Friday, October 12, 2018

SITHTHARGAL

அம்மணி அம்மன்.3     J.K. SIVAN 

  '' உள்ளேயும்  வெளியேயும் அம்மணி....''

எத்தனையோ  வீட்டு வாசல் ஏறி இறங்கி ஆலய கோபுர நிர்மாணத்துக்கு வசூல் செய்த அம்மணி அம்மாள் நிதி நிலை பற்றாக்குறையால்  மைசூர் சென்று மஹாராஜா அரண்மனை வாசலில் உட்கார்த்தி வைக்கப்பட்டாள் அல்லவா?.  காவலாளி அவளை துளியும் லட்சியம் பண்ணவில்லை. உள்ளே அனுமதிக்க வில்லை.  காலையிலிருந்து மதியம் வரை அங்கேயே அவன் எதிரில் அமர்ந்திருந்தாளா ?


அது தான் இல்லை.  அம்மணி அம்மாள்  உயர்ந்த சிவபக்தை. ஜபதப சக்தி வாய்ந்த சித்தர் பெண்மணி அல்லவா.  அவள் அங்கே வாசலில் இருந்த அதே நேரம் அரண்மனையில் தர்பார் மண்டபத்தில்   மகாராஜா சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த போது  அவன் எதிரில் நின்றாள். ஒரே நேரத்தில் பல இடங்களில் அதே ரூபத்தோடு உடலோடு தோன்றும் சக்தி சித்தர்களுக்கு உண்டே.  

''யார் இந்த பெண்?  எப்படி நமது தர்பார் மண்டபத்தில் நுழைந்தாள்? எப்படி அனுமதி கிடைத்தது?'' ராஜா ஆச்சர்யமாக கேட்டார்.  யாருக்கும் பதில் தெரியவில்லை. 

அம்மணி நேராக மஹாராஜாவிடம் பேசினாள் :  ''மஹாராஜா, உங்கள் அனுமதி கேட்டேன். உள்ளே அனுமதிக்க வில்லை. வாசலில் காவலாளி என்னை உட்கார வைத்திருக்கிறார். நான் அங்கும் இருக்கிறேன் இங்கும் இருக்கிறேன். மிக்க அவசரமாக அவசியமாக உங்களை சந்திக்க பரமேஸ்வரன் கட்டளை. அதனால் இங்கே வந்திருக்கிறேன் என்றாள் ''

ராஜாவுக்கு ஆச்சர்யம். கூப்பிடு அந்த காவலாளியை இங்கே ?''  உத்தரவிட்ட மறுகணம் காவலாளி நடுங்கியவார் உள்ளே அரசன் முன் வந்தான்.

ராஜா  எதிரே  தான் வெளியே உட்காரவைத்த பெண் நிற்பதை கண்டதும் அவனுக்கு ஆச்சர்யம்.

'' எப்படி நீ  என்னை ஏமாற்றிவிட்டு   ஒரு  ஈ எறும்புகூட நுழையமுடியாத இந்த அரண்மனை தர்பார் மண்டபத்திற்குள் நுழைந்தாய் என்று வாளை  உருவினான்'' காவலாளி.

மஹாராஜாவுக்கு  சந்தேகமும் ஆச்சர்யமும்... ''இத்தனை நேரம் என்னோடு இங்கே பேசிக்கொண்டு இருந்த நீ வாசலிலுமா அமர்ந்திலிருக்கிறாய்?''   உடனே தானே வெளியே  சென்று பார்த்தார்.  சோர்வுடன்  அம்மணி அம்மாள் மரத்தடியில் காவலாளி காட்டிய இடத்தில் இன்னும் அமர்ந்திருந்தாள்...   அம்மணியை  'வா அம்மா  என்னோடு'' என்று ராஜாவே அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.  உள்ளே  மஹாராஜாவுடன் தர்பார் மண்டபத்தில் இருவரை பேசிக்கொண்டிருந்த  அம்மணியைக்  காணோம்.

மைசூர் மகாராஜாவுக்கு  தன் எதிரே ஏழ்மைக் கோலத்தில் நிற்கும் அம்மணி அம்மாள் சாதாரண பெண் அல்ல, உயர்ந்த சக்தி வாய்ந்த ஒரு சித்தர் என்று புரிந்தது. வணங்கினார்.  அவர் சிவ பக்தர்.  அருணாச்சலேஸ்வரரை அறிவார்.  அவரே தன் எதிரில் அம்மணி அம்மாளோ?''  என யூகித்தார்.  உபசாரங்கள் பலமாக நடந்தன. பட்டுச் சேலை பரிசளித்தார்.  பட்டத்து யானை மேல் அமர்த்தி  பொன்னும் பொருளும் குதிரை ஒட்டகங்கள் மேல் ஏற்றி திருவண்ணாமலை நோக்கி  பரிவாரம் நடந்தது.

மைசூர் மஹாராஜா  சிறந்த சிற்பிகள், சில்ப சாஸ்த்ர விற்பன்னர்களை அனுப்பினார். கட்டுமான வேலைகள் துரிதமாக நடந்தன.   திருவண்ணாமலை  அருணாச்சலேஸ்வரர் வடக்கு கோபுரம் ஆறாவது ஏழாவது நிலை கட்டி முடித்து உயர்ந்தது.  இன்னும்  நான்கு நிலைகள் கட்டவேண்டும்....

''அருணாச்சலேஸ்வரா  என்ன சோதனை இது...மைசூர் மஹாராஜா கொடுத்த பொன்னும் பொருளும்  7வது நிலை கட்டுமானத்தோடு  முடிந்து விட்டதே. இன்னும் நான்கு நிலை எவ்வாறு கட்டி முடிப்பது. நீதான் அருள வேண்டும் என்று அம்மணி வேண்டினாள்''

திருவிளையாடல் புரியும்  திரிநேத்ரன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பானா?  அவள் கனவில் மீண்டும் வந்தான்.

''கோபுர வேலையை தொடர்ந்து செய்.. தினமும் வேலையாட்களுக்கு  எனது விபூதியை அள்ளிக்கொடு....
என்று கட்டளையிட்டான்.  என்ன ஆயிற்று??

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...