Thursday, October 4, 2018

NALA CHARITHRAM



ஐந்தாம் வேதம். (மஹா பாரதம்)          J.K. SIVAN 
நள  சரித்திரம் 

               
 ''வித்தை பரிமாறல்''

ருது பர்ணனுக்கு பரம சந்தோஷம்.  ஆஹா  இந்த  தேரோட்டி   எவ்வளவு வேகமாக தேர் ஓட்டுகிறான்? நிச்சயம் நாம் தமயந்தியை நாளை அவளுடைய  ஸ்வயம்வரத்தில் சந்திக்கப்போகிறோம். அவளுக்கு என்னை  நிச்சயம் பிடிக்கலாம். அதற்காகத்தானே  உடனே வர ஆளை  அனுப்பி இருக்கிறாள்!  எல்லாம் இந்த அற்புத தேரோட்டியால்  எனக்கு   இது சாத்தியமாயிற்று. இல்லையென்றால்  நான் எப்படி உடனே  விதர்பா ராஜ்யம் செல்லமுடியும்?.   

தேர் வெகு வேகமாக  பறந்து கொண்டிருந்தது.  பின்னால்  தேரில் உட்கார்ந்து கொண்டிருந்த ருதுபர்ணனின்   தேரின் வேகத்தில், காற்றில் காற்றில் பறந்து,  அவன்  மேல் இருந்து கீழே  விழுந்து விட்டது. 

தேரோட்டி, கொஞ்சம் தேரை நிறுத்தப்பா. என் அங்கவஸ்திரம் கீழே விழுந்து விட்டது  அதை எடுத்துக்கொடுப்பா''  என்றான்  ருது பர்ணன். அவன் சொல்வதற்குள்  

 ''ராஜா   நீங்க  சொல்லி முடிக்கிறதுக்குள்ளே  குதிரைகள்  24 காததூரம்  வேகமாக பறந்துவிட்டதே. அங்கவஸ்திரத்தை மறந்து விட வேண்டியது தான் ''  என்று பதில் சொல்கிறான் நளன் . அவ்வளவு வேகமாக  தேர் ஓட்டுபவன்  நளன் என்று   இதை வெகு அழகாக  புகழேந்தி  நளவெண்பாவில் பாடுகிறார் பாருங்கள்:

''மேலாடை வீழ்ந்த தெடுவேன்றான் அவ்வளவில்
நாலாறு காதம்  நடந்ததே''

ருதுபர்ணன்  கணக்கில்  சமயோசிதத்தில்  கெட்டிக்காரன், அதேபோல்  பகடைக்காய்  விளையாட்டிலும்  சரியான எண்ணை  முன் கூட்டியே கணக்கிட்டு  சொல்பவன்.  போகும் வழியில்  ஒரு மரத்தில்  எத்தனை காய்கள், எத்தனை இலைகள்  என்று  சொல்கிறான். உனக்கு வேண்டுமானால்  நீயே  எண்ணிப்பார்''  என்கிறான்.  தேரை நிறுத்திவிட்டு  நளன்  அந்த மரத்தை வெட்டி  இலையும், காயும் எண்ணிப்பார்க்க  அது  ருதுபர்ணன்  சொன்ன  எண்ணிக்கையிலேயே இருந்தது. 

 ' மஹாராஜா  உங்களால்  எப்படி இவ்வளவு துல்லியமாக  சொல்ல முடிந்தது என்று நளன்  ஆச்சர்யத்தோடு கேட்க, எனக்கு  அந்த  ரகசியம், பகடைக்காய் எண்  என்ன விழும் என்று  போடும் கணக்கில் தெரியும்'' என்கிறான்  அரசன்.  

''எனக்கு அதை சொல்லிக்  கொடுங்கள் என்று  நளன்  கேட்க,  
 ''அதற்கு பதில்  நீ எனக்கு  எப்படி இவ்வளவு வேகமாக குதிரைகளை ஓட வைப்பது என்ற அச்வ சாஸ்த்ரத்தை கற்றுக்கொடு''  என்று கேட்கிறான் ருது பர்ணன். 

சூதாட்டத்தை சரியாக வெற்றிகரமாக  ஆட அப்போது  நளன்  ருதுபர்ணனிடம்
  கற்றுக்கொள்கிறான்.    நளன்  சூதாட்டத்தை  வெற்றியாக ஆட கற்றுக்கொண்டபோது  கலி அவன் உடலை விட்டு வெளியேறினான்.

''நளா , என்னை மன்னித்துவிடு.  தமயந்தி  இட்ட சாபத்தில், கார்கோடகன் உன்னுள்  வைத்த விஷச் சூட்டில்,   எரிச்சலில், நான்  இதுவரை பட்ட பாடு போதும்.  இனி உன்னை நெருங்கமாட்டேன்.  நீ  நன்றாக  பழையபடி பேரும்  புகழும் பெற்று வாழ்வாய்'' என்றான் சனி . கலி  நீங்கி விட்டான்  என்றாலும் நளன்  இன்னும் தனது சுய உருவை எடுக்கவில்லை. கார்கோடகன் கொடுத்த வஸ்திரத்தை  ஜாக்கிரதையாக தன்னிடம் வைத்துக் கொண்டிருந்தான். 

தேர் குறித்த நேரத்தில் விதர்பா ராஜ்ஜியம் அடைந்து பீமராஜன் அரண்மனை வாசலில் நின்றது.  


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...