Tuesday, October 16, 2018

GNANAPPANA



ஞானப்பான J.K. SIVAN

சோகம் தந்த ஸ்லோகம்

4. அநித்தியம் அசுகம் லோகம்......

நாரதருக்கு தெரியாத விஷயமே இல்லை. அதனால் தான் சிறு சிறு கலகம் எப்போதும் நடந்து கொண்டே இருக்கும். அதனால் நன்மை தான். ஆகவே அது தொடரவேண்டும்.

ஒருமுறை நாரதர் யாருக்கோ உபதேசம் செய்தது நமக்கும் காதில் விழுகிறது. ''பக்தி ஒன்பது வகை. ஸ்ரவணம் (கேட்பது), கீர்த்தனம் (பாடுவது, தனியாகவோ சேர்ந்தோ), விஷ்ணு ஸ்மரணம் (சதா விஷ்ணுவை நினைப்பது, அதை தான் அவர் எப்போதும் செயகிறார்), பாதசேவனம் ( திருவடி தொழல் ), அர்ச்சனம் (நாமங்களால் போற்றுவது) வந்தனம் (பூஜை வழிபாடு) தாஸ்யம் (தன்னை சேவகனாக அர்பணிப்பது) சக்யம் (நண்பனாக பகவானோடு பழகுவது), ஆத்மநிவேதனம் (உள்ளம் உடல் இரண்டோ டும் சரணடைவது). இதில் ரொம்ப சுலபமானது கேட்பது படுவது.

ஞானப்பான அடுத்த ஸ்லோகம்:

ഇന്നലെയോളമെന്തെന്നറിഞ്ഞീലാ
ഇനി നാളെയുമെന്തെന്നറിഞ്ഞീലാ
ഇന്നിക്കണ്ട തടിക്കു വിനാശവു
മിന്ന നേരമെന്നേതുമാറിഞ്ഞീലാ

Innale yolam enthannu arinjeela,
Ini naleyum enthannu atrinjeela,
Ini kanda thadikku vinasamum,
Inna nearm enatharenjeela

Till yesterday we did not know it, Even tomorrow, we may not know it, The death to this trunk which is the body that we see today,
Know we not when it is . . We do not know what we were in the last birth, We do not know what we will be in the next birth, Even in this birth in this human body,
Know we not when all this is going to end.*

நமது வாழ்வே மாயம். தாமரை இலைத் தண்ணீர். பளபளக்கும் வைர வைடூர்யமாக ஜ்வலிக்கும் அந்த நீர்க்குமிழி எந்த கணமும் தாமரை இலையிலிருந்து ஜலத்தில் விழுந்து கலந்து, கரைந்து மறையும். இருக்கும் சில காலத்தில் சாஸ்வதமான அவனை நினைப்போம். எது நம்மை கேட்டு நடந்தது? எது நாளைக்கு நடக்கும் என்று யார் அறிவார்? நிகழகாலத்தை அவனுக்கு அளிப்போமே! நேற்று வரை நடஙக நிகழ்வுகள் எப்படி நடந்தது என்று யாரால் சொல்ல முடியும்? நாளை என்ன நடக்கும் என்றாவது தெரியுமா? இதோ எழுதிக்கொண்டு இருக்கிறேன், நீங்கள் படித்துக் கொண்டு இருக்கிறீர்கள். அடுத்த கணம் நமக்கு, இந்த பூத உடலுக்கு என்ன நேரும் என்று ஒரு சென்டிமீட்டர் நீள விஷயம் நமக்கு தெரியுமா? சாஸ்வதமில்லாத இந்த காற்றடைத்த பை பொய்யாக மாறலாமே. ஏதோ ஒரு காரணத்தால் தான் பகவான் நமக்கு முற்பிறவி ஞாபகமோ அடுத்த பிறவி பற்றி ஏதாவதோ தெரியாமல் வைத்திருக்கிறான். நாம் வாழும்வரை நமது இப்போது நடக்கும் வாழ்க்கை பிரச்னையே பெரிய மலைபோல் இருக்கிறதே...'' என்கிறார் பூந்தானம். ஒரு நல்ல யோசனை. இப்போது இருக்கிற நேரத்தில் கிருஷ்ணனை கெட்டியாக பிடித்துக்கொள்வோம். அவனிருக்க பயமேன்?

മുന്നമിക്കണ്ടവിശ്വമശേഷവും
ഒന്നായുള്ളൊരു ജ്യോതിസ്സ്വരൂപമായ്
ഒന്നും ചെന്നങ്ങു തന്നോടു പറ്റാതെ
ഒന്നിനും ചെന്നു താനും വലയാതെ

Munnam ikkanda viswam aseshavum
Onnaayulloru jyothi swaroopamaay

this whole world would gradually dissolves into one “Jyothi swaroopam” (an ethereal light, God, the One) during flood (munnam in this verse is referred to as flood). This ethereal light that alone remains at the end, merely being a witness to everything, neither getting attached to anything nor letting anything else to attach themselves to it…

தோற்றம் என்றால் மறைவு என்பது சொல்லாமல் தெரிவது. உண்டானது எல்லாமே இல்லாததாகிவிடும். நடுவில் சில காலம் மாயையால் சாஸ்வதமாக நிலைத்த்திருப்பது போன்ற பொய் எண்ணத்தை வளர்க்கும். எல்லாமே ஒருநாள் ஜோதி ஸ்வரூபத்தில் கலக்கும். ஆக்கம் அழிவில் நிறைவுறும். அதை தான் மஹா பிரளயம் என்போம். ஒன்று என்றும் அழியாமல் சிறிய தீபமாய் நம்முள் என்றும் இருந்து மற்ற பிறவிகளிலும் நம்மோது தொடரும் அது ஒன்றே சாஸ்வதம். அதுவே ஆத்ம தீபம். சாக்ஷியானது. ஏதோடும் இணையாமல் சேர்ந்து இருப்பது. ஒன்றே பலவாக தோன்றுவது.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...