ஸூர்தாஸ் - நங்கநல்லூர் J K SIVAN
39. என் தோணி மூழ்குகிறதே...
ஹே, கிருஷ்ணா, நான் எதை சொல்வேன், என்னத்தை செய்வேன் சொல்? என் அகம்பாவம் என்னை ஆட்டிப்படைக்கிறது . . என் செயலுக்கு நான் பொறுப்பில்லாமல் எல்லாம் நடப்பதால் அதற்கு நீ தான் பொறுப்பேற்க வேண்டும். உனக்குத் தான் எல்லாமே தெரியுமே. என் செயலால் எது ஆகும்? என் தகுதி என்ன? என்னால் இயன்றது என்ன? நானாக நினைத்தது எல்லாம் நிறைவேறவா முடியும்? எனக்கு தெரிந்து என்னால் ஒரு நல்லது கூட இதுவரை நடக்கவில்லை. செக்கு மாடு போல் என் மனைவி, சுற்றம், குழந்தை குட்டி, என்று கெட்டியாக பிணைக்கப்பட்டிருக்கிறேனே.. பணத்துக்கு அடிமையாகி விட்டேனப்பா. எனக்கு எது செய்யவேண்டியது, எதை செய்யக்கூடாது என்று அறியும் அறிவு இல்லாமல் மழுங்கி போய்விட்டதே.
என்னை இங்கேயிருந்து கழட்டி விட்டு விடப்பா கண்ணப்பா, என் வாழ்க்கைத் தோணியில் நீர் நிறைந்து விட்டது இனி எதற்கும் இதில் இடமில்லை. ஒரு சிறு கடுகை ஏற்றினால் கூட முழுகிவிடும். எந்தநேரமும் நான் படகோடு நீரில் மூழ்கி மறையவேண்டும். வா வந்து காப்பாற்றி கரைசேர்த்து உன்னிடம் அழைத்துக் கொள் .

ஸூர்தாஸ் மீராபாய் போல் அற்புதமான கிருஷ்ண பக்தி கானங்கள் இயற்றி பாடியவர். இயற்கையிலேயே கண் பார்வை இழந்தவர்.
டில்லி பாதுஷா ஒளரங்க சீப் காலத்தில் வசித்தவர். கிருஷ்ணன் அவதரித்த மதுராவில் கிருஷ்ணா கத்ர தேவ் எனும் கிருஷ்ணன் ஆலயத்தில் வசித்து வாழ்ந்தவர். அது இப்போது கிருஷ்ண ஜென்ம பூமி என அழைக்கப்படுகிறது. முஸ்லீம் அரசாட்சியில் இந்த ஆலயம் அழித்து தரைமட்டமாக்கப்பட்டது ஒரு அநியாயமான செயல். என்ன செய்வது?
No comments:
Post a Comment