கடவுளின் விசித்திர சிருஷ்டி பெண்
J.K. SIVAN
ஆணை விட பெண் குழந்தை ரொம்ப சீக்கிரம் உடல் மாறுபாடுகளை பெறுகிறது. இது சிருஷ்டி ரகசியம். ஒரே மாசத்தில் அடையாளம் காண முடியாதபடி மாறுபடுவாள் . அவள் உடலில் ஹார்மோன்களும் இயற்கையின் கோலமும் நிறைய வேறுபாடுகளை உண்டாக்குகிறது. அவள் பேச்சு வார்த்தை நடவடிக்கையில் வித்யாசம் தெரியும்.
பெண்கள் மனத்தால் சிந்திப்பதைவிட இதயத்தால் சிந்திப்பவர்கள் என்று கூட சொல்லலாம். அதனால் அவர்கள் சட்டென்று உணர்ச்சி வசப்படுபவர்கள். உணர்ச்சிகளை அடக்கமுடியாமல் வெளிப்படுத்துவது பெண்கள் தான். ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை பெண்களால் தான் செய்ய இயலும். பாருங்களேன். ஆபீஸ் போய்க் கொண்டு அங்கே வேலையில் கெட்டிக்காரி என பெயர் எடுத்து, வீட்டில் நிர்வாகம் பண்ணிக் கொண்டு, கணவனை விரட்டி வேலை வாங்கி, குழந்தைகளை கெடுபிடி செயது படிக்க வைத்து அம்மா என்றால் நடுங்கும்படி செயகிறார்களே..இதில் நண்பிகளோடும் பேச அரட்டை அடிக்க கொஞ்சம் நேரம் வைத்துக் கொள்கிறார்கள்.
அடேயப்பா ஒரே நேரத்தில் எத்தனை ரூபங்கள்! ஆபீசர், அதிகாரி, அம்மா, மனைவி, பாட்டி, பெண், தங்கை அக்கா, கோபக்கார நாத்தனார்..... அத்தை....ஒவ்வொரு ரோலும் வித்யாசமானது.
''படுத்த படுக்கையை ஏன் சுற்றி வைக்க வில்லை என்று கத்த ஆரம்பித்தால் ராத்திரி ஏன் வாசலில போஸ்ட் பாக்ஸ் லிருந்து லெட்டர் எடுக்கவில்லை, மாடிப்படி லைட் அணைக்க வில்லை , கிகிச்சன் வெண்டிலேட்டர் மூட வில்லை பூனை வருமே'' வரை அவளைப்போல் கண்டிப்பாக ஆணால் இருக்கமுடியாது.
பழசை நினைப்பதில் அவள் புலி. நம்ம கல்யாணத்தில் உங்க அத்தை பண்ண அக்கிரமம் கொஞ்ச நஞ்சமா...எங்கப்பாவை என்னமா திருகினாள் பாவம் அவருக்கு உங்க அத்தை என்றாலே சிம்ம சொப்பனம்.... இது முப்பது வருஷ சரித்திரம்.
இன்னுமொரு குணாதிசயம் தன்னை மற்றவரோடு ஒப்பிடுதல்... அதனால் மற்றவளிடம் குறை கண்டுபிடிப்பது, சொல்வதில் தனி சுகம். சில பெண்கள் தாங்கள் பிறந்ததே தப்பு என்று குறை பட்டுக் கொள்ளும் அலாதி குணம் படைத்தவர்களாக இருப்பது ஏன்? புரிந்து கொள்ள முடியாதவர்கள் பெண்கள்.
எளிதில் பழகுவதில் பெண்கள் தான் முதல். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி குடும்பத்தாரோ, நட்பு வட்டாரமோ இல்லையென்றால் துர்வாசிகளாக மாறுவார்கள். சின்ன விஷயங்களே படார் என்று வெடிக்க வைக்கும்.
''ஏன்னா நான் இப்போ எல்லாம் குண்டாவா இருக்கேன்?'' இந்த கேள்விக்கு கணவர்கள் பதில் சொல்லுவது ரொம்ப சிரமமானது. தலைக்கு மேல் கத்தி
.“ இல்லையே நீ ஒல்லிக்குச்சி.''
''கூசாம பொய் சொல்றேள்
சரி நீ கொஞ்சம் பூசினமாதிரி தான் இருக்கே.... இப்படி சொல்லும் கணவனுக்கு ரெடியாக காத்திருக்கும் பதில்
''ஆமாம் உங்க கண்ணுக்கு நான் அப்படி தான் தெரிவேன் உங்க ஆபிஸ் சரஸ்வதி தான் ரம்பை மேனகை உங்களுக்கு, யாரைப்பாத்தாலும் வழியர குணம் உங்க குடும்பத்திலேயே எல்லோருக்கும் உண்டே''
.
ஆகவே அவள் கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் ''இதோ வருகிறேன் என்று வெளியே போடுபவன் அப்போதைக்கு தப்பிய சுதந்திர இந்தியன்.
தன்னைப்போலவே வீட்டில் எல்லோரும் விடுவிடுவென்று சுணங்காமல் வேலை செய்ய எதிர்பார்ப்பவள் பெண். அந்த எதிர்பார்ப்பு இதுவரை திருப்தியை தந்ததில்லை என்பது சத்யம். தன்னை எவரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று புரிபடாமல் இருப்பவள் பெண்.
No comments:
Post a Comment