ஸூர்தாஸ் -- நங்கநல்லூர் J K SIVAN
38. கண்ணனை பணி மனமே...!!
பக்தி பரவசத்தில் தன்னை இழந்து இறைவனோடு ஒன்றி அவனது ப்ரபாவத்தில் மூழ்கி ஆனந்த நிலையிலி ருக்கும் மஹான்கள் இந்த உலக சிந்தனை துளியும் இல்லாதிருப்பவர்கள். அவர்களது வாக்கில் சத்யம் எதிரொலிக்கும். அவர்கள் எழுத்தில் கற்பனையில் கூட உண்மை தான் பிரதிபலிக்கும். நம்மால் காண முடியாததை எளிதில் ஆனந்தமாக கண்டு ரசிப்பவர்கள், அனுக்ரஹிப்பவர்கள்.
அப்படி ஒருவர் தான் கண்ணற்ற ஸூர் தாசர். கண்ணன் அவர் மனதில் நிரம்பி, மூச்சாக அவரிடமிருந்து வெளிப்பட்டு பாடலாக வெளிவந்து எவராலோ எழுத்தில் இன்று நம் முன்னே புத்தகமாக நிற்கிறான். அவனை அந்த புத்தகத்தில் ரசிக்கவேண்டாமா? அதன் மூலம் சூர்தாஸின் இன்பத்தில் கடுகளவாவது நாமும் பங்கு கொண்டு அனுபவிக்க வேண்டாமா? ஆனால் அவர் பாடிய மொழியோ அதை எழுதியவரின் ஹிந்தி மொழியோ நமக்கு தெரியாமல் நம்மை வளர்த்து விட்டார்களே இந்த தமிழ் தமிழ் தமிழ் எனும் பற்றில்லாதவர்கள்.
ஸூர்தாஸ் சொல்கிறார்:
''ஹே மனமே வா உனக்கு ஒரு நல்ல வழி சொல்லித்தருகிறேன். அங்கே இங்கே ஓடாதே. அதோ பார் ஒளிவீசும் சிவப்பு நிறத்தில் ஏதோ தெரிகிறதே என்னவென்று புரிகிறதா? என்ன யோசனை? நானே சொல்கிறேன்.
ஓ. அது யாருடைய பாதம் என்று தெரியவில்லையா?அவன் யாரென்று யோசிக்கிறாயா ? அதுதான் அப்பா, நமது நந்தகோபன் மகன் கிருஷ்ணன். எவன் திருவடி துணை இருந்தால் பயங்கள் நீங்குமோ அவன்.
அரிது அரிது மானுடராகப் பிறத்தல் அரிது. அப்படிப் பிறந்து, இந்த வாழ்க்கை எனும் சம்சார கடலை தாண்ட வேண்டாமா? அதற்கு சாதுக்களின் சத் சங்கம் தேவை ஆயிற்றே.
இதோ என்னை பார். இரவு எது பகல் எது எனக்கு? எல்லாமே இருட்டு. .எல்லாமே வெளிச்சம். தூக்கம் ஏது? உடலில் உஷ்ணம் குளிர்ச்சி, மழை வெயில் படுவது தெரிகிறது. அனுபவிக்கிறேன்.

என் விஷயத்தில் அற்ப சுகத்தை, (என் விஷயத்தில் காகித பணத்தை தேடி,) நாடி எத்தனையோ வருஷங்கள் கடினமான கருமிகளுக்கு உழைத்தேன். என்ன பிரயோஜனம்?
நான் யார்? அந்த கோவிந்தனின் தாசானு தாசன். நவ வித பக்தி என்பார்களே அது எனக்கு தெரியாது என்றாலும் என்ன என்று தெரிந்து கொண்டேன். உங்களுக்கும் அதை தெரிந்து கொள்ள விருப்பம் உண்டா ?

அது என்ன நவ வித பக்தி? சொல்கிறேன்.
என் ஹரியின் பெருமைகளை கேட்பது,
அவன் பெருமைகளை நாவினிக்க சொல்வது, பேசுவது, ஸ்மரிப்பது,
கணநேரமும் விடாமல் அவனை நினைவினில் நிறுத்திக் கொள்வது,
பிரார்த்திப்பது,
அவன் செந்தாமரை திருவடிகளில் சரணடைவது,
நறுமண வாசமிகு மலர்களால் அவனை அர்ச்சிப்பது,
வாசனாதி திரவியங்களால் அவனை மகிழ்விப்பது,
அவனுக்கு உற்ற நண்பனாக சேவை புரிவது,
இதையெல்லாம் விடு..... என்னையே அவனுக்காக மறந்து இழந்து அவனுக்கு என் உயிர் உடல் பொருள் ஆவி அனைத்தும் அர்ப்பணிப்பது.... போதுமா ??
போதும் போதும் போதும்..... என்கிறார் சூர்தாஸ் இந்த அருமையானபாடலில்:
Bhajahoon re man sri nand nandan abhaya charan arvind hey
Durlabh manav janam satsange tar jaave bhav sindh re
Sheet Aatap Vatavariyat , ae din aavanijaani re
Biphale sevenu kripan durjan chapal sab sukh lagi re…
Sravan Kirtan Smaran Vandan Paadsevan Dasya re
Poojan Sakhijan Atmanivedan , Govind Das abhilashi re…
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare .
No comments:
Post a Comment