவிடும் நிலைப்பதில் லை, நிறைவேறுவதில்லை . புது வருஷங்கள் தான் வந்து போகும்.
தெலுங்கு தெரியாவிட்டாலும் அல்பன், அதிகாரம் ... இது மாதிரி கொஞ்சம் தெரிஞ்சாலே போதும். ... கோடிட்ட இடங்களை நிரப்பிக் கொள்ளலாம்.
இன்று நான் சொல்லப்போவது வேமனா என்ற தெலுங்கு ஞானியின் சில அற்புத ரெண்டுவரி பாடல்கள் பற்றி. அது பிடித்துவிடும் உங்களுக்கு என்பதால் அடுத்த கட்டுரையில் அந்த வேமனா வைப் பற்றி சில விபரங்கள் தருகிறேன்.
''அல்பபுத்திவானிகதிகாரமிச்சினதொட்டவாரினெல்லதொலககொட்டு
செப்புதினெடி குக்கசிறகுதீப்பெருகுனா விச்வதாபி ராம வினுரா வேமா !
ஒருஅரசியல்வாதி எனும் அல்பனுக்கு அவன் தரும் பிரியாணிக்கு ஆசைப்பட்டு ஓட்டுபோட்டு அதிகாரம் கொடுத் தால் அவனிடமிருந்து என்ன கிடைக்கும். தன்னைப் போன்றோர்க்கே நிழல் கொடுப்பான். அறிவாளிகள், சிறந்தவர்கள் அனுபவஸ்தர்களை மதிக்காமல் விரட்டி யடிப்பான். இது எதுபோல தெரியுமா? கரும்பை பக்கத்தில் பார்த்தாலும் அதை ஒதுக்கி விட்டு கிழிந்த செருப்பைக் கண்டதும் சந்தோஷமாக கடித்து மெல்லும் சொறிநாயின் தன்மை போல என்று அறிந்து கொள்ளடா வேமா என்று தனக்குத் தானே சொல்லிக்கொள்வது போல ஒரு தெலுங்கு பாடல்.
அந்த அல்பன் வேறென்னவெல்லாம் செய்வான் என்பதையும்வேமனா சொல்கிறார்:
''அல்ப டைனவானி கை க திக பாக்யமுகலக தொட்டவாரிதிட்டிதொலககொட்டு
அல்ப புத்தி வாடதிகுலனெருகுனா விச்வதாபி ராம வினுரா வேமா !
உயர்ந்த படிப்பு, பொறுப்பு, ஞானம் இல்லாத ஒருஅல்பன் திடீர் பணக்காரனாகி றான். உடனேகர்வம் மண்டைக் கேறி விடுகிறது. சுலபத்தில் அனைவரையும் பகைத்துக் கொள்கிறான். பணத்தினால் எடை போட்டு மிகுந்த அறிவாளிகளையும் ஞானிகளையும் ஏசுவான். அவமதிப்பான் . அவனைப் புகழும் அல்பர்களின் சகவாசமே அவனுக்கு சுகமளிக் கும். விரைவில் அழிவான் என்று அறிந்துகொள்ளடா வேமா.
அலனுபுடக புட்டி நப்புடேக்ஷயமவுனு கலனுகாஞ்சு லக்ஷ்மி கனுடலேது
இலனு போகபாக்யமீதீரேகானுரு விச்வதாபி ராம வினுரா வேமா !
கடலைப்பார்க்கிறோம் .பெரிய அலைகள் ஒன்றன் மேல் ஒன்றாக எகிறி எழும்புகிறது. அவற்றின் மகுடமாக வெள்ளை நுரை. பார்க்கு மிடமெங்கும் தோன்றும் அந்த வெண் ணிற நுரை எங்கே போச்சு? அலை திரும்ப சாதுவாக கடலை நோக்கி ஓடும் முன்பே நுரை காணாமல் போகிறது. கனவில் கார், பங்களா, ப்ளேன் எல்லாம் வாங்குகிறோம். கண் மூடித் தூங்கும் போது கனவு காணும் போது தான் அந்த ஐஸ்வர்யம். கண்ணைத் திறந்தால் பழைய ஏழ்மை நிலை தான். கனவில் கண்ட செல்வம் எங்கே போச்சு? .எனவே தான் கிடைத்த போது செல்வத்தை நாமும் உபயோகித்து மற்றோர்க் கும் அளிப்பது அவசியம். இலையேல் அது நுரை தான், கனவில் வாங்கிய கார் தான் என்று தெரிந்துகொள்ளடா வேமா.
அனகனனக ராக மதி சயிலுச்சுனுண்டு தினக தினகவேமுதீய நுண்டுசாதன முன பனுலு சமக்கூறு தரலோன விச்வதாபி ராம வினுரா வேமா !
பாடு, உரக்க பாடு, பாடிக் கொண்டேஇரு. உனக்கு ராகம் பாடவரும்.கசப்பானவேப்பிலையைக் கூடகொஞ்சம் கொஞ்சமாகவிடாமல் தினமும் சாப்பிட்டுக்கொண்டேவா. பிறகு சாப்பிடஅது பழகிவிடும் மட்டுமல்லஇனிக்கவும்ஆரம்பிக்கும். இதுஎதுக்காக சொல்கிறார்வேமனா தெரியுமா? என்னகஷ்டமானகாரியமாக இருந்தாலும் விடாமல்செய்து வந்தால்அது எளிதாகிவிடும். த்யானம், ஜபம், எல்லாம்இதுபோல் தான்.சாதகம் தான் மனதில் லட்சியமாக இருக்கவேண்டும் என்கிறாரோ?
வேமனா தொடர்வார்
No comments:
Post a Comment