நன்றி கிருஷ்ணா, நன்றி 2 - நங்கநல்லூர் J K SIVAN
குழந்தைகள் வண்ணம் தீட்ட கலர் மெழுகு குச்சிகளை CRAYONS உபயோகிக்கும் பார்த்திருக்கிறீர்களா? அது நமக்கு எத்தனை பாடம் சொல்லித்தருகிறது! சிலது முனை கூறாக இருக்கும், சிலது அழகாக இருக்கும், சிலது மங்கிய கலரில் இருக்கும், சிலதுகளுக்கு விசித்திர பெயர்கள். எல்லாம் வெவ்வேறு வண்ணங்களில் உள்ளவை. எல்லாமே ஒரே அட்டைப்பெட்டிக்குள் தான் வரிசையாக இருக்கும். பாரதியார் பாடுவார் பல வர்ண பூனைக்குட்டிகள், தாய்க்கு எல்லாம் ஒன்றே தான் என்பது போல் அன்பு தான் எல்லாரையும் இணைக்கும் அட்டைப்பெட்டி. கிருஷ்ணா, நீ தான் அந்த அட்டை பெட்டி .. எல்லோரிடமும் உன் அன்பை, பாசத்தை சமமாக பொழிபவன்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எத்தனை அபூர்வ சக்திகளை வைத்திருக்கிறாய். எல்லையற்ற சமுத்திரம் போல் சக்தி இருந்தும் அதை உணராமலேயே வாழ்கிறோம். உலகில் மற்றவர்களுக்கு எத்தனை நன்மை செய்யலாம். நேற்று இறந்த ஒரு நடிகனை எடுத்துக் கொள்வோம். சிரிப்பு அவன் பிழைப்பு. அவன் வாழ்க்கை எப்படிப் பட்டது? இறந்த பிறகு அல்லவோ மற்றவர்கள் விழித்துக் கொள்கிறார்கள்? பச்சைப் பசேலென எங்கும் லக்ஷக்கணக்கான மரங்களை நட்டவன் அவன். யார் அவனுக்கு அதைச் செய் என்று சொல்லிக்கொடுத்தது. சொல்லிக்கொடுத்ததையெல்லாம் நாம் கடைப்பிடிப்பதில்லையே. அவன் உள்ளுணர்வு அவனை உந்தித் செலுத்தியது. நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யப்போகிறோம்?
வாழ்வில் முன்னேற நம்பிக்கை வேண்டும். உன் மீது, மற்றவர் மீது, நல்லவை மீது, நல்லவர்கள் மீது. அன்பு வெல்லும் என்ற சொல்லின் மீது.
சந்தோஷம் எங்கிருந்தோ வந்து குதிக்குமா ? நீ யார் என்பதா முக்கியம்? உன்னிடம் என்ன இருக்கிறது என்பதும் பொருட்டல்ல. நீ என்ன நினைக்கிறாய் என்பது தான் உன் சந்தோஷத்துக்கு அடிப்படை காரணம்.
மனதுக்குள் செல். வேண்டாத எண்ணங்களை களையெடு .அவை நீ செல்ல வேண்டிய பாதைக்கு தடங்கல்கள்.
ஆங்கிலம் ஒரு அழகான மொழி. அதை மற்ற மொழிகளில் சொல்லும்போது அதன் அழகு குறைந்து விடுகிறது. உதாரணமாக ஒரு குட்டி கதை சொல்கிறேன் கேளுங்கள் .
This is a story of four people called Everybody, Somebody, Anybody and Nobody. There was some important work that had to be done, and Everybody was sure that Somebody would do it. Anybody could have done it, but Nobody did it. Somebody got angry because of this, since it was Everybody's job. Everybody thought Anybody could do it, but Nobody understood that Everybody wouldn't do it. It ended with Everybody blaming Somebody as Nobody did what Anybody could have done
நேர்மையும் அநியாயமும் சிலருக்கு ஒன்றாகவே தோன்றுகிறது. அவர்கள் பேச்சில், நடத்தையில் ரெண்டும் கலந்து ஒன்றாகவே இருக்கிறது. அவர்களால் கொஞ்சம் கூட வித்யாசப்படுத்திக் கட்டமுடியாமல் ரெண்டிலும் அவர்கள் முகம் ஒரே மாதிரி மலர்ச்சியாகவே இருக்கிறதே! அநியாய பேச்சு செய்கையில் துளியும் நேர்மை, நியாயம் இல்லாவிட்டாலும் அவர்கள் அதைப்பற்றி மனச்சாட்சியின் உறுத்தல் இல்லாமல் சகஜமாக காண்பது எப்படி? யாரை ஏமாற்றுகிறார்கள் என்று யோசித்தால் பாவம் அவர்கள் தங்களைத்தான் ஏமாற்றிக் கொள்கிறார்கள் ஏனென்றால் மற்றவர்கள் அவர்களை பற்றி நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள்.
No comments:
Post a Comment