மானசீக புனித/உல்லாச பயணம்-- நங்கநல்லூர் J K SIVAN
3. யாழ்ப்பாண நல்லூர் கந்தசாமி ஆலயம்
இன்று நாம் இந்தியாவைக் கடந்தே பறந்து சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பழம் பெரும் கோயிலை தரிசிக்கிறோம்.
இலங்கைத் தீவின் வடபுரத்தில் இருக்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் நான்கு வாயில்களை கொண்டது. ஒவ்வொரு வாயிலிலும் ஒரு ஆலயம். உலகப்பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயம் உலகெங்கும் பக்தர்களால் வழிபடப்படும் சிறந்த ஒரு கோவில். இங்கே என்ன விசேஷம் என்றால் கந்தசாமி எனும் ஷண்முகம் வேல் வடிவில் வணங்கப்படுகிறார். இப்போதுள்ளது 1749ல் நான்காம் முறையாக கட்டப்பட்ட கோவில். கட்டியவர்கள் கிருஷ்ண சுப ஐயரும் ரகுநாத மாப்பாண முதலியாரும்.
10ம் நூற்றாண்டில் சோழராஜ கண்டராதித்த சோழன் மனைவி செம்பியன் மாதேவியால் அளிக்கப்பட செப்புச் சிலையாலான நல்லூர் தேவி அம்பாளை பிரதிஷ்டை செய்திருந்தார்கள்.
948ல் முதலில் குருக்கள் வளவு என்ற இடத்தில் கட்டப்பட்டது. ரெண்டே ரெண்டு ஹால் மாதிரி இடம். கோபுரம் இல்லை. அந்நியர்கள் ப்ரவேசத்தால், படையெடுப்பால் அடிக்கடி இடம் மாறியது இந்த ஆலயம். அப்போது தான் நல்லூரில் இடம் பெயர்ந்தது. இந்த பழைய முருகன் ஆலயம். 13வது நூற்றாண்டு யாழ்ப்பாண அரசன் கலிங்க மஹா வின் மந்திரி புவனேக வாஹு வால் புணருத் தாரணம் ஆனது. முன்றாவது முறை புனருத்தாரணம் ஆனது கோட்டை அரசன் செண்பக பெருமாள் காலத்தில். அவனது இன்னொரு பெரியார் சப்பும் குமாரயா , ராஜாவின் வளர்ப்பு மகன். நல்லூர் யாழ்ப்பாண தலைநகரம். சுற்றிலும் கோட்டை மதில் சுவர்கள்.
1902ல் வேல் ஸ்தாபிதம் நடந்தது. அது தான் கந்தசாமி... 1964ல் வசந்த மண்டபம் புதுப்பித்தார்கள்.
1621ல் சங்கிலி தோப்பு எனும் இடத்தில் இருந்த கந்தசாமி கோவில் போர்ச்சுகீசிய தளபதி பிலிப் டீ ஆலிவீரா வால் தகர்க்கப்பட்டு அங்கே 1624ல் கிருஸ்தவ ஆலயம் உருவானது. ஹிந்து கோவில்களை அழித்து கிறிஸ்த்தவ தேவாலயங்கள் உருவான மதவெறி காலம் அது. நல்லூர் முருகன் ஆலயம் முதலில் இருந்த இடத்தில் இப்போது செயின்ட் ஜேம்ஸ் சர்ச். சிவலிங்கம் உடைக்கப்பட்டது. ஆவுடையார் இன்னும் இருக்கிறது.
இப்போது இருக்கும் நல்லூர் கந்தசாமி ஆலயம் 1734ல் டான் ஜுவான் என்பரால் உருவானது. அப்போது இந்த ஆலயத்தில் ஒரு இஸ்லாமிக் சபையின் ஆலயம் இருந்தது. அதை 1749ல் இடம் பெயரச்செய்தார்கள்.
இந்த ஆலய வரலாறு யாழ்ப்பாண வைபவ மாலை எனும் நூலிலிருந்து அறியப்படுகிறது.
1890ல் இருந்து இந்த ஆலயம் ஆறுமுக மாப்ப்பாண முதலியார் குடும்பத்தின் கைக்கு வந்து சாந்நித்தியம் மீண்டும் பெற்றது .அரும்பாடு பட்டு அந்த குடும்பம் ஆலயத்தை ஹிந்து சனாதன தர்ம ஆகம சாஸ்திர பின்பற்றுதல்களோடு வழிபாட்டுக்குரியதாக நிர்வாகம் செய்துவருகிறது.
1917 ல் கோயில் அதிகாரியான 4 ஆம் இரகுநாத மாப்பாண முதலியார் மனதில் முருகப்பெருமானுக்கு தீர்த்தக் கேணித் திருப்பணி செய்ய வேண்டும் என தோன்றி 1922ல் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கான தீர்த்த கேணி சதுர வடிவில் சுண்ணாம்புக் கற்களாலும் வெள்ளைக் கல்லாலும் உருவானது.
குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தந்தையார் காலத்தில் அமைக்கப்பட்ட தீர்த்தக்கேணியானது, கடப்பாக் கற்களைக் கொண்டு தற்போது திருப்பணி நிறைவேற்றப்பட்டுள்ளது.
குபேர கோபுரவாசல் கும்பாபிஷேகம் நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்பட்ட தீர்த்த கேணித் திருப்பணி இரண்டு வருடங்களில் நிறைவடைந்துள்ளதுடன், சண்முக தீர்த்தக்கேணி பிரதிஷ்டா கும்பாபிஷேகம் கார்த்திகை உற்சவ தினத்தன்று (15.08.2017 செவ்வாய்கிழமை) நடைபெற்றுது.
நல்லூர் கந்தசுவாமி கோயிலின் நிர்வாக உரிமை மாப்பாண முதலியார் குடும்பத்துக்கே உரித்தானது.
இவ்வருடத் திருவிழாவானது (2020 ஆம் ஆண்டு) மாப்பாண முதலியார் குடும்பத்தினரின் 286 ஆவது நிர்வாக வருடமாகும்.
தற்போது மாப்பாண முதலியார் குடும்பத்தின் பரம்பரையில் வந்த குமாரதாஸ் மாப்பாண முதலியார் கோயில் 10 ஆவது அதிகாரியாக நல்லூர் கந்தனுக்கு தன் சேவைகளை செய்து வருகிறார்.
சிறு வயது முதல் கிடைத்த தந்தையின் வழிகாட்டல் வளர்ந்த குமாரதாஸ் மாப்பாண முதலியார், வெளியாட்களுடான தொடர்பிற்கு முக்கியத்துவம் கொடுக்காது தெய்வப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தனக்கும் முருகனுக்கும் இடையிலான உறவை பிரபலப்படுத்தத் தேவையில்லை என்ற எண்ணம் கொண்டவர். முருகனுக்குக் கிடைக்கும் ஒரு சதமேனும் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு, முருகன் குடியிருக்கும் கோயில் வளர்ச்சிக்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
இவரது காலத்தில் நல்லூர்க் கோயில் பிரமாண்ட வளர்ச்சி பெற்றதுடன், மாப்பாணர் கட்டடப்பாணி என்னும் பெயர் நல்லூருக்குக் கிடைக்கக் காரணமாக விளங்கியவர்.
அது மாத்திரமல்லாமல் முருகனுக்கு மிகவும் பிடித்த கோயில் அதிகாரி எனக் குறிப்பிடும் வகையில் கிட்டத்தட்ட ஜம்பது வருடங்களுக்கு மேலாக முருகனுக்குத் தொண்டாற்றி வருபவர்.
தற்போதைய கோயில் அதிகாரியான குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தமையனாரான ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் காலமான 1964 ஆம் ஆண்டு தேர்த் திருப்பணி நிறைவேற்றப்பட்டது.
அவரது மறைவிற்குப் பின்னர் கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்ற குமாரதாஸ் மாப்பாண முதலியார், மிகவும் குறுகிய காலப்பகுதியில் அதாவது 6 – 7 மாதத்தில் பழைய வசந்த மண்டபத்தின் வாசலைப் பெரிதாக்கினார்.
ஒவ்வொரு வருடமும் கொடியேற்றத்திற்கு முன்னர் ஏதாவது ஒரு கோயில் திருப்பணி மேற்கொள்ளும் நடைமுறை அக்காலப் பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்தப் பாரம்பரியம் இன்றும் நல்லூர்க் கோயிலில் தொடர்வது முருகனின் அருளே.
குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தந்தையான நான்காவது இரகுநாத மாப்பாண முதலியார் காலத்தில் நல்லூர்க் கோயிலுக்கு முன்பாகவுள்ள இராஜகோபுரம் மற்றும் சண்முகருக்கு முன்பாக அமைந்துள்ள கோபுரம் ஆகியவற்றின் திருப்பணிகள் வெள்ளைக்கல் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், அவரது காலத்தில் அக்கோபுரங்கள் இரண்டும் வியாழவரி வரைக்கு மாத்திரமே நிறைவு செய்யப்பட்டன.
தந்தையார் ஆரம்பித்திருந்த வெள்ளைக்கல் கோபுரத்திருப்பணிகளில் ஒன்றான இராஜகோபுரத் திருப்பணியை ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் பூர்த்தி செய்தார்.
அத்துடன் முருகனின் மனைவியரான வள்ளி – தெய்வானையைக் குறிக்கும் வகையில் இராஜகோபுரத்திற்கு அருகில் இரண்டு மணிக்கூட்டுக் கோபுரங்களின் திருப்பணியையும் நிறைவு செய்தார்.
தந்தையார் விட்டுச் சென்ற சண்முகருக்கான கோபுரத் திருப்பணியை 1966 ஆம் ஆண்டு குமாரதாஸ் மாப்பாண முதலியார் நிறைவு செய்தார்.
தொடர்ந்து வந்த காலப்பகுதியில் கோயில் அமைப்பு ஆண்டு தோறும் மாற்றியமைக் கப்பட்டாலும், மூலஸ்தானத்தில் மாத்திரம் மாற்றங்களை ஏற்படுத்தாமல், அதைச் சுற்றியுள்ள பழைய மண்டபங்கள் அனைத்தும் புதிதாக்கப்பட்டன. ஓவ்வொரு வருடமும் ஒவ்வொரு திருப்பணியை ஆரம்பித்து, அதை அடுத்த திருவிழாவிற்கு முன்னர் நிறைவேற்றும் வழக்கம் உருவானது.
இவ்வளர்ச்சிப் படி முறைகளில் மகா மண்ட பம், ருத்திர மண்டபம் என்பன அமைக்கப் பட்டன. சண்முகப் பெருமானுக்கு சிதம்ப ரத்தில் எழுந்தருளியுள்ள நடராஜரைப் போன்று, ஒரு சபை அமைக்கப்பட்டது. ருத்திர மண்டபத் திருப்பணியின் போது, சிறிய கோயிலில் எழுந்தருளியிருந்த முத்துக்கு மாரசுவாமிக்கு, விமானத்துடன் கூடிய கோயில் அமைத்துத் திருப்பணி நிறை வேற்றப்பட்டது.
1970 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கோயில் கட்டடக்கலை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சி ஏற்பட்டது. அதாவது வெளி மண்டபத்தை சொக்கட்டான் பந்தல் முறையில் அமைத்து கோயில் அழகுபடுத்தப்பட்டது.
தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஒவ்வொரு திருப்பணிகளும் முருகன் அருளால் ஆரம்பிக் கப்பட்டு நிறைவுற்றன.
குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தமையனாரான ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் காலமான 1964 ஆம் ஆண்டு கோயிலுக்கான தேர்த் திருப்பணி நிறைவேற் றப்பட்டது. ஈடு இணையற்ற முறையில் அமைக்கப்பட்ட, அழகுப் பொக்கிஷமான தேரில் கந்தசுவாமியார் காலங்காலமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் கொடுக்கப் போகிறார் என எண்ணிய காரணத்தால், குறித்த தேரை நீண்ட காலம் பாதுகாக்கும் பொருட்டு தேர்முட்டியை குமாரதாஸ் மாப்பாண முதலியார் அமைத்தார்.
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் தேரும் மஞ்சமும் இலங்கையின் இருபெரும் கலைப்பொக்கிஷங்கள் ஆகும்.தொடர்ந்து வந்த ஆண்டுகளில் படிகளுடனான தேர் மண்டபத் திருப்பணி நிறைவேற்றப்பட்டது. குறித்த தேர் மண்டபத்தின் கட்டடக்கலை அமைப்பானது, நல்லூர்க் கோயில் அமைப்பி ற்கும் சொக்கட்டான் பந்தல் அமைப்பிற்கும் பொருந்தக் கூடிய வகையில் வடிவமைக் கப்பட்டு, உருவாக்கப்பட்டது.
நல்லூரில் மேற்கொள்ளப்படும் எந்தத் திருப்பணியையும் மூடிக்கட்டும் வழக்கம் கிடையாது. அனைத்து வேலைகளையும் கோயில் அதிகாரிகள் மேற்பார்வை செய்யும் அதேவேளை, அவற்றை பக்தர்களும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நல்லூரில் பின்பற்றப்படுகின்றது.
கட்டடக்கலை வரை படங்களுக்கு அப்பால் சென்று, கோயில் வளாகத்திலும் முருகன் முன்னிலையிலும் திருப்பணிகளுக்கான முக்கிய முடிவுகளை கோயில் அதிகாரிகள் எடுக்கும் வழக்கம் உள்ளது. இவ் வழக்கம் உலகில் உள்ள எந்தக் கோயிலிலும் இல்லாத வழக்கம் என்பதுடன், முக்கிய முடிவுகளை முருகனே எடுப்பார் என்பது ஜதீகமாகும்.
ஆண்கள் வேஷ்டி அணிந்து மேலே சட்டை போடாமல் தரிசிக்க பெண்கள் பாரம்பரிய உடை அணிந்தால் கோவிலில் அனுமதிக்கப் படுவார்கள். போட்டோ எடுக்க அனுமதி யில்லை.
கந்த சஷ்டி ஆடி கிருத்திகை அன்று அலகு குத்திக்கொண்டு காவடி எடுப்பார்கள். நம்மை விட இலங்கைத் தமிழர்கள் முரட்டு பக்தர்கள்.. தீவிர முருக பக்தர்கள் என்று தாராளமாக சொல்வேன். இனி ஆலயத்தை காண்போம்
https://youtu.be/jVDl65QoYHY
https://youtu.be/jVDl65QoYHY
No comments:
Post a Comment