Saturday, April 3, 2021

PANCHA RATHNA KEERTHTHANAI

 

பஞ்ச ரத்ன கீர்த்தனை.


   கன  கன  ருசி ரா  --  நங்கநல்லூர்  J K  SIVAN 


சங்கீர்த்த  மும்மூர்த்திகளில்  அதிகம் அறியப்பட்டவர்  ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள்.   18ம் நூற்றாண்டு  ராம பக்த  தெலுங்கர்.
தஞ்சாவூர் ப்ரஹதீஸ்வரர் கோவிலை கட்டிய மேஸ்திரியோ, அவனை நியமித்த ராஜ ராஜ சோழனோ இன்று இல்லை. ஆனால் அவர்கள் சேர்ந்து கட்டிய பெரியகோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகப் புகழோடு நிற்கிறது. கோடிக்  கணக்கான பக்தர்கள், ரசிகர்கள் அதன் கம்பீரத்தை, அழகை, கலை அம்சத்தை வாய் வலிக்க புகழ்கிறார்கள். கேட்க செவி வலிக்கவில்லை. இதை எதற்காக சொன்னேன் என்றால் சங்கீதம் அழியாதது. அதை மெருகேற்றி இன்பமாக்கிய மஹாநுபாவர்கள் தோன்றி மறைபவர். அவர்களில் ஒருவர் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள். இருநூற்று ஐம்பத்தந்து வருஷமாகப்போகிறது அவர்  பிறந்து. 


சுருக்கமாக சொன்னால்  தனது  வாழ்நாளில் தஞ்சாவூர்  திருவையாறில்  தியாகராஜ ஸ்வாமிகள் நான்கு சோழ ராஜாக்களை சந்தித்திருக்கிறார். இரண்டாம் சிவாஜி என்கிற மராத்திய சோழ ராஜா காலத்தில் ஸ்வாமிகள் மறைந்தார்.

பத்து வேலி நிலமும் சாக்கு நிறைய தங்கமும் தருகிறேன் என் மேல் பாடு என்று மஹாராஜா சரபோஜி கேட்டும் அதை துச்சமாக கருதி ஸ்வாமிகள் பாடிய ''நிதி சால சுகமா'' பாடலுக்கு என்று அவர் அமைத்த ராகம் கல்யாணி. இதைப் பாடியே நிறைய வித்துவான்கள் இன்று நிதி சேர்த்துக் கொள்கிறார்கள்.  ஆனால்  பிழைக்க தெரியாத என்று நாம் நினைக்கும்  ஸ்வாமிகள் அதை நிராகரித்து ''அடே ராஜா,  என் ராமன் சந்நிதியில் பாடும் சுகத்திற்கு ஈடாகுமா நீ அளிக்கிற நிதியும்  '' என்று  பாடினார்.    கோபமுற்ற சோழ ராஜா ''என்னை இகழ்ந்த, அவமதித்த அந்த உஞ்சவிருத்தி பிராமணனை உடனே சென்று இழுத்து வாருங்கள் ''என்று கட்டளையிட்டான். அடுத்த கணமே தாங்கமுடியாத வயிற்று வலி அவனை வாட்டியது. தவறை உணர்ந்தான். அவரிடம் மன்னிப்பு கேட்டான். வயிற்றுவலி மறைந்தது. 

ஸ்வாமிகள் ஒரு இடத்தில் கூட தனது கீர்த்தனைகளில் ராஜாவின் கட்டளை, சீற்றம், வயிற்றுவலி, அவன் திருந்தியது பற்றி எல்லாம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.  

ஸ்வாமிகளின் குரு சொண்டி வெங்கட்ரமணய்யா என்கிற வித்துவான்.

திருவாயாறில் , தியாகராஜரின் அதிஷ்டானத்தில் காவிரிக்கரையில் ஓவ்வொரு ஏகாதசியும் தியாகராஜ ஸ்வாமிகள் கீர்த்தனைகளும் பஜனைகளும் நடைபெறும் மண்டபத்தின் பெயர் ''கல்யாண மஹால்''

 தியாகராஜ ஸ்வாமிகள் கீர்த்தனை ஒவ்வொன்றிலும் கடைசி அடியில் ''தியாகராஜ'' என்ற முத்திரை இருக்கும்.  தியாகராஜ ஸ்வாமிகளின் வாழ்க்கை சரித்திரத்தை எழுதிய அவரது சிஷ்யர் வாலாஜாபேட்டை கிருஷ்ணஸ்வாமி பாகவதர்.   திருவையாற்றில் தியாகராஜ ஸ்வாமிகளின் பூர்விக வீடு, நிலம் எல்லாம் செரபோஜி ராஜாவின் அப்பா துளஜா மஹாராஜா வால் தானமாக கொடுக்கப் பட்டது.  சரபோஜி ராஜாவின் மாப்பிள்ளை மோதி ராவ் தினமும் ஸ்வாமிகள் இல்லத்திற்கு வந்து அவர் கீர்த்தனைகளை கேட்டு ரசிப்பார்.    தியாகராஜ ஸ்வாமிகள் சென்னை வந்திருக்கிறார். அப்போது தனதுசிஷ்யன் வீணை குப்பையர் வீட்டில் தங்கவில்லை. அவரை ஆதரித்த  கோவூர்  சுந்தரேச முதலி என்ற தர்மிஷ்டர் வீட்டில் தங்கினார்.  இது பற்றி  அவர்  திருப்பதி சென்ற பயண கட்டுரையில் ஏற்கனவே எழுதி இருந்தேனே.    கோவூர் தொண்டைமண்டல புதன் க்ஷேத்ரம். அங்கே சுந்தரேஸ்வரர் கோவிலில் தியாகராஜ ஸ்வாமிகள் அப்போது இயற்றிய கோவூர் பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் சுவற்றில் பதிந்திருப்பதை காணலாம்.

எத்தனையோ ஆயிர கீர்த்தனைகள் எழுதினாலும் ஸ்வாமிகளின்  திருவையாறு  பஞ்சரத்ன கீர்த்தனைகள் உலகப் பிரசித்தி பெற்றவை. ஐந்து ரத்னமான  கீர்த்தனைகள். இதைப்பாடாத  சங்கீத வித்வான் இருக்க முடியாது.  ஜெகனானந்த காரக (நாட்டை) ,  துடுக்குகல (கௌளை), சாதிஞ்சனே(ஆரபி) , கன கன ருசிரா(வராளி ) , எந்தரோ மஹாநுபாவுலு (ஸ்ரீ ராகம்) .  எதை உசத்தி என்று சொல்வது. ஐந்தும்  இதுவரை ஆயிரக்கணக்கான முறை கேட்டும்  இன்னும் புதுமையாக  ருசிப்பவை.  ஐந்துமே  கன பஞ்ச  ராகங்கள். 

அதில் ஒன்றைப் பற்றி சொல்கிறேன்.  கன  கன  ருச்சிரா  எனும் வராளி  ராக கீர்த்தனை.

  தாளம்: ஆதி
கன கன ருசிரா
கனக வஸன னின்னு

தின தினமுனு அனுதின தினமுனு
மனஸுன சனுவுன னின்னு
கன கன ருசிர கனக வஸன னின்னு

பாலுகாரு மோமுன
ஶ்ரீயபார மஹிம கனரு னின்னு
கன கன ருசிரா கனக வஸன னின்னு

களகளமனு முககள கலிகின ஸீத
குலுகுசு னோர கன்னுலனு ஜூசே னின்னு
கன கன ருசிரா கனக வஸன னின்னு

பாலாகாப ஸுசேல மணிமய மாலாலம்க்றுத கம்தர
ஸரஸிஜாக்ஷ வர கபோல ஸுருசிர கிரீடதர ஸம்ததம்பு மனஸாரக
கன கன ருசிரா கனக வஸன னின்னு

ஸபத்னி மாதயௌ ஸுருசிசே கர்ண ஶூலமைன மாடல வீனுல
சுருக்கன தாளக ஶ்ரீ ஹரினி த்யானிம்சி ஸுகியிம்பக லேதா யடு
கன கன ருசிரா கனக வஸன னின்னு

ம்றுதமத லலாம ஶுபானிடில வர ஜடாயு மோக்ஷ பலத
பவமான ஸுதுடு னீது மஹிம தெல்ப ஸீத தெலிஸி
வலசி ஸொக்கலேதா ஆரீதி னின்னு
கன கன ருசிரா கனக வஸன னின்னு

ஸுகாஸ்பத விமுகாம்புதர பவன விதேஹ மானஸ விஹாராப்த
ஸுரபூஜ மானித குணாம்க சிதானம்த கக துரம்க த்றுத ரதம்க
பரம தயாகர கருணாரஸ வருணாலய பயாபஹர ஶ்ரீ ரகுபதே
கன கன ருசிரா கனக வஸன னின்னு

காமிம்சி ப்ரேமமீத கரமுல னீது பாத கமலமுல பட்டுகொனு
வாடு ஸாக்ஷி ராம னாம ரஸிகுடு கைலாஸ ஸதனுடு ஸாக்ஷி
மரியு னாரத பராஶர ஶுக ஶௌனக புரம்தர னகஜா தரஜ
முக்யுலு ஸாக்ஷி காதா ஸும்தரேஶ ஸுக கலஶாம்புதி வாஸா ஶ்ரிதுலகே
கன கன ருசிரா கனக வஸன னின்னு

ஸததமு ப்ரேம பூரிதுடகு த்யாகராஜனுத
முகஜித குமுதஹித வரத னின்னு
கன கன ருசிரா கனக வஸன னின்னு  

இந்த தெலுங்கு  கீர்த்தனையின் அர்த்தம் என்ன?

இந்த ஹ்ருதய வாஸா , ஸ்ரீ ராமா,  உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேனே. எனக்குள்  தோன்றுவதென்ன தெரியுமா?

தகதகவென்று மின்னும் தங்கத்தாலான  ஆடை அணிந்தவனே,  பரிதியின் துலக்கமுடை நல்லாடையோனே! மணி மயமான மாலைகள்  கழுத்தை அலங்கரிக்கும் திவ்ய ரூபன்,  கமலக்கண்ணா! சிறந்த கன்னங்களோனே!  அற்புத  கிரீட மணிவோனே!   நெற்றியில் கஸ்தூரி திலகம்  தரித்தவனே , பக்ஷி ராஜன்  ஜடாயுவிற்கு மோக்ஷம் தந்தவனே,  சுகத்தின்  ஒரே  உறைவிடமே! பகை யெனும்  மேகத்தை அழிக்கும் புயலே,
உடலற்றோரின் உள்ளத்தில் உறைபவனே ,  கேட்டதெல்லாம் தரும் பக்தர்களின்  கற்பக விருக்ஷமே ! எல்லோராலும்   போற்றப்படும்   காருண்ய குண சின்னத்தோனே! சிதானந்தனே!  கருட வாகனனே! சுதர்சன சக்ரதாரி !   கருணாசாகரமே,  தயாபரனே ,    பயம் அகற்றுபவனே,  ரகு குல திலகா !  எழில் மிக்கவனே ! சுகமாக,   உன்மேல் அளவற்ற பக்தியும் காதலும் நிறைந்த  இந்த  தியாகராசன் போற்றும்,  சந்திரனை வெல்லும்  காந்தி படைத்த வதனனே,  வரமளிக்கும் வரதா!

காணக்காண சுவையய்யா, உன்னை!
தினந்தினமும், எவ்வமயமும், மனதார, மனதினில், காதலுடனுன்னைக் காணக்காண சுவையய்யா;
பால் வடியும் முகத்தினில், செழிப்பும், அளவுகடந்த மகிமையும் ஒளிரும் உன்னைக் காணக்காண சுவையய்யா;
கலகலவென முகக் களையுடை சீதை, குலுக்கிக்கொண்டு, ஓரக்கண்ணினால் நோக்கும் உன்னைக் காணக்காண சுவையய்யா;
மாற்றாந்தாயாகிய சுருசியின், காதுகளுக்கு ஈட்டி போலும் சொற்கள், காதுகளில் சுருக்கென, (துருவன்) தாளாது, அரியினை தியானித்து சுகமடையவில்லையா?
வாயு மைந்தன், உனது மகிமைகளைத் தெரிவிக்க, சீதையறிந்து, ஆவலோடு, சொக்கவில்லையா?
அவ்விதம் உன்னைக் காணக்காண சுவையய்யா;
விரும்பி, காதல் மீர, கரங்களில், உனது திருவடிக் கமலங்களைப் பற்றிக்கொண்டிருப்போன் சாட்சி;
இராம நாமத்தினைச் சுவைப்போனாகிய கயிலாயத்துறைவோன் சாட்சி; மேலும்,
நாரதர், பராசரர், சுகர், சௌனகர், புரந்தரன், மலைமகள், (மற்றும்) புவியில் தோன்றிய தலைசிறந்தோர் சாட்சியன்றோ?
சார்ந்தோருக்கே (உன்னைக்) காணக்காண சுவையய்யா.
காண/ காண/ சுவையய்யா/ பொன்/ ஆடை அணிவோனே/ உன்னை/
அனுபல்லவி
தினந்தினமும்/ மனதினில்/ காதலுடன்/ உன்னை/ காண...
சரணம் 1
பால்/ வடியும்/ முகத்தினில்/ செழிப்பும்/ அளவுகடந்த/
மகிமையும்/ ஒளிரும்/ உன்னை/ காண...
சரணம் 2
கலகலவென/ முக/ களை/ உடை/ சீதை/
குலுக்கிக்கொண்டு/ ஓர/ கண்ணினால்/ நோக்கும்/ உன்னை/ காண...
சரணம் 3
இளம்/ பரிதியின்/ துலக்கமுடை/ நல்லாடையோனே/ மணி/ மயமான/
மாலைகள்/ அலங்கரிக்கும்/ கழுத்தினனே/
கமல/ கண்ணா/ சிறந்த/ கன்னங்களோனே/ திகழும்/
கிரீடம்/ அணிவோனே/ எவ்வமயமும்/ மனதார/ காண...
சரணம் 4
மாற்றாந்தாயாகிய/ சுருசியின்/
காதுகளுக்கு/ ஈட்டி போலும்/ சொற்கள்/ காதுகளில்/
சுருக்கென/ (துருவன்) தாளாது/ ஸ்ரீ அரியினை/ தியானித்து/
சுகமடையவில்லையா/ அவ்விதம்/ காண...
சரணம் 5
கத்தூரி/ திலகம்/ திகழும்/ நெற்றியோனே/ உயர்/
ஜடாயுவினுக்கு/ முத்தி/ பயனருள்வோனே/ வாயு/
மைந்தன்/ உனது/ மகிமைகளை/ தெரிவிக்க/
சீதை/ அறிந்து/ ஆவலோடு/ சொக்கவில்லையா/ அவ்விதம்/ உன்னை/ காண...
சரணம் 6
சுகத்தின்/ உறைவிடமே/ பகையெனும்/ நீர்முகிலுக்கு/ புயலே/
உடலற்றோரின்/ உள்ளத்து/ உறையே/ நெருங்கியோரின்/
வானோர் (கற்ப)/ தருவே/ மதிக்கப் பெற்ற/ பண்பு/ சின்னத்தோனே/
சிதானந்தனே/ பறவை/ வாகனனே/ ஏந்துவோனே/ (ஆழியினை) தேர்/ உருளையினை/
மிக்கு/ இரக்கமுடைத்தோனே/ கருணை/ இரச/ கடலே/
அச்சத்தினை/ போக்குவோனே/ ஸ்ரீ ரகுபதியே/
சரணம் 7
விரும்பி/ காதல்/ மீர/ கரங்களில்/ உனது/
திருவடி/ கமலங்களை/ பற்றிக்கொண்டிருப்போன்/
சாட்சி/ இராம/ நாமத்தினை/ சுவைப்போனாகிய/
கயிலாயத்து/ உறைவோன்/ சாட்சி/
மேலும்/ நாரதர்/ பராசரர்/ சுகர்/
சௌனகர்/ புரந்தரன்/ மலைமகள்/ (மற்றும்) புவியில் தோன்றிய/
தலைசிறந்தோர்/ சாட்சியன்றோ/ எழிலுக்கு/ ஈசனே/
சுகமாக/ குட/ கடலில்/ உறைவோனே/ சார்ந்தோருக்கே/ (உன்னைக்) காண...
சரணம் 8
எவ்வமயமும்/ காதல்/ நிறை/ தியாகராசன்/
போற்றும்/ முகத்தினில்/ வெல்வோனே/ குமுத/ நண்பன் (மதியினை)/ வரதா/ உன்னை/ காண...

தியாகராஜ ஸ்வாமிகளைப் பற்றியோ அவரது தெய்வீக கீர்த்தனைகளை பற்றியோ சொல்லிக்கொண்டே போனால் அதற்கு முடிவில்லை. சுகமோ சுகம் .  இதோ  பாலமுரளி கிருஷ்ணா  இந்த  பஞ்சரத்ன கீர்த்தனையோ சுருதி தாள சுத்தமாகி  அவரது தாயமொழியாகிய தெலுங்கில் பாடுவதை கேட்டு ரசியுங்கள். இதைக் கேட்கும்போது  தான் இதை எழுத தோன்றியது.  click  the link  

https://youtu.be/XFmcPrCSqlY

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...