ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (595- 606 )- J.K. SIVAN
हृदयस्था रविप्रख्या
त्रिकोणान्तर-दीपिका ।
दाक्षायणी दैत्यहन्त्री
दक्षयज्ञ-विनाशिनी ॥ १२०॥
ஹ்ருதயஸ்தா, ரவிப்ரக்யா,
த்ரிகோணாம்தர தீபிகா |
தாக்ஷாயணீ, தைத்யஹம்த்ரீ,
தக்ஷயஜ்ஞ வினாஶினீ || 120 ||
दरान्दोलित-दीर्घाक्षी
दर-हासोज्ज्वलन्-हासोज्ज्वलन्मुखी ।
गुरुमूर्तिर् गुणनिधिर्
गोमाता गुहजन्मभूः ॥ १२१॥
Darandolita dirghakshi
darahasojvalanmukhi
Gurumurtirgunanidhi r
go mata guhajanmabhuh – 121
தராம்தோளித தீர்காக்ஷீ,
தரஹாஸோஜ்ஜ்வலன்முகீ |
குருமூர்தி, குணநிதி
கோமாதா, குஹஜன்மபூஃ || 121 ||
லலிதா ஸஹஸ்ரநாமம் - (595 -606 ) அர்த்தம்
*595* ஹ்ருதயஸ்தா- அம்பாள் இதயத்தில் வசிப்பவள். கதோபநிஷத் இதைத்தான் சொல்கிறது. (II.2.12) ''ஹ்ருதய வாஸினி'' என்கிறது. அதே உபநிஷத் இன்னொரு ஸ்லோகத்தில் (II.1.12) ‘ ப்ரம்மம் என்பது உன் கட்டைவிரல் அளவு தான். அதுவே உன் உடல் நடுவே, (இதயம்) காணப்படுகிறது என்கிறது.
*596' ரவிப்ரக்யா - பஞ்சதசியில் ரெண்டாவது கூடம் என்பது அனாஹத சக்ரத்தில் உள்ளது. அதற்கு சூரியகூடம் என்று பெயர்.
*597* த்ரிகோணாந்தர தீபிகா - அம்பாள் மூலாதார முக்கோண சக்ரத்தில் நெருப்பு மாதிரி ஜொலிக்கிறாள். பஞ்சதசி சொல்லும் முதல் கூடமாகிய அக்னி கூடம் என்பது இதைத்தான். இப்படிப்பட்ட கூடங்களை தெரிந்து கொள்ள மூக பஞ்சதசி படிக்கலாம்.
*598* தாக்ஷாயணீ - ஸ்ரீ லலிதாம்பாளின் ஒரு முக்யமான நாமம் தாக்ஷாயணி - தக்ஷன் மகள். சிவனை மணந்தவள் . அமாவாஸ்யா பவுர்ணமி தினங்களில் தர்ச பூர்ண மாச யஞங்கள் பண்ணுவார்கள். தாக்ஷாயண யஞம் என்று பெயர்.
*599* தைத்யஹந்த்ரீ - தைத்ய என்பது ராக்ஷஸர்களை குறிக்கும் சொல். கெடுதல், தீங்கு அதர்ம அக்கிரம செயல்களில் ஈடுபடுபவர்கள். அவர்களை நிர்மூலமாக அழிப்பவன், ஸம்ஹாரிப்பவள் என்று இந்த நாமம் சொல்கிறது.
*600* தக்ஷயஜ்ஞ வினாஶினீ - தக்ஷர்கள் ரெண்டு பேர். ஒருவன் பெயர் தக்ஷ பிரஜாபதி. சர்வ சக்தி படைத்த அசுரன். மற்றொருவன் அவனது மானுட உருவம். அந்த ரெண்டு பேருடைய யாகத்தை அழித்தவள் பார்வதி. தனது கணவன் பரமேஸ்வரனை அவமதித்தவர்களை விடுவாளா உமை? யாகத்தில் மற்ற தேவர்கள், கடவுளர்க்கு அவிர்பாகம் கொடுத்து முக்கியமான சிவனை மதிக்காமல் அழைக்காமல் இருந்த தவறுக்கு தண்டனை கொடுத்தாள் . சக்திமானான தக்ஷப்ரஜாபதி தான் சிவன் சாபத்தால் சாதாரண தக்ஷனாக பூமியில் பிறக்கிறான்.
*601* தராம்தோளித தீர்காக்ஷீ, - நீண்ட நயனங்களை கொண்டவள் அம்பாள் ஸ்ரீ லலிதை. கருவண்டுகளாக சுறுசுறு ப்பாக
அலைபாயும் விழிகள். மூக பஞ்சதசி அம்பாளின் கண்ணழகை 101 ஸ்தோத்ரங்களில் சொல்கிறது. சௌந்தர்ய லஹரியும் அழகாக வர்ணிக்கிறது. அம்பாள் அதனால் தான் விசாலாக்ஷி.
*602** தரஹாஸோஜ்ஜ்வலன்முகீ - அம்பாள் புன்னகைக்கும்போது முகமே புடம்போட்டு தங்கமாக ஜொலிக்கிறது என்கிறார் ஹயக்ரீவர் அகஸ்தியரிடம். அந்த பார்வையின் ஜொலிப்பு கருணையும் பேரன்பும் தான்.
*603* குருமூர்த்தி, -- அம்பாள் தான் நமக்கெல்லாம் குரு. வழி நடத்துபவள் . ப்ரம்ம ஸ்வரூபத்தின் ஞான உபதேசம் சாதாரணமானதா?
*604* குணநிதி - நற்பண்புகள் நிறைந்த பொக்கிஷம் அம்பாள் என்கிறது இந்த நாமம். சரி தானே. இதை விட எப்படி சொல்ல முடியும்?
* 605 * கோமாதா - அருமையான நாமம். பசு எல்லோருக்கும் தாய். இணையற்ற அன்னை. காமதேனு. வேண்டியதை எல்லாம் வாரி வழங்கும் அம்பாள் கோமாதா என்ற சிறப்பு பெயரை கருணையால், நம்மிடம் அன்பால் பெற்ற பெயர் இது.
* 606 * குஹஜன்மபூ - குஹ என்றால் ரகசிய, மறைந்து இருக்கும் என்று பொருள். ஜென்ம பூ என்றால் பிறந்த இடம். தேகத்தில் ஆத்மா உள்ள மறைந்திருப்பதை ப்ரஹதாரண்யக உபநிஷத் எப்படி கூறுகிறதென்றால்: (II.i.20) எப்படி அக்னியிலிருந்து ஒளிச் சுடர்கள் நாலா பக்கமும் பரவுகிறதோ அதுபோல் பரமாத்மாவின் சக்தி சகல சுடர்விடுகிறது. அந்த சக்தி தான் ஸ்ரீ லலிதாம்பிகா.
ராவணேஸ்வரன் காட்டியது சங்கரி ஆலயம் என்பார்கள். கோவிலை சுற்றி அசோகவனம். இதில் தான் சீதையை கொண்டு வந்து ராவணை சிறை வைத்தான் என்பார்கள். சங்கரி ராவணனுக்கு சீதையை திரும்ப கொண்டு விடு என்று சொல்லி அவன் கேட்கவில்லை. ராமாயண கணக்குப்படி லங்கா நூறு யோஜனை தூரம். இப்போது 1300 கி.மீ. திரிகோண மலையில் சங்கரி ஆலயத்தை போர்த்துகீசியர்கள் நாசம் செய்தார்கள். தேவி பாகவதம் லங்கையை மணி த்வீபம் என்கிறது.
சதி தக்ஷனின் யாகத்தில் அக்னியில் தன்னை அழித்துக்கொண்டபோது சிவன் கோபமுற்று தக்ஷனை அழித்து அவள் உடலை சுமந்து கோர தாண்டவம் ஆடுகிறார். அவள் உடலின் பாகங்கள் சிதைந்து பல இடங்களில் பூமியில் விழுந்து 51 சக்தி பீடங்களாயிற்று. அவள் உடலின் ஒரு பாகம் விழுந்த இடம் ஸ்ரீலங்காவில் திருகோணமலை யில் இந்த ஆலயம்.
அம்பாள் சங்கரி. 2500வருஷம் முற்பட்ட கோவில் இது. சோழ பாண்டிய பல்லவர்கள் இந்த கோவிலை பராமரித்திருப்பதாக சில ஏடுகள் சொல்கின்றன. மகாசேனன் என்ற சிங்கள ராஜா இந்த ஆலயத்தை அழித்து புத்தருக்கு ஒரு டகோபா அமைத்தான் என்று சரித்திரம் சொல்கிறது. தமிழ் பிரஜைகளால் மீண்டும் உருவான அற்புத சக்தி பீடம் இது. நவராத்ரி விசேஷம் இங்கே.
No comments:
Post a Comment