வாழை இலை சாப்பாடு தீர்க்காயுசு. -- நங்கநல்லூர் J K SIVAN
நமக்கு முந்தைய தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிகள் என்பதில் சந்தேகம் எனக்கில்லை. என் சின்ன வயசில் அரையணாவுக்கு கையகல சூடான இட்லி வாழை இழைக் கிழிசலில் வைத்து கெட்டியான தேங்காய் சட்னி இலவச சாம்பாருடன் சாப்பிட்ட்டோம். சூடான சாதமோ, இட்லியோ நன்றாக அலம்பிய வாழையிலை மேல் பட்டவுடன் ஒரு புது மணம் இட்லிக்கு கூடிவிடும். தாளித்துக் கொட்டிய மிளகாய்ப் பழத்தை தூர வைத்துவிட்டு சட்னியோடு பிசைந்து இட்லி சாப்பிட்டவர்கள் அநேகர் 85-90 வரை வாழ்ந்தார்கள்.
ஓட்டலுக்கு சென்று சாப்பிடும் வழக்கம் கிராமங்களில் இல்லை. பெரிய பட்டணங்களில் இருந்தது. ஹோட்டல் என்றால் டேபிள் சாப்பாடு என்று அர்த்தம் இல்லை. கூடம் மாதிரி சுவர் ஓரம் தரையில் உட்கார்ந்து ரெண்டு வரிசை. எதிரும் புதிருமாக. அங்கேயும் முதலில் வாழை ஏடு தான் ஒரு பெரிய பித்தளை டம்ளர் ஜலத்தோடு முதலில் வரும். அப்பறம் தான் சூடான இட்லிகள். பட்டு மிளகாய்பொடி என்பது சிகப்பாக
மிளகாய்த் தூள், வறுத்து கமகம எனும் மணத்தோடு இலையில் வைப்பார். அரைகுறையாக அரைத்தால் தான் ருசி. மாவு மாதிரி பொடியாக அரைக்கும் வழக்கம் இல்லை. ஒருவேளை மிக்சி இல்லாமல் கல்லுரலில் இடிப்பதாலோ, அம்மியில் பொடிப்பதாலோ அப்படி இருந்ததோ என்னவோ. வாசனையாக செக்கு நல்லெண்ணெய் அதன் மேல் தாராளமாக நனைத்து சூடான வெள்ளை வெளேர் இட்லி கொஞ்சம் சிகப்பாக மாறி வாயில் போகும்போது கண்ணில் தண்ணீர் வரும். காரம் அவ்வளவு தேவை சாப்பிடுபவர்களுக்கு. நான்கு இட்லிகளுக்கு மேல் சாப்பிட வயிற்றில் இடம் இருக்காது. ரெண்டணாவுக்கு சுத்தமான கலப்பட மில்லாத ஆகாரம் கிடைத்த காலம். இட்டலி சாப்பிட்ட வாய்க்கு சூடாக அரைகப் டிக்ரீ காப்பி. பீபரி கொட்டை வறுத்து காப்பி அரைக்கும் மெஷினில் கையால் சுற்றி அரைத்து பில்டரில் வடிகட்டி இறக்கிய டிகாஷனில் சூடான பால் கலந்த திக் THICK காபி. ஆவி பறக்கும் மனத்தோடு. சிக்கிரி சேர்க்கமாட்டார்கள்.
அளவு சாப்பாடு வழக்கத்தில் வரவில்லை. கோடம்பாக்கம் ரயில்வே கேட் அருகே உடுப்பி சீதாராம விலாஸில் ஆறு அணாவுக்கு முழு சாப்பாடு. வாசலில் பிராமணாள் ஹோட்டல் என்று பல ஹோட்டல் பலகைகள் காட்டியதை அப்புறம் அழித்து ஹோட்டல் ஆக்கிவிட்டார்கள். பேரும் மாறி விலையும் ஏறிவிட்டது. நாங்கள் சாப்பிடும் காலத்தில் ஒரு தூக்கு எடுத்துக் கொண்டு போவோம். சீதாராமய்யர் சட்டை போட்டுக்கொண் டு பார்த்ததில்லை. '' என்னடா, அப்பா சௌக்கியமா? என்று கேட்டு அரை தூக்கு சாம்பார், ஒரு வாழை இலை யில் நிறைய உருளைக்கிழங்கோ, கத்திரிக்காயோ, சக்கரைவள்ளிக்கிழங்கு கறியோ தருவார். ரசம் ஒரு ஹார்லிக்ஸ் சீசாவில் பாதிக்குமேல். சாதம் தாராளமாக ஒரு பகாசுரன் சாப்பிடும் அளவுக்கு, பத்தணாவுக்கு கிடைத்தது.
பாதி சாப்பாடு ஆறணாக்கு தான் வாங்குவோம். அப்பளம் நெய் எல்லாம் கிடையாது. சாம்பார் ரசம், மோர், கறி , கூட்டு. அவர் கட்டிக்கொடுக்கிற வாழையிலையே மூன்று பேர் சாப்பிட உதவும்.
நான் சொல்ல வந்தது வாழையிலை பற்றி. நண்பர்கள், சொந்தக்காரர்கள், கல்யாணங்கள் எங்கேயும் வாழையிலையில் சாப்பிட்டவர்கள். அப்புறம் தட்டு பழக்கம் வந்த பிறகும், தட்டின் மேல் வாழை இலை கொஞ்சநாள் முழங்கியது.
டிபன், சாப்பாடு எதுவாக இருந்தாலும் நமது கலாசாரப்படி வாழை இலையில் சாப்பிடுவதுதான் வழக்கம் அப்போது. அது தனி ருசி. தலைவாழை இலை போட்டு விருந்து என்றாலே தனி மரியாதை, மகிழ்ச்சி. தாட் இலை என்று சொல்வோம். தாட் என்றால் என்ன அர்த்தம் என்று இதுவரை யோசிக்கவில்லை. தெரியாது. வாழையிலை மறந்து போனபிறகு அதை தெரிந்து கொண்டு என்ன பயன் என்று விட்டுவிட்டேன்.

வெள்ளைக்காரன் வாழை இலை தெரியாதவன் மட்டுமல்ல வாழவே தெரியாதவன்.. சல்பர்டை ஆக்சைடு, பாலிவினைல் குளோரைடு, டையாக்சின், எத்திலின், பாலிஸ்டிரின் போன்ற புற்று நோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் நிறைந்த பிளாஸ்டிக் தட்டுகள், ஹாட் பேக்குகள், பாலிதீன் ஷீசீட்டுகள் தான் இப்போது நமது வாழை இலையாகி விட்டது. டாக்டர்கள் சமுதாயம் வளர்ந்து விட்டது. என் பிள்ளை டாக்டருக்கு படிக்கிறான் என்று பெருமை வேறு.
புது வீட்டில் பால் காய்ச்சி வாழை மரத்தை கட்டுவது முதல், திருமணம் போன்ற மங்களகரமான
நிகழ்வுகள் அனைத்திற்கும் வாழை மரத்துக்கே முதலிடம் என்பது இப்போதும் என் காலத்தில் இன்னும் கொஞ்சூண்டு பழக்கத்தில் இருக்கிறது. சாமிக்கு வாழையிலையில் படையல் போட்டு விட்டு, பிளாஸ்டிக் தட்டில் நாம் சாப்பிடுவதே மங்கள நிகழ்வாகி விட்டது. நமது வயிற்றுக்குள் செல்லும் ஆபத்தை நாம் உணரவில்லை.
சூடான உணவுகளை வைப்பதால் பிளாஸ்டிக் தட்டுகள், தாள்களில் கிளம்பும் ஸ்டிரின், பைஸ்பீனால்
போன்ற நச்சு வாய்வுகளானது இதய குழாய் அடைப்பு, சிறுநீரகம், ரத்த புற்று நோய், மலட்டுத் தன்மை,
ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. எந்த வீட்டில் இப்போது அரை டஜன் குழந்தைகள் இருக்கிறது?
வாழை இலையில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா? உடல் எடை கூட விடாமல் தடுக்கும் நார்ச்சத்து,
உடலில் உப்புகளை சரியாக வைத்திட பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செம்புச் சத்துக்கள், கண்களை பாதுகாத்து, எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஏ.சி, மற்றும் குடற்புண்களை ஆற்றும் சக்தி.
ஆல்வான்பியின் கிருமிகளை அழிக்கும் பீனால், ரத்தம் உறைவதைத் தடுக்கும் சாலிசிலிக் அமிலம் புற்று
நோய் காரணிகளை அழிக்கும். செல்முதிர் பாதுகாப்பு கலன்கள், நிறமிகள் ஆகியன வாழை இலையில் உள்ளன. இவையெல்லாம் வாழை இலையின் மேல்புறத்தில் உள்ள குளோரோபில் என்னும் பொருளுடன் பின்னி பிணைந்து காணப்படுகிறது. நீரை தெளித்து வாழை இலையை கழுவி, அதன் மேல் நெய்யை தடவி அந்த இலையில் சூடான உணவுகளை வைக்கும் போது, மேற்கண்ட சத்துக்களெல்லாம் குளோரோபில்லுடன்
கரைந்து, உணவுடன் கலந்து விடுகின்றன. இதனால் ஒவ்வொரு முறை வாழை இலையில் சாப்பிடும்

பொழுதும் நமக்கும் ஆயுள் கூடுகிறது.
வயிற்று புண்ணை குணமாக்கும் வாழை இலையின் குளோரோபில் செல்கள் நீண்ட காலம் அழியாமல்
இருக்கக் கூடியவை மட்டுமல்ல, வாய், இரைப்பை, சிறுகுடல் போன்ற பகுதிகளில் உள்ள என்சைம்கள்
இருக்கக் கூடியவை மட்டுமல்ல, வாய், இரைப்பை, சிறுகுடல் போன்ற பகுதிகளில் உள்ள என்சைம்கள்
enzyme மற்றும் செரிமான செல்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு துணை புரிகின்றன. அல்சர் நோயி
னால் ஏற்பட்ட வயிற்று புண்களை வாழை இலை விரைவில் ஆற்றக்கூடியவை. இரைப்பை மற்றும் முன்
சிறுகுடலில் தோன்றிய புண்களின் அழுகி சதைகளை கரைத்து விட்டு, புதிய செல்களை தோற்றுவித்து
புண்களை ஆற்றும் தன்மை வாழை இலைக்கு உண்டு.
ஆகையால் தான் நெருப்பில் சுட்ட புண்களை ஆற்ற வாழை இலையைக் சுற்றுவது நமது வழக்கம்.
வாழை இலையில் உணவு உட்கொள்வதால் இனப்பெருக்கம் செல்களும் பல்கி பெருகுகின்றன.
ஆகையால் தான் நெருப்பில் சுட்ட புண்களை ஆற்ற வாழை இலையைக் சுற்றுவது நமது வழக்கம்.
வாழை இலையில் உணவு உட்கொள்வதால் இனப்பெருக்கம் செல்களும் பல்கி பெருகுகின்றன.
தினமும் ஒரு வேளை சூடாக உணவை இலையில் வைத்து சாப்பிடுவதால் ஆண் உயிரணுக்கள் அதிகப்படு
வதாக மேற்கத்திய நாடுகளின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.உணவின் விஷத்தன்மை கெட்டுப்
போன அல்லது விஷம் கலந்த உணவுகளை வாழை இலையில் வைத்தால் இலையின் மேற்புறத்தில்
புதிய நிறத்தில் ஒரு வித நீர் உற்பத்தியாகி, இலையில் ஒட்டாமல் வடிந்து விடும். இதனைவைத்து உணவின்
விஷத் தன்மையை அறியலாம்.
No comments:
Post a Comment