ஒரு வெளிப்படையான சிந்தனை - நங்கநல்லூர் J K SIVAN
அப்பாடா, ஒரு வழியா கெட்ட வார்த்தை பரிமாறல் யூ ட்யூப்பிலே இனிமே அவ்வளவா கேக்க வேண்டியி ருக்காது. எல்லாம் நம்மளை யாரு வழி நடத்தணும்னு, ஆளணும்னு தெரு நாய் சண்டை மாதிரி வெறி, போட்டி, த்வேஷம். எலெக்ஷன் டைம்லே தான் ஜாதி தலை தூக்குது. நான் என்ன ஜாதின்னு என்னை தவிர மற்றவன் நினைவூட்டறான். ஏன் ஏன்ஏன்? எங்களை ஆள அவ்வளவு போட்டி ஏன்? எங்களுக்கு நல்லது செய்யவா? இப்படி நம்பி நம்பி தான் 70 வருஷமா கிழடு தட்டி போயடுத்தே. இன்னுமா நமக்கு நப்பாசை.
அரசியல் பணம் சம்பாதிக்க ஒரு குறுக்கு வழி. அதில் தவறான பாதைகள் அநேகம் என்பதால் தான் சிலர் ராஜபோகம் நாம் மேலும் மேலும் கஷ்டம் துன்பம் இதெல்லாம் அனுபவிக்கிறோம் குடிகள் நலம், நலன் பற்றி எவனுக்கு கவலை. அவன் வசதி, சுயநலம், தனது குடும்ப முன்னேற்றம் இதற்கு நம்மை பலிக்கடாவாக்க தேடுவது தான் அரசியலில் ஐந்து வருஷத்துக்கு ஒரு முறை நல்ல சான்ஸ் இந்த எலெக்க்ஷன்.
எல்லோரும் கெட்டவர்கள் என்று எண்ண வேண்டாம். நல்லவர்கள் வளர, வாழ வழியில்லா தபடி செயதிருப் பது இந்த 70 வருஷ சாதனை. எதற்கு சுதந்திரம் பெற்றோம்? நமது வியர்வை யில், உழைப்பில் எவனோ வளரவா? இந்த தவறு ஒரு போதாவது நீக்கப்படவேண்டாமா? இலவசம் ஏன்? உழைத்து சம்பாதித்து வாங்கி உபயோகப்ப டுத்துவதில் உள்ள சுகம் அதை செய்தால் தான் புரியும்.
கட்சிகள், கொடிகள், கொள்கைகள் இருப்பதே அதிகம். வேறு எங்கும் இல்லாத அளவுக்கு பெருத்துவிட்டதால் அதால் ஒன்றோடு ஒன்று மோதி சண்டையிட்டு மண்டை உடைவது தான் நாம் காண்பது. இனி அவை வளர இடம் கொடுக்காதீர்கள். எல்லோருக்கும் சமமான வாய்ப்பு, சந்தர்ப்பம், வித்யாசமின்மை இருக்க எவரையும் வெறுத்து, உயர்த்தி தாழ்த்தி, எவரையும் ஒதுக்காமல் இருந்தாலே போதும். இதில் குளிர்காய்ப்பவர்களை அணுக விடாதீர்.
விலை வாசி குறையப் போவதில்லை. குறைக்க முடியாது. ஏன்? விளைச்சல், விற்பனை இரண்டுக்கும் இடையே பல கைகள் இருப்ப தை குறைத்தால் தான் விலை குறையும். விளைக்கிறவனே, உற்பத்தி செய்கிறவனே, உபயோகப்படுத்துபவனை நேரடியாக தொடர்பு கொண்டால் தான் அவனுக்கு சிறிது லாபம் போக நமக்கு விலை சல்லிசா கிடைக்கமுடியும். உற்பத்தி செய்கிறவனைத் தவிர நடுவிலே சம்பந்தமே இல்லாத பல பேர் தலையிட்டு, ஆளுக்கு ஆள் லாபம் ஒதுக்கினால் விலை ஏறத்தானே செய்யும். ஓரணா சமாச்சாரம் ஒரு ரூபா ஆயிடுது.
அதே மாதிரி, வீண் செலவு செய்யறதை நாம் குறைக்கணும். படாடோபம், டம்பம் , ஆடம்பரம் வேண்டாம். ஒரு விதத்திலே கொரோனா சில நல்ல பழக்கத்தை மறுபடியும் நமக்கு நினைவு படுத்திடுச்சி. ஒரு நல்லது கெட்டதுன்னா சம்பந்தப்பட்ட சில பேர் சேர்ந்தா போதும். மற்றவர்கள் இருந்த இடத்திலே இருந்தே வாழ்த்து இரங்கலோ சொல்லிட்டு போகட்டும். கல்யாணம் விழாக்கள்னு ஆளை கூட்டி வியாதியை பரவ விடவேண்டாம். அவஸ்தைப் பட விட வேண்டாம்.
சாப்பாடு விஷயத்திலும் ஒரு ஸ்வீட், ஒன்று ரெண்டு காய்கறி, ஊறுகாய், அப்பளம், சாதம், சாம்பார், பருப்பு, ரசம், பாயசம் மோர் போதும்டா சாமி. இதை சாப்பிட வயிறு இருந்தாலே அவன் பாக்கியசாலி. உணவுப் பொருளை வேஸ்ட் பண்ணவே கூடாது. அதே மாதிரி தெருவெல்லாம் எங்கே பார்த்தாலும் மின்சார கலர் விளக்கு எதுக்கு?
தெருவிலே விளக்கே இல்லாம எத்தனை நூறு வருஷம் அவஸ்தை பட்டு இருக்கோம். நிலா வெளிச்சத்திலே, லாந்தர் விளக்கு வெளிச்சத்திலே நடந்தவனுக்கு தான் அது தெரியும். தேவையான கண் கூசாத வெளிச்சம் போதுமே. மின்சாரம் எவ்வளவு சேமிப்பாகும்.
வெளியே போய் வந்தா கை கால் முகம் கழுவ ணும். வெளியே எதுவும் வாங்கி சாப்பிட வேண்டாம். வீட்டிலே நல்ல சுவையான பதார்த்தங்கள் சமைக்கலாம். பெண்கள் ஆண்கள் இருவருமே சமையல் கலை பழகணும். ரொம்ப அத்த்யாவஸ்யம். அந்தநாள் லே ஏன் இப்பவும் கூட மாசம் மூணு நாள் அவங்களுக்கு ரெஸ்ட் கொடுத்து சமைக்கற குடும்பங்கள் இருக்கு. அப்பா அம்மா சமையல் செயறதைப் பார்த்து குழந்தைகளும் கத்துக்கும்.
''எம் பொண்ணு சமைக்கமாட்டா. காபி போட கூட தெரியாது'' என்று அறிவிப்புடன் ''இதெல்லாம் தெரிந்த'' மாப்பிள்ளையைத் தேடும் பெண்கள் உண்மையில் வெட்கப்பட வேண்டும். நூலைப்போல சேலை, தாயைப்போல சேய் . இப்படிப்பட்ட பெண்கள் ஹிந்து என்று சொல்லிக்கொண்டு பெருமைப்பட வழியே இல்லை. ஹிந்து பண்டிகைகளுக்கு விசேஷமா ன வழிபாட்டு முறை, வித வித பிரசா தங் கள் செய்து நைவேத்தியம் செய்ய எப்படி தெரியும்?.
முதலில் பன்னிரண்டு தமிழ் மாதங்கள் பெயர் தெரியுமா அப்புறம் 27 நக்ஷத்ரம் தெரிந்து கொள்ளவோ, வளர்பிறை தேய்பிறை திதிகள் தெரியவோ வாய்ப்புண்டு.
பாபா ப்ளேக் ஷீப் நமக்கு போதும். வெள்ளைக் காரன் போய் 75 வருஷம் ஆகியுமா இன்னும் நானூறு வருஷ மோகம்? ஆத்திச்சூடி கொன்றை வேந்தன் என்றைக்கு கற்றுக்கொள்ளப் போகி றோம். நிறைய எழுதுகிறேன் ஏதோ ஒரு நம்பிக்கையில்.
இனி எந்த அரசாங்கம் வந்தாலும் லஞ்சம் கொடுத்து சலுகை பெறவேண்டாம். சட்டப்படி அணுகுவ தையே வழக்கமாக கொள்வோம். சீக்கிரம், குறுக்குவழி, என்று தேடும்போது தான் இந்த பிரச்னை தலை தூக்குகிறது. வரும் அரசாங்கமும் இனி எவரும் நேரில் வரவேண்டாம். எல்லாமே வீட்டிலிருந்தே கணினியில் பெற வழி செய்யவேண்டும். நாடு சுபிக்ஷப் பாதையை நோக்கி கொஞ்சமாவது முன்னேறவேண்டாமா? அதற்கு நம்மாலான ஒத்துழைப்பு தர வேண்டா மா?
ஒருநாளைக்கு ஒரு தடவையாவது அருகே உள்ள உங்கள் வழிபாட்டு ஸ்தலம், கோவில் சென்று ஒரு சில நிமிஷங்களாவது த்யானம் செய்யும் பழக்கம் உங்களுக்கும் உங்கள் குழந்தைக ளுக்கும் வந்தால் போதும் நமது ஆன்மீக சிந்தனை வளரும். தவறுகள் வாழ்வில் குறையும். தான தர்ம சிந்தனை வளரும். அன்பு அனைத்து உயிர்களிடமும் மலரும். அது தான் மோக்ஷ மார்க்கம்.
இன்னும் நிறைய சொல்ல விருப்பம். ஆனால் இப்போதைக்கு இது போதுமே.
No comments:
Post a Comment