Sunday, April 11, 2021

GEETHANJALI


 


கீதாஞ்சலி --  நங்கநல்லூர்  J K  SIVAN --தாகூர்  

44.  தென்றலில் நம்பிக்கை மணம்  
 
 44.  This is my delight, thus to wait and watch at the wayside
where shadow chases light and the rain comes in the wake of the summer.
Messengers, with tidings from unknown skies, greet me and speed along the road.
My heart is glad within, and the breath of the passing breeze is sweet.
From dawn till dusk I sit here before my door,
and I know that of a sudden the happy moment will arrive when I shall see.In the meanwhile I smile and I sing all alone.
In the meanwhile the air is filling with the perfume of promise.

கிழக்கு கடற்கரை  ஒய்வு  வீட்டில்  ஒரு வாரம்  விடுமுறை போல்  விஸ்ராந்தியாக  வீட்டு சாப்பாடு, கடற்கரை மணலில் நடை,  கரையோர மஹாளய தர்ப்பணம், கடல் நீரில்  சிண்டைப் பிய்க்கும் இனிய குளிர் காற்றில் ஸ்நானம். எங்கும் மனித, விலங்கு சுவடே இல்லாத ஒரு சில  கடல் காக்கைகள், மைனாக்கள் நட்போடு உரத்த குரலில் பாடல் பயிற்சி.  வீட்டில் தபதப என்ற சுவையான நிலத்தடி நீர் மேலே இருந்து தலையில் விழ  இன்னொரு ஸ்னானம்,  வயிறு நிறைய  பெரிய  இளநீர் வழுக்கை தான் ஆகாரம/   விளையாட  கலர் கலராக   சிறிய,  பெரிய,   பட்டாம் பூச்சிகள் .  என்ன  சுறுசுறுப்பு.!   எவ்வளவு வேகமாக  சுற்றி சுற்றி பறக்கிறது!    
 மாலையிலும் இதே மாதிரி நடை, இயற்கை ரசிப்பு,  கொசு இல்லாமல் இரவில்  கொஞ்சம் தூக்கம்.  அவ்வப்போது தலை நீட்டும்  இன்டர்நெட் கன்னக்க்ஷனில்   ஏதாவது செய்திகள், வீட்டு ஆசாமிகளோடு தொடர்பு.  மற்ற நேரத்தில் தனியாக  மாடியில் கடலைப்  பார்த்தவாறு, பிளாஸ்டிக் பின்னல் ஒற்றைக்  கட்டிலில் சயனம்.   கிருஷ்ணனைப் பற்றிய சிந்தனை. இப்படியே  ஒரு ஸப்தாஹம்  ஓடிவிட்டது.   கம்ப்யூட்டர் பக்கமே  போகவில்லை. இருந்தால்  தானே  போவதற்கு. 
 நங்கநல்லூர்  திரும்பியபோது தான் மீண்டும் கொரோனா, அரசியல் நாற்றம், வம்பு தும்புகள் மறுபடியும்  அன்றிரவு  முதல் ஆரம்பித்துவிட்டது.  அன்றாட  வாழ்க்கையிலிருந்து மாறுதல் எவ்வளவு அவசியம் என புரிந்தது.

தாகூர்  என்ன சொல்கிறார் இன்றைய  கீதாஞ்சலியில் என  ரசிப்போமா?

நான் சந்தோஷமாக இருக்கும்போது என்ன செய்கிறேன்  என்று சொல்கிறேன் கேள் கிருஷ்ணா. இதோ இந்த ஜன்னல் பக்கத்தில்  கருங்கல் சிலையாக அமர்ந்துகொண்டு வெளியே வேடிக்கை  பார்த்தவாறு மணிக்கணக்காக  என்னை மறப்பது. எதிரே ஒரு மண்  ஒத்தையடிப்பாதை   கண்ணில் படுகிறதே. அது நீண்டு எங்கே போகிறது?  அங்கே  வெளிச்சத்தை நிழல் தொடர்ந்து பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறதே.  பிசு பிசு என்று தூறல். அது நிற்பதற்குள் பெரிய இடியோடு மழை. சில  நேரம் நாள் முழுதும் கூட.   வெயில் காலம் இனி ஆரம்பிக்கும் முன்பு இப்படி கோடை மழை இங்கே வழக்கமாக உண்டு.

வானத்திலிருந்து தேவ தூதர்கள் நல்ல சேதி கொண்டு  வருவார்களோ ? எனக்கும்  ஏதேனும் அதில் உண்டோ?  எதிரே தோன்றும் தெருவில் தான் அவர்கள் வேகமாக செல்வார்களோ?   என்னைப்  பார்த்து சிரித்து தலை ஆட்டம்  எதற்கு?  என் இதயம் அமைதியாக, சந்தோஷம் நிரம்பி இருக்கிறது. சில்லென்று காற்று என் மூச்சோடு கலக்கிறது. சுகம் சுகம். சுகம்.  மென்காற்றின்   சுகமே, சுகத்தினுறு பயனே ... என்று  வள்ளலார் எழுதியது  அனுபவத்தில் தான்  புரிகிறது.   என்  எழுத்தில் அந்த சுகம்  பிடி படவில்லை.

சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை நான் இதோ   இங்கேயே  இந்த  கதவு ஓரத்தில்  வாசலைப் பார்த்துக் கொண்டே  ''இடிச்ச புளி ''.     என் சந்தோஷ நேரத்திற்காக  காத்திருக்கிறேன். கட்டாயம் வரும். அதுவரை சும்மா இருக்கமாட்டேன். இதோ சிரித்துக்கொண்டே இருக்கிறேனே.   எனக்குள்  நான்  பாடப்போகிறேன்.  என் பாட்டு   யாருக்கு பிடிக்கிறதோ இல்லையோ, எனக்கு பிடித்தே ஆகவேண்டும்.  இந்திக்கு நடுவே  தமிழ், அதற்கு இடையே  தெலுங்கு, கன்னடம், மலையாளம்    என்ன தோன்றுகிறதோ, வருகிறதோ அது.    அதற்கெல்லாம்  இடையே என்னை சுற்றி காற்றில்   கிருஷ்ணா உனைக் காண்பேன் எனும் நம்பிக்கை நறுமணம்  ஏராளமாக  தாராளமாக கலந்து வீசுகிறதே.  அது போதாதா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...