குந்தியின் பிரார்த்தனை 6 J.K. SIVAN
குந்தி கண்ணனை மனத்திலே இறுக்கி பிடித்து வைத்துக்கொண்டவள். இருந்தாலும் கிருஷ்ணன் ''அத்தை, அப்போ, நான் போய் வரட்டுமா?'' என்ற அவன் கேள்வி அவளைத் துளைத்தது. இவனையா, பிரிவதா, அது முடிவதா? நினைத்துக்கூட பார்க்க முடியவில்லையே என ஏங்கி ''நீ இங்கேயே இரு.... என ''விடை'' கொடுக்கிறாள். பழசை எல்லாம் நினைக்கிறாள், கெஞ்சுகிறாள்..வேண்டுகிறாள்....
अपरे वसुदेवस्य देवक्यां याचितो sभ्यगात् ।
अजस्त्वमस्य क्षेमाय वधाय च सुरद्विषाम् ॥१८॥ 8.33
apare vasudevasya
devakyāṁ yācito ’bhyagāt
ajas tvam asya kṣemāya
vadhāya ca sura-dviṣām
''ஆமப்பா , கிருஷ்ணா, நீ பிறப்பு இறப்பு அற்றவன் தான். என்றாலும் வசுதேவன் தேவகி வேண்டியதால் அவர்களுக்கு மகனாக பிறந்தவன். தேவர்களை காக்க ராக்ஷஸர்களை அழிக்க இப்படி ஒரு வேஷம் உனக்கு என்று அறிந்து கொண்டேன். அது எப்படி உன்னால் மட்டும் பக்தர்கள் எல்லோரையும் திருப்தி பண்ண முடிகிறது?
भारावतारणायान्ये भुवो नाव इवोदधौ ।
सीदन्त्या भूरिभारेण जातो ह्यात्मभुवार्थित: ॥१९॥ 8.34
Bharava thaaranayanye bhuvo naava ivodhadhou,
Seedhanthyaa bhoori bharena jatho hyatha bhuvathithaa.17
''கிருஷ்ணா, யார் யாரோ சொல்லி நான் கேட்டேனே. நீ ப்ரம்மாவின் பிரார்த்தனையால் இந்த பூமியில் அவதரித்தவனாம். எப்படி நீர் பரப்பில் செல்லும் படகு எல்லா சுமைகளையும் சுமந்து அக்கரைக்கு கொண்டு செல்கிறதோ நீ இந்த உலக வாழ்வில் என் போன்றோர்களுக்கு எல்லாம் விளையும் துன்பச்சுமையை சுமப்பவன், மோக்ஷத்திற்கு கொண்டு செல்பவன்.. உன்னை எப்படி போற்றுவேன்?
.
''இப்போது மட்டும் அல்ல, எப்போதுமே எனக்கு தெரியும் . இந்த பூமியில் பாரம் பெருகிவிட்டது. பூமாதேவி அலறினாள். என்னால் அநீதி அக்கிரமம் அதர்மம் அளவு கடந்துள்ளதை சுமக்க முடியவில்லை. என்னால் பொறுக்கமுடியவில்லையே, பெருமானே, வாருங்கள் என் துயர் தீருங்கள் என்றாள். படைக்கும் கடவுள் ப்ரம்மா, உன் மகன், ''அவசியம் நீங்கள் தலையிட்டு பூமாதேவியின் துன்பம் தவிர்க்க வேண்டும்'' என்றான். நடுக்கடலில் செல்லும் படகு அனைவரது சுமையும் தூக்கி ஆழமான கடலைக் கடக்க உதவுவது போல் பூமாதேவி நம்மை சுமக்கிறாள். ஒரு நேரத்தில் படகின் சுமை , பாரம், அதிகமானால் முழுகும் அபாயம் உண்டே! வா கிருஷ்ணா வா என் சுமையைக் குறை. நானே காணாமல் போய்விடுவேன் போல் இருக்கிறதே என்று வேண்ட, நீ உடனே பூமிக்கு சென்று அவதரித்து அக்ரமக்காரர்களை அழித்து, அதர்மத்தை ஒடுக்கினாய் கிருஷ்ணா. பூமி பாரத்தை குறைத்த நீ காருண்யமூர்த்தி அல்லவா?
भवे sस्मिन्क्लिश्यमानानामविद्याका मकर्मभि: ।
श्रवणस्मणार्हाणि करिष्यन्नति केचने ॥२०॥ 8.35

भवे sस्मिन्क्लिश्यमानानामविद्याका
श्रवणस्मणार्हाणि करिष्यन्नति केचने ॥२०॥ 8.35
bhave ’smin kliśyamānānām
avidyā-kāma-karmabhiḥ
śravaṇa-smaraṇārhāṇi
kariṣyann iti kecana
இன்னும் கூட உன்னைப் பற்றி சில அருமையான விஷயங்கள் அறிந்தேன் கண்ணா. நீ அஞ்ஞானிகள், அறியாதவர்கள், என்னைப்போல உலக நாட்டங்களின் ஆசையாலும், உணர்ச்சிகளாலும், அறியாமையாலும் அவதிப்படுவர்களை உன்னைப் பற்றி கேட்க, தெரிந்துகொள்ள, வழிபட மாற்றிக்கொள்ள, திருந்த உதவுபவனாம்
கண்ணா, நான் கல்வியறிவு அற்றவள். பேதை. ஆனால் ஞானிகள் ரிஷிகள், பெரியோர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இந்த பூமியில் அஞ்ஞானத்தை போக்கவும், பக்தியை பெருக்கவும் சுருதி, ஸ்ம்ருதி நிதித்யாஸம் சரணாகதியை மக்கள் உணர, சம்சார துன்பங்களிலிருந்து விடுபட குருவாக நீ அவதரித்தாய் என்று சொல்வதை அறிவேன்.
शृण्वन्ति गायन्ति गृणन्त्यभीक्ष्णश: स्मरन्ति नन्दन्ति तवेहितं जना: ।
त एव पश्यन्त्यचिरेण तावकं भवप्रवाहोपरमं पदाम्बुजम् ॥२१॥ 8.36

śṛṇvanti gāyanti gṛṇanty abhīkṣṇaśaḥ
smaranti nandanti tavehitaṁ janāḥ
ta eva paśyanty acireṇa tāvakaṁ
bhava-pravāhoparamaṁ padāmbujam
ஆமாம் கிருஷ்ணா, நான் இப்போது நன்றாக புரிந்துகொண்டுள்ளேன். உன்னைப்பற்றி செவிகுளிர கேட்பதாலும், உன் நாமங்களை ஓதுவதாலும் , உன்னை ஸ்மரணம் செய்து கொண்டு இருப்பதாலும் வெகு சீக்கிரம் அவர்களை உன் தாமரைத் திருவடிகளை அடையச்செய்வதோடு, இனி பிறவியற்று இன்பமாக மோக்ஷம் அடையச் செய்பவன்
ஓ, கண்ணா, இதை கட்டாயம் நான் உரக்க சொல்வேன். யார் யாரெல்லாம் உன்னை ஸ்மரிக்கிறார்களோ, பாடுகிறார்களோ, புகழ்கிறார்களோ, கேட்கிறார்களோ, உச்சரிக்கிறார்களோ, விடாமல் நினைக்கிறார்களோ, நீ அவர்களை ரக்ஷிப்பவன். மறுபிறவி அற்று மோக்ஷமாகிய உனது தாமரைத் திருவடிகளை அடையச் செய்பவன். இது எனக்கே தெரியும்போது கற்றுணணர்நத ஞானிகள், பண்டிதர்கள், பக்திமான்களுக்கு தெரியாதா?

No comments:
Post a Comment