Wednesday, April 21, 2021

ERI KATHTHA RAMAN



     ''ஏரி எந்தநேரமும் உடையும் '' - நங்கநல்லூர்   J K  SIVAN  --



இன்று  ஸ்ரீ ராமநவமி என்பதால் இந்த  சம்பவம் நினைவுக்கு வந்தது.  உண்மையில் நடந்த இது கதை அல்ல. 
புரளி, பீதி,   இதெல்லாம் ஏதாவது  ஒரு  பெரிய  சம்பவம், எதிர்பாராத நிகழ்ச்சி  நடக்கும்போது  போனசாக நமக்கு  கிடைத்து,  நம்மை  கொஞ்சம்  ஆட்டி வைக்கும். நிஜம்போல்  இருக்கும்.  அது பொய்  என்று  சொல்ல முடியாதபடி  அதில்  ஒரு கடுகளவாவது உண்மை  உள்ளே  எங்கோ கலந்திருக்கும். அதை மலையாக நம்மிடம் யாரோ தள்ளும்போது நாம்  தூக்கம் இழக்கிறோம்.  ஏன் உதாரணமாக இப்போது தினமும் ஒரு நாளைக்கு  எத்தனையோ முறை  மாற்றி மாற்றி  அந்த  க  ஜெயிக்கும்,  இல்லை இல்லை  இந்த  க  தான் மீண்டும் ஆட்சி அமைக்கும்... சே சே  கொஞ்சம்  அடுத்தமாதம் முதல் வாரம்  வரை பொறுக்க பொறுமையே இல்லையே. 

நூறு வருஷங்களில் இப்படி சென்னையில்  நடந்ததில்லை.  ஏரியில் வீடு கட்டினதால்,  மரங்களை எல்லாம் வெட்டி  கான்க்ரீட் காடுகளாக  வீட்டு மனைகள், அடுக்கு வீடுகள் என்று கட்டியதால்,  என்றெல்லாம்  காரணம் வந்தாலும்,  செம்பரம்பாக்கம்  ஏரி , ,மதுராந்தகம் ஏரி  உடைந்ததால்  என்றெல்லாம்  அதிர்ச்சிகள்  வந்து  நிலைகுலையச் செய்ததல்லவா?.  செய்திகளில்,  முகநூல்களில், வாட் சப்பில்.


வாட்சப்  ராக்ஷசன்  மிக சக்தி வாய்ந்தவன். எளிதில் எல்லோரையும் கவர்பவன்.  பொய்யானாலும் செய்திகளை முந்தித் தருபவன்.

மதுராந்தகம்  கிராமம்  77   கிமீ  தூரத்தில் சென்னையிலிருந்து ஒதுங்கி இருக்கிறது.  அதன்  ஏரி  உடைப்பு  ஒரு சில  நூறு  ஆண்டுகளுக்கு முன்பு கூட  பிரபலப்பட்ட  விஷயம்.  

 கொட்டும் மழையில், பருவகாலப் பேய்  மழையில்,  ஏரி நிரம்பி, உபரியாக  வெளியேறி அண்டை அசல் கிராமங்களை  எந்த  நேரமும் பசியோடு  விழுங்கிவிடும் என்ற கவலை  அப்போதிருந்த கலெக்டர்-- வெள்ளைக்காரர்  தான்- லஞ்சம் கேட்க தெரியாத காலம், கரெண்ட் இல்லை என்று மக்கள் கத்தாத கும்மிருட்டு காலம். வருஷம் 1884.  மக்கள்  மீது  அக்கறை கொண்ட  ஆட்சியாளர்கள் ஆண்ட காலம். 

 லயனல் பிளேஸ்  என்றும் ப்ரைஸ்  என்றும்  கூட  சொல்கிறார்கள் அவர் பெயரை. அந்த கலெக்டர் தூங்கவில்லை, எப்படி  இந்த  மழையை நிறுத்துவது, எப்படி ஏரியை உடையாமல் பாதுகாத்து  மக்களுக்கு உயிர்பிச்சை அளிப்பது. எப்படி பயிர்களை வயல் வெளிகளை காப்பது. இந்த நேரத்தில்  கிராம அதிகாரி களை கூப்பிட்டு  ஆலோசித்தார்.  இந்த முட்டாள்களுக்கு எப்படி  உருவாகப்போகும் ஆபத்தை விளக்குவது. இவர்கள் என்ன யோசனை சொல்கிறார்கள் கேட்டுத்தான் வைப்போமே  என்று  கலெக்டர் அவர்களோடு பேசினார்.  

எல்லோருக்குமே  மதுராந்தகத்தை  அந்த புராதன கோவில் தெய்வம்  ராமர் மட்டுமே  காக்க முடியும்  என்று  ஒட்டு மொத்தமாக நம்பிக்கை என்று புரிந்தது.  அவர்கள் வேறு  யாரையும்  நம்பவில்லை. என்று தெரிந்தது.  வேறு வழியும் தோன்றவில்லை  யாருக்குமே.

''சரி  நீங்களும்  ராமரை வேண்டிக்கொள்ளுங்கள்,  நானும் உங்கள்  ராமரை  பிரத்யேகமாக  வேண்டிக் கொள்கிறேன்.  இன்றிரவு கொஞ்சம் மழை நின்று,  எப்படியாவது இந்த இக்கட்டில் இருந்து மதுராந்தகம் காக்கப்பட வேண்டும். அவர் அதை செய்யட்டும். நான்ஏதாவது செய்ய வேண்டுமானால் என்ன ஏற்பாடுகள் தேவை என்று சொல்லுங்கள். செய்கிறேன் '' என்றார் கலெக்டர்.

ராமருக்கு  பூஜைகள்  நடந்தது.  மக்கள் ஒருபுறம் வேண்டிக்கொள்ள,  இரவில் மழை  விடாமல் பெய்யவே, கலெக்டர்  இரவில்  இருட்டில், குடை எடுத்துக்கொண்டு ஏரியின்  நிலையைத்  தானே  நேரில் சென்று பார்த்து வரலாம் என்று  கிளம்பினார் .அவர் மனதில் எங்கோ ஒரு மூலையில்  கோவில் இருந்த பக்கம்  பார்வை சென்று 

 ''ஹே  கடவுளே,  எப்படியாவது இந்த ஏரியை காப்பாற்றுங்கள்''  என்ற மானசீக   வேண்டுதல் பிறந்தது. என்ன இது? யார் இது?  

 கும்பிருட்டில்  ஏரிக்கரையில் இருவர் நடமாட்டம் தெரிந்தது.
'ஆஹா  இந்த  ஊரில்  விஷமிகள் கிடையாதே.  என்  ஆட்சியில்  எவனாவது ஏரியை உடைக்க முயற்சித்தால் அவன் தப்ப முடியாதே'' யார்  இந்த நேரத்தில் இங்கே,  என்னதான் செய்கிறார்கள் என்று  பார்ப்போம். கையும் களவுமாக பிடிப்போம் என்று  ஏரியின் கரை மீது ஏறி அருகே சென்று பார்த்தார்.  

அந்த  இருவர்களும்  தங்க நிற மேனி,  உயர்ந்த  ஆஜானுபாகுவாக இருந்தனர்.  அரச குடும்பத்தார்கள் போல் இருக்கிறது. கிரீடம் தலையில் இருக்கிறது. உடலில் மின்னும்  ஆபரணங்கள், இடையில்  பட்டு பீதாம்பர ஆடை.  இருவர் கையிலும்  பெரிய வில்.  ஏரியை கண்காணித்துக் கொண்டு அங்கும் இங்கும் அவர்கள்  இரவெல்லாம்  அது உடைபடாமல் காத்துக்கொண்டிருந்தது தெரிந்தது.கோவிலில் இந்த  உருவத்தைப் பார்த்திருக்கிறோமே!   ஏதோ உள்ளே  ஒரு  வித உணர்ச்சி கொந்தளித்தது. கண்களில் நீர் வழிந்தது. அவர்கள் முகத்தை ஒரு நிமிடமே நேருக்கு நேர்  பார்த்தார்.  அவரை அறியாமல்  கைகள் கூப்பின. மண்டியிட்டு  அமர்ந்து அந்த  கரை மேட்டி
லேயே  வணங்கினார்.

மழையும் ஒருவழியாக நின்றது. ஏரி நீர்  கொஞ்சம் கொஞ்சமாக  பாசனங்களுக்கு  சென்றது. பொழுது விடிந்தது.  மழை பெய்த  சுவடு இல்லாமல்,  ஏரி வழக்கம்போல்  கவலைக்கிடம் அளிக்காமல்  சாதாரணமாக காட்சி அளித்தது.  

கலெக்டர் அசந்து போனார். இயற்கையையே  வெல்லக்கூடிய  சக்தி வாய்ந்த அந்த இருவர் யார்?. கிராம அதிகாரிகள் ஓடிவந்தனர்.  கலக்டருக்கு வந்தனம் செய்தனர். அவர் தான் கண்ட  அந்த  இரு வில்லாளிகளை வர்ணித்தார்
.    கிராமத் தலைவர்களில் முதியவர்  ''ஹே  ராமா, ஹே  லக்ஷ்மணா  என்று  கதறிக்கொண்டு  கலெக்டர் கால்களை கெட்டியாக  பிடித்துக் கொண்டார். தாரை தாரையாக  கண்ணீரால்  அந்த வெள்ளைக் காரர் பாதங்களை கழுவினார்.  எல்லோரும் அப்படியே செய்தார்கள்.  

''எத்தனை  எத்தனை ஜன்மங்கள் தவமிருந்தாலும் கிடைக்காத  தரிசனத்தை எளிதில்பெற்ற மகான் என்று  கலெக்டரை  வாழ்த்தி போற்றி வணங்கினர்.

செப்பனிடாத நிலையில் இருந்த  மதுராந்தகம் கோவிலை  கலெக்டர் உடனே புதுப்பித்து கும்பாபிஷேகம் நடந்தது. தாயாருக்கு சந்நிதி இல்லாமல் இருந்தது.  அப்போது முதல் மதுராந்தகம் கோவில்  கோதண்ட  ராமர்  ஏரி காத்த ராமர் என்ற பெயர் பெற்றார்.   பய பக்தியோடு  கலெக்டர்  தம்பதிகள்   ராமரை  வணங்கி  நன்றியை  தெரிவித்தனர் .

சீதா தேவிக்கு  ஒரு  புது சந்நிதி கலெக்டர்  உத்தரவில்  உருவானது..  அதன் மேல் உத்தரத்தில் இன்றும் ஒரு கல்வெட்டு  காணப் படுகிறது. அங்கு செல்பவர்கள் மறக்காமல் அதை பார்க்கவும்.      “இந்த தர்மம் கும்பினி ஜாகிர் கலெக்டர் லியோனெல் ப்ளேஸ் துரை அவர்களது”

இப்போது  ஆட்சியில் உள்ளவர்கள்  எந்த  கோவிலும்  கட்டவேண்டாம்.   கோவில்கள்,   நிலங்களை இழந்து குறுகி  அகத்தியர் உரு   பெறாமல், கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை  கோவிலுக்காக, அந்தந்த ஊர்  தர்ம காரியங்களுக்காக  பயன் பட ஒத்துழைத்தால்  அதுவே போதும்.  கடவுள் 
பக்தி  மதம் கடந்தது என்பது புரிந்தால் அதுவே போதும்.   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...