சாணக்கியன். -- நங்கநல்லூர் J K SIVAN --
சகலகலா வல்லவன் கௌடில்யன் சொற்கள்.
प्रलये भिन्नमर्यादा भवन्ति किल सागराः ।
सागरा भेदमिच्छन्ति प्रलयेऽपि न साधवः ॥ ०३-०६
सागरा भेदमिच्छन्ति प्रलयेऽपि न साधवः ॥ ०३-०६
pralaye bhinnamaryādā bhavanti kila sāgarāḥ।
sāgarā bhedamicchanti pralaye’pi na sādhavaḥ॥ 03-06
sāgarā bhedamicchanti pralaye’pi na sādhavaḥ॥ 03-06
கடல் பொங்கும். பிரம்மாண்டமாக எழும்பும் அலைகளைக் காட்டி பிரமிக்க வைக்கும். அதற்கு இருபக்கமும் கரை உண்டு. கரையைத் தாண்டுவதில்லை. ஆனால் என்றோ ஒருநாள் கட்டுக்கு மீறிவிடும். வானத்துக்கும் பூமிக்குமாக பூதாகார பிரவாகமாக ஓவென்று படுவேகமாக பரவும். அது தான் பிரளயம். எங்கும் நீர். ஞானி அப்படியில்லை. என்றும் மாறாதவன். சகல சக்திகள் கொண்டவனாக இருந்தும் அவனுடைய நிதானத்தில், அமைதியில் எந்த மாறுபாடும் எப்போதும் இல்லை என்பது தான் ஆச்சர்யம்.
रूपयौवनसम्पन्ना विशालकुलसम्भवाः।
विद्याहीना न शोभन्ते निर्गन्धाः किंशुका यथा॥ ०३-०८
रूपयौवनसम्पन्ना विशालकुलसम्भवाः।
विद्याहीना न शोभन्ते निर्गन्धाः किंशुका यथा॥ ०३-०८
rūpayauvanasampannā viśālakulasambhavāḥ।
vidyāhīnā na śobhante nirgandhāḥ kiṃśukā yathā॥ 03-08
vidyāhīnā na śobhante nirgandhāḥ kiṃśukā yathā॥ 03-08
குலத்தளவே ஆகுமாம் குணம் என்று இப்போதெல்லாம் சொல்வதில்லை. தானாகவே அது வெளிப்படும். இளமை, அழகு, பணம், அந்தஸ்துள்ள குடும்பம் என்று ஊரே போற்றினாலும் படிப்பு வாசனையே இல்லாமல் எங்கோ எளிதில் பட்டத்தை வாங்கி பேருக்கு பின்னால் அடுக்கிக் கொண்டவன் சாயம் எளிதில் வெளுத்து விடும். துடைப்பத்துக்கு பட்டு குஞ்சலம்! ஊமத்தம்பூவுக்கு மணம் எங்கிருந்து வரும்? என்கிறார் சாணக்கியர்.
कामधेनुगुना विद्या ह्यकाले फलदायिनी।
प्रवासे मातृसदृशी विद्या गुप्तं धनं स्मृतम्॥ ०४-०५
प्रवासे मातृसदृशी विद्या गुप्तं धनं स्मृतम्॥ ०४-०५
kāmadhenugunā vidyā hyakāle phaladāyinī।
pravāse mātṛsadṛśī vidyā guptaṃ dhanaṃ smṛtam॥
pravāse mātṛsadṛśī vidyā guptaṃ dhanaṃ smṛtam॥
கல்வி என்பது காமதேனு என்று அறிந்து கொள் . காமதேனு கேட்டதெல்லாம் கொடுக்கும் பசு . எந்த காலத்திலும் கல்வியறிவு கை கொடுக்கும். அதற்கு நேரம் காலம் எல்லையே இல்லை. தாய் மாதிரி அது. குழந்தை எங்கு சென்றாலும் அதற்கு பசி என்று தானே அறிந்து பால் புகட்டுபவள் போல், கற்றோர்க்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு. மற்றவனுக்கு செருப்பு. கல்வி கண்ணுக்குத் தெரியாத பெரும் செல்வம். திருட முடியாதது.
यथा चतुर्भिः कनकं परीक्ष्यते
निघर्षणच्छेदनतापताडनैः।
तथा चतुर्भिः पुरुषः परीक्ष्यते
त्यागेन शीलेन गुणेन कर्मणा॥ ०५-०२
yathā caturbhiḥ kanakaṃ parīkṣyate
nigharṣaṇacchedanatāpatāḍanaiḥ ।
tathā caturbhiḥ puruṣaḥ parīkṣyate
tyāgena śīlena guṇena karmaṇā॥ 05-02
ஸ்புடம் போடுவது என்றால் அக்னியில் தங்கத்தை போட்டு அதை தேய்த்து, வெட்டி, முறுக்கி, அடித்து, அழகூட்டுவதால் தான் அது மேன்மை பெறுகிறது. AC ஷோ கேஸில் தானாக போய் அதிக விலை யோடு உட்காரவில்லை. இத்தனை கஷ்டங்களைத் தாங்கியபிறகே அதற்கு உயர்ந்த ஸ்தானம். ஒவ்வொரு மனிதனும் பொன் போன்றவன். தியாகம், அவன் குணம், அவன் பொறுமை, அவன் நம்பிக்கை, செயல்கள் அவனை உயர்த்துவதற்கு முன் அவன் தன்னை தானே பல சோதனைகளுக்கு உட்படுத்திக் கொண்டு ஒளிர்பவன்.
तथा चतुर्भिः पुरुषः परीक्ष्यते
त्यागेन शीलेन गुणेन कर्मणा॥ ०५-०२
yathā caturbhiḥ kanakaṃ parīkṣyate
nigharṣaṇacchedanatāpatāḍanaiḥ
tathā caturbhiḥ puruṣaḥ parīkṣyate
tyāgena śīlena guṇena karmaṇā॥ 05-02
ஸ்புடம் போடுவது என்றால் அக்னியில் தங்கத்தை போட்டு அதை தேய்த்து, வெட்டி, முறுக்கி, அடித்து, அழகூட்டுவதால் தான் அது மேன்மை பெறுகிறது. AC ஷோ கேஸில் தானாக போய் அதிக விலை யோடு உட்காரவில்லை. இத்தனை கஷ்டங்களைத் தாங்கியபிறகே அதற்கு உயர்ந்த ஸ்தானம். ஒவ்வொரு மனிதனும் பொன் போன்றவன். தியாகம், அவன் குணம், அவன் பொறுமை, அவன் நம்பிக்கை, செயல்கள் அவனை உயர்த்துவதற்கு முன் அவன் தன்னை தானே பல சோதனைகளுக்கு உட்படுத்திக் கொண்டு ஒளிர்பவன்.
दारिद्र्यनाशनं दानं शीलं दुर्गतिनाशनम्।
अज्ञाननाशिनी प्रज्ञा भावना भयनाशिनी॥ ०५-११
अज्ञाननाशिनी प्रज्ञा भावना भयनाशिनी॥ ०५-११
dāridryanāśanaṃ dānaṃ śīlaṃ durgatināśanam।
ajñānanāśinī prajñā bhāvanā bhayanāśinī॥ 05-11
ajñānanāśinī prajñā bhāvanā bhayanāśinī॥ 05-11
தானம் கொடுக்க கொடுக்க தான் தரித்திரம் தொலையும். துன்பம் வந்தால் நகுக என்றபடி தளராத நெஞ்சம் கொண்ட திட மனம் துக்கத்தை, துன்பத்தை அகற்றும். எதை அறியவேண்டும் என்ற அறிவு அஞ்ஞானத்தை விளக்கும். பாகுபாடுடன் ஈடுபடும் செயல் சொல் இரண்டும் பயத்தை போக்கும். .
जन्ममृत्यू हि यात्येको भुनक्त्येकः शुभाशुभम्।
नरकेषु पतत्येक एको याति परां गतिम्॥ ०५-१३
janmamṛtyū hi yātyeko bhunaktyekaḥ śubhāśubham।
narakeṣu patatyekaeko yāti parāṃ gatim॥ 05-13
ராஜாவோ, பிச்சைக்காரனோ, கோடிஸ்வரனோ, பரதேசியோ, ஒவ்வொருவனும் தனியாகத்தான் துணையின்றி பிறந்து தனியாக துணையின்றி மறைபவன். அவன் யாராக இருந்தால் தான் செய்த கர்ம பலனுக்கேற்றவாறு இன்பமும் துன்பமும் அனுபவிக்கிறான். அதன் பலனாக தனியாக மோக்ஷமோ, நரகமோ செல்கிறவன்.
सत्येन धार्यते पृथ्वी सत्येन तपते रविः।
सत्येन वाति वायुश्च सर्वं सत्ये प्रतिष्ठितम्॥ ०५-१९
satyena dhāryate pṛthvī satyena tapate raviḥ।
satyena vāti vāyuśca sarvaṃ satye pratiṣṭhitam॥ 05-19
satyena vāti vāyuśca sarvaṃ satye pratiṣṭhitam॥ 05-19
நம்மைத் தாங்கி வாழ்விக்கும் இந்த பூமி ஏதோ ஒரு சத்தியத்துக்கு கட்டுப்பட்டது. அது தான் ப்ரம்மம். அந்த சக்தியே சூரியனை சரியாக காலையில் எழுப்பி ஒளி வீசிவிட்டு சாயந்திரம் மறையச் செய்கிறது. காற்றை மிருதுவான தென்றலாகவும் சூறாவளியாக வும் வீசச் செய்கிறது. சர்வம் ப்ரம்ம மயம் ஜகத் என்பது புரிகிறதா? ப்ரம்மம் ஒக்கட்டே , ஒன்று தான். அதுவே பரம்பொருள் என்று நம்மால் இரு கை கூப்பி வணங்கப்படுவது.
No comments:
Post a Comment