Thursday, April 29, 2021

OLDEN DAYS WEDDING




 


பழைய நினைவுகள்.     நங்கநல்லூர்  J K SIVAN 


''கல்யாணம்  டும் டும்  டும்  கல்யாணம்''

நான்  எழுதும்  இந்த கல்யாண  விஷயங்கள்  ஏதோ  பொழுது போக்குக்காக  எழுதப்பட்டதல்ல . மூன்று  தலைமுறைக்கு முன் நடந்தது எவ்வாறு, இப்போது எப்படி  அது  சுருங்கி விட்டது.  காலத்திற்கேற்றவாறு  மாற்றம் என்ற  சால்ஜாப்பு எல்லாவற்றிற்கும் சொல்ல  முடியாது. சிலது அப்போதும் இப்போதும்  எப்போதும்  ஜாக்கிரதையாக  கவனித்து செய்ய  வேண்டிய விஷயங்கள்.  அப்படி செய்யாததால்  நிறைய  மணப்பெண்கள், மாப்பிள்ளைகள்  கருப்பு கோட்டுக்கு பணம் கொடுத்து கோர்ட் வாசலில் நிற்கிறார்கள். எத்தனையோ லக்ஷங்கள் கடன் வாங்கியாவது கல்யாணம் செய்த  பெற்றோர்  ரத்தக் கண்ணீர்  விட்டு வாங்கிய கடன்களை அடைக்கும் முன்பேஅவர்களது பெண்ணோ பிள்ளைக்கோ நடத்திய   கல்யாணம் ரத்து ஆகும் வருத்தமான சூழ்நிலை.  முடிந்தவரை  எதெல்லாம் தவிர்க்க முடியுமோ அதைச் செய்வோம். அப்புறம்  ஈஸ்வரன் விட்ட வழி. 
நமது ஹிந்து கலாச்சாரத்தில் சில மாதங்கள் ரொம்பவும் பிஸியான கல்யாண மாதங்கள். ஒரே நாளில் ரெண்டு மூன்று கல்யாணம். எங்கே எதற்கு போவது?. எதில் பங்கேற்று வாழ்த்தி சாப்பிடுவது? ஒன்றில் தலையைக் காட்டி அழைப்புக்கு'' (ரிசப்ஷன்) சென்று யாருமே கேட்காத இன்னிசையை காதில் வாங்கிக்கொண்டே சாப்பிட்டு, தெரிந்த சில முகங்களிடம் அர்த்தமில்லாமல் சிரித்து விட்டு பையை வாங்கிக்கொண்டு திரும்புவது. மற்றொன்றில் முகூர்த்தம் என்று அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் காலையில் வெறும் இட்டிலி பொங்கல், பூரி, தோசை,கேசரி சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொண்டு சாப்பிடாமல் திரும்புவது. சிலதில் காலையிலேயே ஏதாவது வீட்டில் கொஞ்சம் வயிற்றை நிரப்பிக் கொண்டு அங்கே முகூர்த்தம் முடிந்து போஜனத்தை உண்டு வீடு திரும்புவது வழக்கமா, பழக்கமா, ஏதோ ஒன்று ஆகி விட்டது.  ஒரே  கல்யாண மண்டப  கட்டிடத்தில் மூன்று கல்யாணம்.  நான் சம்பந்தமில்லாத தெரியாத ஏதோ ஒன்றின் ரிசெப்ஷன் சென்று சாப்பிட்டுவிட்டு தெரியாத பெண்ணுக்கு  பரிசு கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து திட்டு வாங்கினேன்.  நான் செல்லவேண்டிய கல்யாணம் மூன்றாவது மாடியில் இருந்த மண்டபத்தில் என்று பத்ரிகையை  சரியாக பார்க்காமல் செய்த தவறு.
கல்யாணம்  என்பது  கொஞ்சம் கூட  அவசரம் இல்லாமல் செய்யவேண்டிய  ஒரு முக்கிய கார்யம்.  அதில் எத்தனை விஷயங்கள் இருக்கிறது.  மறுபடியும்  ஞாபகப் படுத்துகிறேன்.

கல்யாண விஷயத்தில்  பெண் பிள்ளை  பொருத்தம்  பார்ப்பது  என்பது  வெறும்  ஜோசியர்  சமாச்சாரம் மட்டும் இல்லை. இப்போது போல்  டிடெக்ட்டிவ்   ஏஜென்ஸி  எடுத்து  பையன்  பற்றிய  ரகசிய  வேவு  பார்ப்பது போல்  அப்போது  கிடையாது.  
''வது வர குண பரிக்ஷம்'  என்று  சமஸ்க்ரிதத்தில்  சாஸ்திரம் ஒன்று இருக்கிறது.   இதன் மூலம் ஒரு பையன் பெண்ணுக்கு தகுந்தவனா அல்லது பெண்பையனுக்கு ஏற்றவளா என்று சோதிப்பதற்காகத்தான், பெரியவர்கள் சம்பந்தம் பேசுமுன் சகல விபரங்களையும் கேட்டு அறிவார்கள்.  ஒரு வீட்டில்  பெண் பார்க்கிறார்கள்  என்றால்  அந்த கிராமத்தில் அநேகருக்கு இது தெரிந்த விஷயமாக இருக்கும்.   அவர்களில் யாராவது  பெண்ணைப் பற்றி, பையனைப் பற்றி   சகல விஷயங்களையும் அஆற்றங்கரையிலோ, அரசமரத்தடியிலோ,   மதகு வாராவதி மேல்  அமர்ந்தோ கோயில் வாசலிலோ  எல்லாவிஷயமும் சொல்லிவிடுவார்கள்.  குடும்பம்  பற்றிய  சப்  ஜாடா  விஷயமும்  தெரிந்துகொள்ள  இயன்றது.  பொருத்தம்  பார்ப்பது இதற்காகத் தான்.

அதேபோல்  ஒருவீட்டில் பெண்  எடுக்கும்போது  திடு திப் என்று  செல்ல மாட்டார்கள்.  ' வரப்ரசேன, வரவரித்தி கர்மா''  என்ற  முறைப்படி, சரியானவர்களை, அனுபவஸ்தர்களை  தக்க படி  அனுப்பி பெண் வீட்டில்  பெண்ணைப் பற்றி  கல்யாணத்துக்கு இருக்கிறாளா என்று சகல விஷயமும் அறிந்து வருவார்கள்.  

 பெண்வீட்டார் முதலில் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு பிள்ளை தேடுதல் வழக்கமானது. இப்போது இதற்கென சில ப்ரோக்கர்கள். அவர்களது நோக்கம் எப்படியாவது எவரையாவது ''பிடிப்பது'' தனக்கு ஆதாயம் பெறுவது. அப்போது  இந்த சுயநலம் இல்லை. அதனால் தான்  டைவர்ஸ் கோர்ட் விவகாரம் இல்லை.  தொங்க தொங்க தாலியோடு  கிழட்டு தம்பதிகளாக வெகுகாலம் ஒருவரை ஒருவர் பிரியாமல் இருந்தார்கள். பத்து குழந்தைகளாவது நிச்சயம் ஒவ்வொரு வீட்டிலும்.

 ''வரி நிஸ்சயம்.''  இந்த சமஸ்க்ரித வாக்கியம் என்ன சொல்கிறது என்றால்,  இப்படி  ஜல்லடை போட்டு தேடி சரியான பெண்ணையோ பிள்ளையையோ தேர்ந்தெடுத்து   நிச்சயம் செய்து கொள்ளுதல்.

 ''மண்டபகரணம்'' -என்றால்  ஒரு நல்ல இடமாக தேர்ந்தெடுத்து   கல்யாணம்  நடத்த இப்போதெல்லாம்   ஒரு வருஷம் முன்பே  அலைய வேண்டி இருக்கிறதே.  கல்யாண மண்டபம் தேடி பிடித்த பிறகு தான்  அதற்கு ஏற்றவாறு  கல்யாண தேதி வைக்கும் அவசியமும் வந்துவிட்டது.   அக்காலத்தில்  பெண் வீட்டிலேயே தெருவை மடக்கி பந்தல் போட்டு விமரிசையாக கல்யாணம் நடக்கும்  என்று முன்பே சொல்லியிருக்கிறேன்.  

அநேகர்  வீட்டு கல்யாணம்  அவர்களது  குல தெய்வ ஊரிலேயே   நடந்தது.   சில கோவில்களில் கல்யாணம் செய்ய அனுமதி உண்டு. இடமும் இருக்கும்.

'வது கிரஹ கமனம்''  இது என்னவென்றால்  மறு வீடு என்று  பால் பழம் சாப்பிட  செல்கிறார்களே  அது போல்.  கல்யாண மாப்பிள்ளை  பெண் வீட்டுக்கு செல்வது. அதற்கு முன் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் பரிச்சயம் இல்லை. இப்போது படித்து சந்தோஷமாக ''பேத்தல் '' என்று சொல்லி சிரிக்கலாம். தடை இல்லை.

கல்யாண  சடங்குகள்  நடக்கும் முன்பு   'நாந்தி ச்ராத்தம், புண்யாஹவாசனம்' -போன்ற  முன்னோர்கள்,  தேவர்கள், தேவதைகள் ஆசியை பெறும்  சடங்குகளை    ஹோம  குண்டம் வைத்து   ஹோமங்கள்  ப்ரீதிகள்  செய்வது வழக்கம்.  .

வேதங்களில் '' தைல ஹாரித்ர லேபனம்'' என்று மஞ்சள் குங்குமம் தடவி பெண்ணை அலங்கரிப்பது பற்றி வருகிறது. ஒருவிதத்தில் மெஹந்தி, நலங்கு இது தான் இப்போது இதை குறிப்பதாக எடுத்துக் கொள்வோம்.

'மதுபர்க்கம்'' - பிள்ளையை பெண் வீட்டுக்கு அழைத்து பாலும் பழமும் கொடுப்பது. கல்யாண மண்டபத்திலேயே இது ஊஞ்சலில் இப்போது நடைபெறுகிறது. அந்த காலத்தில் 7 நாள் கல்யாணம் நடக்கும். இப்போது கல்யாணம் ஆகு  முன்பே சாயந்திரம் நிச்சயதார்த்தம்,  கல்யாணமானவர்களைப் போல  பெண்ணும் பிள்ளையும் அனைவரையும்   வரவேற்பது,  அவர்கள்  கல்யாணம்  நடந்த பின் சொல்லவேண்டிய  வாழ்த்தை முன்பாகவே சொல்வது.   கல்யாணமாகாத ''தம்பதிகளோடு'' போட்டோ  எடுப்பது,   இதெல்லாம் முடிந்த பின் அடுத்தநாள் காலை  உண்மையாகவே  கல்யாணம் . பண்ணிக்கொள்வது,   சாப்பிட்டவுடன்,   கை   ஈரம் காயும் முன்பே  மத்தியானம்  கல்யாண  ஹாலை , சாத்திரத்தை  இடத்தை காலி பண்ணுவது.  ஏதோ ஒரு மெஷின் மாதிரி  வேலைகள் நடக்கிறது.  

மாப்பிள்ளையை விஷ்ணுவாக பெண்ணை லக்ஷ்மிதேவியாக பாவித்து உபசரிப்பது வேதங்களில் சொல்லப்படுகிறது. இப்போது யாரேனும்  ஒரு நிமிஷம் இதுபோல் நினைக்கிறார்களா?

இன்னும்  கொஞ்சம் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...