மஹா பாரதம்
தீர்த்த யாத்ரை க்ஷேத்ரங்கள் ஜாபிதா
பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது அவர்களை நிறைய ரிஷிகள், மஹான்கள் வந்து சந்தித்த வண்ணம் இருந்தனர். நாரதரும் அவ்வாறு தான் யுதிஷ்டிரனை சந்தித்து வாழ்த்தினார். அவன் கேட்டபடி எங்கெல்லாம் தீர்த்த யாத்திரை செல்லலாம் என்று புண்ய நதிகள் பற்றி சொன்னதில் சில நதிகளின் பெயர்களை மட்டும் சென்ற கட்டுரையில் குறிப்பிட்டேன். நாரதர் இன்னுமே நிறையவே சொல்லியிருக்கிறார். நான் அதையெல்லாம் பட்டியலிட்டால் உங்களுக்கு படிக்க பொறுமை இருக்காது.
''யுதிஷ்டிரா, உன்னை இன்னும் சிறிது காலத்தில் லோமச ரிஷி சந்திப்பார். முடிந்தால் அவருடன் சில க்ஷேத்ரங்களுக்கு தீர்த்த யாத்ரை சென்றுவா. இதனால் உனக்கு பெரும் புகழ் உண்டாகும். யயாதி, புருரவஸ், பீஷ்மன் ஆகியோர் அங்கெல்லாம் சென்றிருக்கிறார்களே. பகீரதன், ராமன் ஆகியோர் பல க்ஷேத்ரங்கள் சென்று மேன்மை பெற்றவர்கள்'' என்கிறார் நாரதர்.
நாரதர் சென்றதும். யுதிஷ்டிரன் அவர சொன்ன க்ஷேத்ரங்கள், தீர்த்தயாத்திரை பற்றியே யோசித்தான். ''ஆஹா அர்ஜுனன் எங்கெல்லாம் சென்றானோ, என்னென்ன புண்யங்கள் அடைந்தானோ. அவனது வீரத்தால், வெற்றியால், தவ வலிமையால் பெற்ற ஆயுதங்களால் தான் மகா வீரர்களான துரோணர், பீஷ்மர், கர்ணன், அஸ்வத்தாமா ஆகியோரை நாம் வெல்லமுடியும். என்று நினைத்து. குரு ரிஷி தௌம்யரை அழைத்தான். '' முனிவரே, நாமும் எங்காவது ஒரு சில தீர்த்த யாத்திரை க்ஷேத்ரங்களுக்கு சென்றால் என்ன. எவ்வளவு நாள் இந்த காம்யக வனத்திலேயே இருக்க முடியும் " என கேட்டான்.
''மகேந்திர மலை விசேஷமானது. பிருகு வம்ச பரசு ராமன் இருந்த இடம் அது. இங்கு பகீரதன் ஒரு ஏரியில் தவம் செய்தான். பிரம்மசாரா என்று நதி அங்குள்ளது. அதன் கரையோரமாக சென்றால் மதங்க ரிஷியின் கேதாரம் என்ற ஆஸ்ரமம் புலப்படும். அங்கிருந்து பார்த்தால் குந்தோதம் என்கிற மலை சட்டு தூரத்தில் கண்ணுக்கு தெரியும். அதில் கிடைக்கும் கனி வர்க்கங்களில் தான் நளன் பசி தாகம் தீர்த்து கானகத்தில் வாழ்ந்தான். சற்று தூரத்தில் ஒரு பக்கமாக சென்றோமானால் ஒரு தேவ வனம் இருக்கிறது. யோகிகள் முனிவர்கள் தவம் செய்யும் இடம் அது. இருபக்கமும் வஹுதா, நந்தா ஆகிய நதிகள் அந்த மலை உச்சியிலிருந்து ஓடி வரும். நான் சொன்னதெல்லாம் கிழக்கே உள்ளவை.

தெற்கே சிலது பற்று சொல்லட்டுமா? கோதாவரியிலிருந்து ஆரம்பிப்போம். அதைத் தொடர்ந்து வருபவை வெண்ணா, பீமரதி நதிகள். பாபம் போக்குபவை. மேலே சென்றால் பயோஷ்ணி, வராஹ தீர்த்தம். இந்த இடங்கள் சிவ பிரதேசம் எனப்படுபவை.
இதைக் கடந்து சென்றால் வருணஸ்ரோதச வனம் வரும். இதன் வடக்கே பிரவேணி இருக்கிறது. இங்கு தான் கண்வ ரிஷி ஆஸ்ரமம் இருந்தது. அங்கு சுர்பரக தீர்த்தம் உண்டு. ரெண்டு யாகசாலைகள் பாஷணா , புனச்ச்சந்திரா, என்று இவை ஜமதக்னி காலத்தை சேர்ந்தவை.
அங்கே தான் அசோக தீர்த்தம். அடுத்து தாம்பர பரணி. கோகர்ணம், அகஸ்தியர் வாசம் செய்தது. தேவசபா என்கிற மலையில் தான் அகஸ்தியரின் சிஷ்யர் ஆஸ்ரமம் உள்ளது. அருகே வைடூர்ய மலை என்று ஒன்று இருக்கிறது. அதைக் கடந்து மேலே போனால் சௌராஷ்டிர தேசம். பிரபாசம், சாமசோத்பேதம் பிண்டாரகம் , எல்லாம் வரும். இது பற்றி புலஸ்தியர் சொன்னது ஞாபகம் வருமே.
யுதிஷ்டிரா இவற்றையெல்லாம் கடந்தால் உஜ்ஜயினி தேசம். த்வாரவதி கிருஷ்ணன் சம்பந்தப்பட்டது இவைகள். கிருஷ்ணனின் த்வாரகா தேசம். அடுத்தது அனர்த்த தேசம். நர்மதை மேற்கு நோக்கி ஓடுகிறது இங்கே. அப்புறம் விஸ்வாமித்ரா நதி. புண்யாஏரி ப்ரம்மாண்டமாக இருக்கிறது. அதை தொடர்ந்து சென்றால் மைனக, அசித மலைகள். இந்த இடம் ஜம்புமார்க்கம் எனப்படும். பிறகு கேது மலை. மேதியா நதி. சைந்தவ வனம். நிறைய இடம் சொல்லியாயிற்றே. இன்னும் இருந்தாலும் இதற்கு போகவே எத்தனை காலமோ?.

No comments:
Post a Comment