ஸூர்தாஸ் - நங்கநல்லூர் J K SIVAN
35 பொழுது புலர்ந்தது....
விழியற்ற ஸூர்தாஸுக்கு வெளி உலகம் பிறவியிலிருந்தே ''அப்படியே'' தான் இருந்தது. மாற்றமே இல்லையே. வெளிச்சம் தெரிந்தால் தானே இருட்டு என்றால் என்ன என்று உணர முடியும். பகல் தெரிந்தால் தானே இருள் எப்படி இருக்கும் என புரியும். அவருக்கு எல்லாமே இருளா ஒளியா? உருவமா அருவமா? அவர் கிருஷ்ணன் என்ற ஒரே வார்த்தை மட்டும் தான் அறிந்தவர். தான் கேட்டவற்றை வைத்துக்கொண்டு மனதில் அவனை எப்படியெல்லாம் மனக் கண்ணால் துய்க்க முடியுமோ அப்படி அனுபவிப்பவர். அவனாகவே வாழ்பவர்.
காதில் எல்லோரும் பொழுது விடிந்தது என்ற சொல்லை உச்சரிக்கும் போது அது உறக்கமின்மை என்று மட்டுமே தெரியும். ஆகவே கிருஷ்ணனை தூங்கியது போதும் கிருஷ்ணா எழுந்திரு. இரவு முடிந்து விட்டதே. படுக்கையை விட்டெழு. இதோ பார்த்தாயா கூட்டத்தை. உன்நண்பர்கள், கோபர்கள் பசுக்களோடு கன்றுகளோடு வாசலில் நிற்கிறார்களே நீ யில்லாமல் அவர்களுக்கு எப்படி பொழுது போகும். யாருக்கு தான் போகும்?
''என்னடா கிருஷ்ணா இன்னுமா தூக்கம்? என்று குரல் கொடுக்கிறார்களே. தாமரை மலர்களை சுற்றி வண்டுகள் கூட்டம் கூட்டமாக வட்டமிடுவது ஏன். அதன் தேனிலும் அழகிலும் மயங்கு வதால் தானே. நீயும் அப்படித்தானே கிருஷ்ணா?
கீச்கீச் சென்று எத்தனை பறவைகள், வண்டுகள் கீதம் ராகம் ராகமாக இசைக்கிறது. தம்புரா போல ஒரே ஆதார சுருதி யில் சில வண்டுகளின் சுநாதம். என்ன உற்சாகம் அவற்றிற்கு. உன் காதில் விழுகிறதா? என் இனிய கண்ணா, என் உயிரின் உயிரே, என் செல்வமே, கோபியர் கொஞ்சும் கோபாலா, ஆஹா எத்தனை ரிஷிகள், முனிவர்கள் , மஹான்கள் உன்னை வாயார ஜெய ஜெய கோவிந்தா கோபாலா என்று வாய்
மணக்க பாடுகி றார்கள். நானும் சேர்ந்து கொள்கிறேன்.
No comments:
Post a Comment