ஒரு அற்புத ஞானி J.K. SIVAN
சேஷாத்திரி ஸ்வாமிகள்
திருவண்ணாமலையில் ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் இருந்த காலத்தில் எங்கும் எவரும் அவரது மகிமைகளைபற்றி பேசாத நாளே கிடையாது. எல்லோருக்கும் தெய்வம் அவர்.எவரையும் கிட்டே அணுக விடமாட்டார். ஒரு இடத்தில் தங்க மாட்டார். எங்கே எப்போது எப்படி இருக்கிறார் என்பதே பரம ரகஸ்யம். நாடு, உலகம் பூராவும் அவரை அறிந்திருந்தது.
''இதுக்கு தான் ஞானம் வேண்டும் என்கிறது'' என்று சிரித்துக் கொண்டே சொன்னார் ஸ்வாமிகள்.
''ஞானம் திருவாரூரில் தான். இங்கே இல்லை. இருந்தால் சொல்லிக்கொடும் '' என்று ஆத்திரத்
சேஷாத்திரி ஸ்வாமிகள் எப்போது யார் வீட்டுக்குள் நுழைவார் என்று அவருக்கே தெரியாதே. ராதாகிருஷ்ண ஐயர் வீட்டில் ஒருநாள் ''ஜலம் கொடு'' என்று வாங்கி ஒரு சொம்பு பூரா குடித்தார். எவ்வளவு நாள் பசியோ தாகமோ?.
அவர் மனைவி ஜலம் கொடுத்ததோடு சும்மா இருக்கக்கூடாதா?.

''சுவாமி நான் முன்னாலே போவேனா சுமங்கலியா?'' என்று கேட்டாள் .
''பார்வதி பரமேஸ்வரா நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நாளைக்கு. ஆனா முதல்லே போறது ராதாகிருஷ்ணன் தான். நீ இல்லை''.
இதை சொல்லிவிட்டு ஸ்வாமிகள் சுற்றுமுற்றும் பார்த்தார். அருகே எதிர்வீட்டு R.A. ராமநாதய்யர் நின்று கொண்டிருந்தார். அவரை சுட்டிக்காட்டி ''இவா வீட்டிலே ஒருவாரத்தில் சாவு. ரொம்ப பயமாக இருக்குமே'' என்கிறார் ஸ்வாமிகள். இது எப்படி இருக்கும் அந்த வீட்டுக்காரருக்கு என்று யோசித்து பாருங்கள். ராமநாதய்யர் காதில் சேஷாத்திரி ஸ்வாமிகள் உரக்க சொன்னது சுத்தமாக விழுந்து விட்டது. வாசலில் திண்ணையில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தவருக்கு எப்படி இருக்கும்? ரொம்ப கோவம் வந்துவிட்டது.
''உங்களை யாரய்யா கேட்டா இதெல்லாம். கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு போவீரா?. இது என்ன குறும்பு?'' என்று சேஷாத்திரி ஸ்வாமிகளை உதாசீனமாகப்பேசி கத்தினார்.
''பார்வதி பரமேஸ்வரா நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நாளைக்கு. ஆனா முதல்லே போறது ராதாகிருஷ்ணன் தான். நீ இல்லை''.
இதை சொல்லிவிட்டு ஸ்வாமிகள் சுற்றுமுற்றும் பார்த்தார். அருகே எதிர்வீட்டு R.A. ராமநாதய்யர் நின்று கொண்டிருந்தார். அவரை சுட்டிக்காட்டி ''இவா வீட்டிலே ஒருவாரத்தில் சாவு. ரொம்ப பயமாக இருக்குமே'' என்கிறார் ஸ்வாமிகள். இது எப்படி இருக்கும் அந்த வீட்டுக்காரருக்கு என்று யோசித்து பாருங்கள். ராமநாதய்யர் காதில் சேஷாத்திரி ஸ்வாமிகள் உரக்க சொன்னது சுத்தமாக விழுந்து விட்டது. வாசலில் திண்ணையில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தவருக்கு எப்படி இருக்கும்? ரொம்ப கோவம் வந்துவிட்டது.
''உங்களை யாரய்யா கேட்டா இதெல்லாம். கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு போவீரா?. இது என்ன குறும்பு?'' என்று சேஷாத்திரி ஸ்வாமிகளை உதாசீனமாகப்பேசி கத்தினார்.
''இதுக்கு தான் ஞானம் வேண்டும் என்கிறது'' என்று சிரித்துக் கொண்டே சொன்னார் ஸ்வாமிகள்.
''ஞானம் திருவாரூரில் தான். இங்கே இல்லை. இருந்தால் சொல்லிக்கொடும் '' என்று ஆத்திரத்
துடன் ஸ்வாமிகளை அலட்சியப்படுத்தினார் எதிர்வீட்டுக்காரர் ராமநாதய்யர்.
''அருணாச்சலேஸ்வரர் தான் சுவாமி போய்ப்பார். ஞானம் வரும்'' என்று ஸ்வாமிகள் பதிலளித்தார்.
ஸ்வாமிகள் சொன்னபடியே அடுத்த ஏழாம் நாள் ஆரோக்யமாக ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்த ராமநாதய்யரின் சிறிய தாயார் திடீரென்று மரணம் அடைந்தார்.
சுவாமி அந்த வீட்டுத் திண்ணைக்கு வந்தார். ''யார் போய்ட்டா? சீதம்மா ஒர்ப்படியா?''

ஓஹோ'' என்று சொல்லிவிட்டு அங்கே கிடந்த ஒரு காய்ந்த மாங்கொட்டையை எடுத்து கடித்து விட்டு அதைக் கீழே வைத்து விட்டு மூன்று தரம் வலம் வந்து வணங்கிவிட்டு ஏதோ ஸ்லோகம் சொல்லிக்கொண்டு ஓடிவிட்டார். எந்த கோவில் லிங்கமாக அந்த மாங்கொட்டை அவருக்கு தோன்றியதோ??
++
''A . நடேசய்யர் லக்கி ப்ரைஸ் அடித்தார். ஒரு நாள் ஸ்வாமிக்கு அவர் இட்டிலி வாங்கி கொடுத்ததை சுவாமி சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார். ரெண்டு இட்டிலியில் ஒன்றரையை புசித்துவிட்டு பாதி இட்டிலியை ''டேய் டேய், இங்கே வா, சாப்பிடேன். புள்ளை பொண்ணு பொறக்குமேடா'' என்கிறார்.

ஆமாம் நடேசய்யருக்கு அதுவரை புத்ர பாக்யம் இல்லை. விரைவில் பெண்கள் பிள்ளைகள் அவருக்கு பிறந்தார்கள் என்று எதற்காக உங்களுக்கு தெரிந்த விஷயத்தை நான் எழுத அவசியம் இருக்கிறது !
No comments:
Post a Comment