சாஸ்திரிகளின் முப்பது நாள் ராமாயணம்-2
நங்கநல்லூர் J K SIVAN
சில காரியங்களை நமக்கு செய்ய வேண்டியிருக் கிறது. நமக்கோ அந்த காரியங்களைச் செய்து பழக்கமில்லை. அனுபவமில்லை. செய்து கொடுக்கவும் வேறு யாருமில்லை என்ற நிலையில் அவசரமாக, அவசியமாக அந்த காரியம் நடக்கவேண்டும்போது என்ன செய்வோம்?. வேறுவழியில்லாமல் பகவானே என்று அவன்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு நாமே அந்த காரியம் செய்ய முனைவோம்.
ராமனுக்காக, ராமனையே வேண்டி, லக்ஷ்மணன் செய்த காரியம் தான் பஞ்சவடியில் ராமர் சீதாதேவி இருவரும் வசதியாக தங்க அருமையான ஒரு பர்ணசாலை அமைத்தது.
லக்ஷ்மணன் பெண்களை ஏறெடுத்தும் பார்க் காதவன். வாலி வதத்தின் பிறகு மனைவி தாராவை சந்திக்க நேரிடும் போது தலை குனிந்து மரியாதையோடு அவளிடம் சம்பாஷிக்கிறான். ரிஷ்ய முக பர்வதத்தில் சுக்ரீவன் ஒரு ஆபரண மூட்டையை ராமனிடம் கொடுக்கும்போது. கண்ணீர் மல்க ராமன்
''லக்ஷ்மணா, இதை எல்லாம் பார். இவை சஅனைத்தும் சீதையின் ஆபரணங்கள் தானே..என்று கேட்கும்போது..
''ஸ்ரீ ராமா, எனக்கு சீதா தேவி கால்களில் அணிந்திருந்த நூபுரங்கள், (மெட்டிகள்) ஒன்று தானே தெரியும், இவை அந்த தெய்வத்தினு டையது தான். நான் தினமும் வணங்கி வழிபடும் ஆபரணங்கள் என் தாயுடையவை தான், மற்றவை எனக்குத் தெரியாதவை..'' என்கிறான்.
பட்டாபிஷேகம் முடிந்து ராமராஜ்யத்தின் போது ஒரு அபவாதம் காரணமாக சீதையை ராமன் பூர்ண கர்ப்பிணியாக நாட்டை விட்டு அகற்றி அவள் வால்மீகி முனிவர் ஆஸ்ரமத்தில் அடைக்கலமாகிறாள். அப்போது அவளை அனுப்பும்போது ''லக்ஷ்மணா, பூரண கர்ப்பிணி யான சீதையை உன்னோடு அனுப்புகிறேன், தேரில் ஏற்றி அயோத்தி எல்லை கடந்து கானகத்தில் அவளை விட்டு விட்டு வா'' என்ற ராமன் கட்டளைக்கு பணிந்து சீதையை அழைத்துச் செல்லும் லக்ஷ்மணன் அவள் பூரண கர்ப்பிணி என்று கூட அவனது கண்களால் காண இயலவில்லை. அவ்வளவு பக்தி, சங்கோஜம் லட்சுமணனுக்கு என்கிறார் சாஸ்திரிகள் ராமாயணத்தில் ஸ்லோகங்களை மேற்கோள் காட்டி.
சீதை லக்ஷ்மணனைப் பற்றி அபிப்ராயம் கொடுக்க நேரிடும்போது,
''ஆஹா லக்ஷ்மணன் ஒரு சுத்த மஹா தீரன் வீரன். ஆனால் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசமாட் டான். ராமனுக்கு ஏதேனும் கஷ்டம், தீங்கு என்று வந்தால், அடேயப்பா, லக்ஷ்மணன் ஒரு எரிமலை அவனை அடக்க முடியாது '.என்கிறாள்.
கௌசல்யாவின் அந்தப்புரத்தில் கௌசல்யா வோடு லக்ஷ்மணன் இருக்கும்போது ராமன் உடனே வனவாசம் போகவேண்டும் என்று கேள்விப்பட்டவுடன் கொதிக்கிறான். ராமனின் ''தர்ம நியாயம்'' எல்லாவற்றையும் தகர்த்து பேசுகிறான்.
''அப்பா தசரதனும் அம்மா கைகேயியும் சேர்ந்து செய்த சதி திட்டம். நான் விட்டுவிடுவேனா அந்த கிழவனை, சங்கிலியால் பிணைத்து சிறையிடு வேன் இல்லாவிட்டால் கொன்றுவிடுவேன்''' என்று கத்தியவன் லக்ஷ்மணன்.
லக்ஷ்மணனோடு இரட்டையாக பிறந்த சத்ருக்ன னும் பின்னால் ஒரு சந்தர்ப்பத்தில் இதே எண்ணத் தை வெளிப்படுத்துகிறான். இருந்தா லும் ராமன் ஆணையிட்டால் கப் சிப் என்று லக்ஷ்மணன் உடனே அடங்கி கீழ்ப்படிபவன்.
''லக்ஷ்மணா, நீ அயோத்தி அரண்மனையிலேயே இரு. நான் திரும்பி வரும் வரை இந்த ராணி களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள் '' என்று ராமனே சொன்னபோதும்,
''அண்ணா, நான் முன்பே உங்களிடம் அனுமதி பெற்று உங்களோடு வன வாசம் செல்ல உத்தரவ ளித் துவிட்டீர்கள் அதை முதலில் நிறைவேற் றுவேன்'' என்கிறான்.
இந்திரஜித் மாய சீதையை உருவாக்கி அவளை வாளால் கொன்றபோது லக்ஷ்மணன் தர்ம நியாயத்தை எதிர்த்து ராமனிடம் பேசுகிறான். சீக்கிரத்தில் கோபம் அடைபவன், மூக்கு மேல் கோபம் லட்சுமணனுக்கு.
சித்ர கூடத்தில் இருக்கும்போது தான் குகன் மூலம் பரதன் படையோடு வரும் விஷயம் கேள்விப்படுகிறான் லக்ஷ்மணன். அது ராமனை தாக்கிக் கொல்வதற்கு என்று எண்ணம் தோன்றி கொதிக்கிறான். ராமன் அவனை சமாதானப் படுத்தி அவனது எண்ணத்தின் தவறுகளை உணர்த்தி யபோது வெட்கிக் குனிகிறான். மன்னிப்பு கோருகிறான். இந்த நேரத்தில் ராமன் ஒரு யுக்தியை கையாள்வது அசாத்தியமாக இருக்கிறது.
''லக்ஷ்மணா, ஒருவேளை உனக்கு ராஜ்ஜியம் ஆளவேண்டும் என்ற ஆசை மனதில் இருக்கு மானால் சொல். நான் பரதனை உனக்காக விட்டுக் கொடுக்கச் சொல்கிறேன். என்னால் அதை சுலபமாக செய்ய முடியும். இது பின்னர் ராமர் பட்டாபிஷேகம் போது சக்ரவர்த்தி கிரீடத்தை பரதன் லக்ஷ்மணன் சிரத்தில் வைக்க, லக்ஷ்மணன் விலகி ஓடுகிறான். ''அண்ணா, துளியும் எனக்கு ராஜ்ய பாரம் வகிக்க எண்ணமே இல்லை ''மன்னியுங்கள்'' என்கிறான்.
சுக்ரீவன் வானர சேனையைத் திரட்டி சீதையைத்தேடி செல்வதில் தாமதம் செய்ய ராமன் லக்ஷ்மணனை சுக்ரீவனிடம் அனுப்பு கிறார். கடும் கோபத்துடன் லக்ஷ்மணன் கையில் வில்லுடன் கிஷ்கிந்தை செல்கிறான். அவனது கோபத்தை தாரை கவனித்து அவனை உபசரித்து, வணங்கி, மன்னிப்பு கோறுகிறாள் . பின்னர் சுக்ரீவனின் நேர்மையான ஏற்பாடு களை கவனித்த லக்ஷ்மணன் அவனிடம்
'' உன்னைத் தவறாக எண்ணி விட்டேன், என்னை மன்னித்துவிடு நண்பா'' என்கிறான் என்று சாஸ்திரிகள் அற்புதமாக பிரசங்கத்தில் சொல்கிறார். சமஸ்க்ரித ஸ்லோகங்களை எடுத்துக் காட்டுகிறார்.
ராமன் கண்டிப்பானவர், ஒழுக்க சீலர். யாராக இருந்தாலும் முறை தவறினால் கோபிப்பவர். இரு சந்தர்ப்பங்களில் லக்ஷ்மணன் ராமரிடம் இவ்வாறு திருத்தப்படுகிறான் என்கிறார் சாஸ்திரிகள் தனது ராமாயண பிரசங்கத்தில். அது என்ன? பஞ்சவடியில் ''லக்ஷ்மணா, நான் வரும் வரை நீ இங்கே சீதையை பாதுகாத்துக் கொண்டு இரு' என சொல்லிவிட்டு ராமன் மாரீச மாயமானை தேடிச்செல்கிறான். ஆனால் மாரீச னின் பொய் குரலில் ஏமாந்த சீதை லக்ஷ்மண னை ராமனைத் தேடிச்செல் என்று விரட்டு கிறாள். அப்போது வேறு வழியின்றி அவளை தன்னந்தனியே விட்டு சென்ற லக்ஷ்மணனை கோபிக்கிறார் ராமர்.
உத்தர ராமாயணத்தில் ராமர் காலநேமியுடன் சம்பாஷித்துக் கொண்டிருக்கும்போது துர்வாசர் நான் உடனே ராமனை சந்திக்க வேண்டும் என்று கேட்டபோது லக்ஷ்மணன் அவரை ராமரை சந்திக்க அனுமதிக்க வில்லை. உங்கள் எல்லோ ரையும் சபித்துவிடுவேன் என்று துர்வாசர் கோபமாக சொல்லிவிட்டு செல்கிறார். சற்று நேரத்தில் இதை அறிந்த ராமர், துர்வாசரை தன்னிடம் அனுப்பாமல் அவமதித்ததற்காக லக்ஷ்மணனை நாட்டை விட்டு வெளியேற்று கிறார்.
ராமாயணத்தில் சில விஷயங்கள் நமக்கு தெரியாததாக இருப்பதெல்லாம் சாஸ்திரிகள் மாதிரி கூர்ந்த ஞானம் கொண்ட, சமஸ்க்ரிதத் தில் தேர்ந்த அறிவாளிகள் கண்களில் படுகிறது நமக்கு நல்லது. அவர்கள் அழகாக எடுத்துச் சொல்கிறார்களே.
தொடரும்
No comments:
Post a Comment