Tuesday, October 2, 2018

NALA CHARITHRAM



ஐந்தாம் வேதம். (மஹா பாரதம்)
நள  சரித்திரம் 

         
   ''என் மனைவிக்கு  கல்யாணம்......!!

சேதி நாட்டிலிருந்த  தமயந்தியை ஒற்றர்  தூதுவர் மூலம் அறிந்த விதர்ப  நாட்டரசன்  பீமராஜன்  தனது பெண் ஜாக்கிரதையாக இருப்பதை அறிந்து அவளை அழைத்து வர ஏற்பாடுகள் உடனே நடக்கிறது.  பாவம்  நளன் எங்கே??  தேடல் தொடர்கிறது?  எவரையும் அவனை எங்கும் பார்க்கவே இல்லை, அவனைப்பற்றிய செயதியும் எதுவும் இல்லை?                                                                        

தமயந்தி  பல்லக்கிலேறி  விதர்பா நாடடைந்து பெற்றோரை மகிழ்விக்கிறாள். ஆனால்  அவள் துயரம்  தீரவில்லை.    நளன்  எங்கே?

தமயந்தி  பிராமணர்களை  நாலா பக்கமும்  அனுப்புகிறாள்.  அவர்களிடம் ஒரு  கேள்வியை எங்கு போனாலும்  கேட்கச்சொல்கிறாள்  அதை  புகழேந்தி  புலவர்  வெகு அழகாக  நள  வெண்பாவில்  பாடியிருக்கிறார்

'கானகத்துக் காதலியை  காரிருளில் கைவிட்டுப்
போனதுவும்  வேந்தற்குப் போதுமோ?...  

 இந்த ரெட்டை வரியை  ஓலையில் எழுதி   ஆட்களை அனுப்பி,  ஊர் ஊராக சென்று தண்டோரா போட்டு அறிவித்து  இதற்கு  யாராவது எந்த ஊரிலாவது பதில் சொன்னால்  உடனே வந்து  விவரம் சொல்லு என்கிறாள் தமயந்தி. கெட்டிக்கார பெண்.   

அயோத்தியில் ருதுபர்ணன் அரண்மனைக்கு சென்ற  ஒரு பிராமணன்  பர்னடன்.  அவன்  இதைச் சொல்ல,  அங்கிருந்த நளன்  இதைப் புரிந்து கொள்கிறான்.   அவனுக்கு  அதில் கண்ட விஷயம்  சொந்த அனுபவம் அல்லவா?   உடனே  ஓலையில்  மீதி ரெண்டடி  பதில் சொல்கிறான்  

''ஒண்டோடி தன்னை  உறக்கத்தே  நீத்ததுவும்
 பண்டை விதியின் பயனே காண் ''

''சிறந்த  குலப்பெண்கள்  தம்  கணவருக்கு நேர்ந்த விதிப்பயன்  உணர்ந்து  தம்மை  காத்துக்  கொள்வர்''  என்று  நளன் எழுதிய  மேற்கண்ட  பதில் கவிதைக்கு அர்த்தம்.     தமயந்திக்கு  இதை எழுதியவன் தனது கணவன்  நளன் என்று புரிந்து விடுகிறது. இது எங்கே இருந்து வந்தது என்று அறிந்து  அவன் அயோத்தியில் இருக்கிறன் என்று  ஊகிக்கிறாள்.  தனது   தாயிடம்  கலந்து பேசி  ஒரு திட்டம் தீட்டுகிறாள் 

சுதேவன் என்கிற பிராமணனை அழைத்து  'சுதேவா  நீ உடனே அயோத்யா செல். அங்கே  ருதுபர்ண மகாராஜாவிடம்  தமயந்தி  மீண்டும்  நாளை  ஒரு  ஸ்வயம்வரம்  நடத்தி  மறுபடியும் ஒரு கணவனை  தேர்ந்தெடுக்கப்  போகிறாள். அவன்  கணவன்  நளன் அவளைத் துறந்ததால்  இந்த  ஏற்பாடு  என்று சொல்'' என்றாள் . 

சுதேவன்  அயோத்தி சென்று  இதை ருதுபர்ணனிடம்  சொல்லும்போது   அங்கே  இந்த சேதி பரவி நளன்  காதில்  விழுகிறது.  ''நமது செயலால்  மனம் உடைந்து, வேறு வழியின்றி  தமயந்தி இந்த முடிவெடுத்தாள் , தவறு என் மீது தானே''  என வருந்துகிறான்.'

ருதுபர்ணன் விஷயமாக  இருப்பதை அறிந்த நளன்  '' என்ன முகவாட்டம் உங்களுக்கு? என்கிறான் 
''தேரோட்டி,  விதர்ப  ராணி தமயந்தி உலகிலேயே அழகில் சிறந்தவள். அவள் கணவன் நளன் அவளை கைவிட்டு சென்றதால் மீண்டும் திருமணம் செயது கொள்ள தீர்மானித்து சிலரை அழைத்திருக்கிறாள். நாளை  ஸ்வயம்வரம். நான் அவளை அடைய முடிந்தால் அது என் அதிர்ஷ்டம் . எப்படி நாளைக் காலைக்குள் விதர்பா செல்வது?

'' அரசே,  நாளைக்குள் நீ  விதர்பா செல்ல என்னால்  வேகமாக  தேரோட்ட முடியும். நான்  உங்களை அழைத்து செல்கிறேன்'' என்கிறான் நளன் .
ருதுபர்ணன்  மகிழ்ச்சியுடன் அப்படிஎன்றால் உடனே  நல்ல குதிரைகளை  தேர்ந்தெடுத்து  ரதத்தோடு வா'' என்கிறான்.  வாயு வேகம் மனோவேகமாக  ரதம் அயோத்தியிலிருந்து  விதர்பா பறக்கிறது.......அதைவிட வேகமாக  நளனின் எண்ணங்கள் தமயந்தியோடு வாழ்ந்த நாட்களை நினைத்து விர்ரென்று சுற்றுகின்றன.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...