Sunday, April 11, 2021

CHANAKYA

 

சாணக்கியன்.    --    நங்கநல்லூர்  J K  SIVAN --

சகலகலா வல்லவன் கௌடில்யன் சொற்கள்.



कालः पचति भूतानि कालः संहरते प्रजाः।
कालः सुप्तेषु जागर्ति कालो हि दुरतिक्रमः॥ ०६-०७

kālaḥ pacati bhūtāni kālaḥ saṃharate prajāḥ।
kālaḥ supteṣu jāgarti kālo hi duratikramaḥ॥ 06-07

காலம்  இருபக்கமும்  கூரான கத்தி.  ஜீவன்களை உன்னதமாக வாழ்விக்கும். அதே சமயம்  அவர்கள் ஈவிரக்கம் இன்றி அழிக்கும் தன்மை கொண்டது.  எது உறங்கினாலும்  விழிப்போடு எப்போதும்  செயல்படுவது காலம் தான் என்பது நினைவிருக்கட்டும்.  அதை மீறவே முடியாது. அதற்கு கட்டுப்பட்டு தான் நாம் வாழவேண்டும்.  அது சத்யத்திற்குட்பட்டது.

संतोषस्त्रिषु कर्तव्यः स्वदारे भोजने धने।
त्रिषु चैव न कर्तव्योऽध्ययने जपदानयोः॥ ०७-०४

saṃtoṣastriṣu kartavyaḥ svadāre bhojane dhane।
triṣu caiva na kartavyo’dhyayane japadānayoḥ॥ 07-04

மனைவி, உணவு, பணம்  இது மூன்று தான் ஒருவனின் வாழ்வில்  அவனுக்கு தெம்பு கொடுப்பவை திருப்தி அளிப்பவை.  கல்வி,  தியானம்,  தர்மம்  இவற்றுக்கு  எல்லையே இல்லை, மேலும் மேலும்  ஈடுபட்டுக்கொண்டே இருக்கவேண்டியவை. போதும் என்ற திருப்தி இதற்கில்லை. 

दीपो भक्षयते ध्वान्तं कज्जलं च प्रसूयते।
यदन्नं भक्षयेन्नित्यं जायते तादृशी प्रजा॥ ८ – ०३
dīpo bhakṣayate dhvāntaṃ kajjalaṃ ca prasūyate।
yadannaṃ bhakṣayennityaṃ jāyate tādṛśī prajā॥

தீபத்தின்  குணம் என்ன தெரியுமா ?  இருட்டை கடித்து மென்று விழுங்கி கரியாக, புகையாக வெளிவிடுவது..
நாம்  சாப்பிடுகிறோமோ  உணவு,  அதைப் பொருத்து தான் நமது செயல்களின் வெளிப்பாடு இருக்கும். நமது வாரிசுகளும் அதற்கேற்ப தான் உருவாகும்.   ரிஷிகள், ஞானிகள் அதனால் தான்  சாத்வீக உணவை தேர்ந்தெடுத்தார்கள்.  
 
क्रोधो वैवस्वतो राजा तृष्णा वैतरणी नदी ।
विद्या कामदुधा धेनुः संतोषो नन्दनं वनम् ॥८-१४॥

krodho vaivasvato rājā tṛṣṇā vaitaraṇī nadī ।
vidyā kāmadudhā dhenuḥ saṃtoṣo nandanaṃ vanam ॥8-14॥

கோபம்  ஆத்திரம் இதெல்லாம்  யார்?  யமனின்  உருவங்கள்.   தாகம்  இருக்கிறதே  அது தான் நரகமான  வைதரணி நதி.  ஞானம்  தான்  காமதேனு. எதேஷ்டமாக  கேட்பதெல்லாம் அருள்வது.   திருப்தி என்பது தான் இந்திரனின்   நந்தவனம் போன்றது.   போதும் என்ற மனம்  பொன்செய்யும் மருந்து என்று தெரியாமலா சொல்லி இருக்கிறார்கள்.  
 
प्रलये भिन्नमर्यादा भवन्ति किल सागराः ।
सागरा भेदमिच्छन्ति प्रलयेऽपि न साधवः ॥ ०३-०६

pralaye bhinnamaryādā bhavanti kila sāgarāḥ।
sāgarā bhedamicchanti pralaye’pi na sādhavaḥ॥ 03-06

யுக  சந்தியில் ஏற்படுமே  ப்ரளயம்  உலகத்தை அழிக்க.  அப்போது  சமுத்திரங்கள் எல்லை மீறும்.  மாற்றம் கண்டுவரும். பழையனவெல்லாம்  மறைந்து புதியன  புகும்.  ஞானி இதனால்  மாறுவதில்லை.  

रूपयौवनसम्पन्ना विशालकुलसम्भवाः।
विद्याहीना न शोभन्ते निर्गन्धाः किंशुका यथा॥ ०३-०८

rūpayauvanasampannā viśālakulasambhavāḥ।
vidyāhīnā na śobhante nirgandhāḥ kiṃśukā yathā॥ 03-08

வாழ்வில்  எது  முக்கியம்.  அழகா? யௌவனமா?  மஹாராஜா, பிரபு குடும்பத்தில் பிறப்பதா?? சே சே  இதெல்லாம் பிரஜோனமே இல்லை.   கல்விஞானம் இல்லாதவன் மேலே  சொன்னதெல்லாம் இருந்தாலும்  வாசனையற்ற  ஒரு காட்டுப்பூ .  எவராலும் லக்ஷியம் பண்ணப்பட்ட மாட்டான்.  நாம் தான்  பார்க்கிறோமே.

कामधेनुगुना विद्या ह्यकाले फलदायिनी।
प्रवासे मातृसदृशी विद्या गुप्तं धनं स्मृतम्॥ ०४-०५

kāmadhenugunā vidyā hyakāle phaladāyinī।
pravāse mātṛsadṛśī vidyā guptaṃ dhanaṃ smṛtam॥

கல்விக்கு இணையே இல்லை.  அது வற்றாத  ஜீவநதி.  வேண்டியதெல்லாம் தரும் காமதேனு.  எப்போதும் வாரி வழங்குவது.  தாயானவள்  சேய்  எங்கு சென்றாலும்  எப்போதும்  பசித்தபோதெல்லாம் நேரத்தில்   பால் தருவதைப்போல் ,  ஒருவனை எங்கு சென்றாலும் வாழவைப்பது அவனது கல்வி தான்.  திருடனால் கொள்ளை போகாத செல்வம்.  .

இன்னும் சொல்வேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...