ஆத்ம ஞானம் .-- நங்கநல்லூர் J K SIVAN
திரும்ப திரும்ப யோசித்தால் சில அற்புதமான விஷயங்கள் தெரியவரும். அந்த உணர்வு ஆனந்தத்தைத் தரும். த்யானம், மெடிடேஷன் MEDITATION பற்றியெல்லாம் உடனே தாவ வேண்டாம்.. கொஞ்சம் கொஞ்சமாக மனதை அதற்கு தயார் செய்து கொள்ள முதலில் சில சில்லறை விஷயங்கள் நன்றாக புரியவேண்டும்.
உபநிஷதங்கள் எழுதுவதை கொஞ்சம் குறைத்துக் கொண்டுவிட்டேன். எங்கே போகிறது. கொஞ்சம் பின்னால் யோசித்து பார்த்துக் கொள்வோம்..
மனம் எங்கே இருக்கிறது ? இதற்கு விடை: நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது. எவரை நினைக்கிறோமோ அவரிடம் உடனே சென்றுவிடுகிறது. அதற்கு தூரம் தடை இல்லை. போக்குவரத்து ப்ராப்ளம் இல்லை. மாஸ்க் தேவையில்லை.
மனம் எங்கே இருக்கிறது.. மார்பிலா, நெஞ்சிலா? NO , தனியாக ஒரு இடத்தில் என்று இல்லாமல் உடல் பூரா இருக்கிறது. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.
தரை என்கிறோமே, நிலம், மண், அதன் பிராண சக்தி நமது உடலுக்கு உறுதியைத் தருகிறது. நாம் பிறப்பதை அதனால் தான் இந்த மண்ணில் விழுந்தோம், மஹான்களாக இருந்தால் ''அவதரித்தோம்''.

ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளே குட்டியாக ஒரு கட்டை விரல் உயரத்தில் ஒரு ஸூக்ஷ்ம சரீரம் உண்டு.
இதுவே ஒளி உடல் எனப்படும் .உருவம் இல்லை. ஜோதி ஸ்வரூபம். அது தான் உடலை விட்டு ஒருநாள் பிரிகிறது.
நாம் அனுபவிக்கிறோமே இன்ப துன்பங்கள், வலி, சுகம் எல்லா உணர்வும் நமது பிராண உடலால் உணரப் பட்டு அதன் உரையான இந்த தேகத்தில் பிரதிபலிக்கிறது. நமது பேச்சு, செயல் ஏதாவது நமக்கு ஆத்ம திருப்திக்காக என்று சொல்கிறோமே, அது தேகத்தோடு சேராது.
சில மகான்கள், சித்தர்கள் , படங்களைப் பார்க்கும்போது அவர்களைச் சுற்றி, அல்லது தலைக்கு பின்னால் மஞ்சள், ஆரஞ்சு நிறத்தில் பெரிய ஒளி ஒரு வட்டம் போட்டுக் காட்டுகிறார்களே அது தான் ஆத்ம ஒளி, AURA, கண்ணுக்கு தெரியாத இந்த ஒளி உடல் பல நூறு அடிகள் வரை அவர்களைச் சுற்றி பரவி இருக்கும். அதனால் தான் மஹா பெரியவா போன்றவர்களை பார்க்கும்போது, நம்மை அறியாமல், நமக்கு ஒரு இனம் புரியாத VIBRATION வைப்ரேஷன் , பய பக்தி, தோன்றுகிறது.

நமது உடல் அனுபவிக்கும் எத்தனையோ நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது. சூக்ஷ்ம சரீரத்துக்கு அது தெரியும்.
சில ஆண்கள் பெண்களின் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் அவர்கள் சமையல் செய்வது மூலமாக
ருசியாக வெளிப்படுகிறது. சிலர் தொட்டால் அந்த காரியம் துலங்கும். சிலரது பார்வையிலேயே நாம் புத்துணர்ச்சி பெறுகிறோம். சிலர் புன்னகைக்கும்போது எங்கோ பறக்கிறோம். இதெல்லாம் அவரிடம் உள்ள ஆத்ம சக்தியின் வெளிப்பாடு.
மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது. அதை வெள்ளைக் காரன் ஏதோ கொஞ்சம் சரியாக புரிந்துகொண்டு WILL POWER என்றான். அதை அனுபவிப்பது தேகம் எனும் உடல்.
பிரஞை, எனும் ஆத்ம உணர்வு, மனிதனின் உள்ளுணர்வு, என்று சொல்கிறோமே அது தான் நமக்கு எப்போதும் என்றும் மிகப்பெரிய வழிகாட்டி.
இன்னொரு முக்கியமான விஷயம் . நன்றாக எப்போதும் நினைவில் இருக்க வேண்டிய விஷயம்.
பிரஞை, எனும் ஆத்ம உணர்வு, மனிதனின் உள்ளுணர்வு, என்று சொல்கிறோமே அது தான் நமக்கு எப்போதும் என்றும் மிகப்பெரிய வழிகாட்டி.
இன்னொரு முக்கியமான விஷயம் . நன்றாக எப்போதும் நினைவில் இருக்க வேண்டிய விஷயம்.
மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல. அதன் உள்ளே கண்ணுக்கு தெரியாமல் இருந்து அதை ஆட்டிவைக்கும் ஆத்மா, ஒளி, உள்ளுணர்வு. பிரஞை. உடல் ஏதோ அடையாளத்துக்காக ஒரு பெயரைப் பெறுகிறது. உடல் உயிரை இழந்ததும் பெயர் காணாமல் போகிறது.
கோவில்களில், சித்தர் சமாதிகள் , அதிஷ்டானங்கள் ஏன் இருக்கிறது தெரியுமா? அங்கே ஆத்ம சக்தி ஜீவ சமாதியாக என்றும் இருக்கிறது. நான் மேலே சொன்னேனே மஹான்கள் சித்தர்களின் VIBRATION எனும் ஜீவ சக்தி நமக்கு கிடைத்து நாம் உயர்வதற்கு.
No comments:
Post a Comment