ஞானப்பான 3 ஜே.கே. சிவன்
சோகம் தந்த ஸ்லோகம்.
இப்போதைய கேரளத்தில், நானூற்று இருபது வருஷங்கள் முன்பு ஒரு சிறு கிராமம் அங்காடிப்புரம் . மலபார் இன்று இப்போது வழங்கப்படும் பகுதியில் உள்ளது.அங்கே ஸாமோரின் வம்சம் ஆட்சி புரிந்த போது அவர்கள் குலதெய்வம் திருமண்டன் குன்னு பகவதி அம்மன். அம்மன் பக்தர்களில் ஒரு குடும்பம் பூந்தானம் நம்பூத்ரியுடையது. பூந்தானம் அவர் பெயர் அல்ல. குடும்ப பெயர். சிறந்த குருவாயூரப்பன் பக்தர். அவரது சம காலத்தவர் மேல்பத்தூர் நாராயண நம்பூதிரி. நாராயணீயம் எழுதியவர். தனது ஞானப்பான பாடல் சுவடிகளை எடுத்துக்கொண்டு மேல்பத்தூர் நாராயண நம்பூத்ரியை சென்று சந்திக்க்கிறார்.
''வாருங்கள் பூந்தானம். என்ன விஷயம். என்னை கையில் நூல் சுவடி?''
''நான் ''ஸ்ரீ கிருஷ்ணன்'' மேல் ஒரு நூல் இயற்றியிருக்கிறேன். நீங்கள் பெரிய பண்டிதர் அதை படித்து சரி பார்த்து சொல்லவேண்டும் '' என்கிறார் பூந்தானம்.
''என்ன இது மலையாளத்தில் ஏதோ எழுதிக்கொண்டு வந்திருக்கிறீர்கள். நான் மலையாள நூல்களை தொடுவதில்லை. எனக்கு ஸமஸ்க்ரிதம் ஒன்று தான் லக்ஷியம்'' என்று நிராகரித்து அவர் கையில் சுவடியை திணிக்கிறார் நாராயண நம்பூதிரி
எந்தவேளை இப்படிச் சொன்னாரோ பாவம் நாராயண நம்பூதிரிக்கு பக்கவாதம் அவரை பிடித்துக்கொண்டது. கனவில் ''நாராயண நம்பூதிரி, நீ என் மேல் பாடும் ஸமஸ்க்ரித ஸ்லோகங்களை விட பூந்தானம் மலையாளத்தில் பாடும் ஸ்தோத்திரங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கிறது '' என்று சொன்னான் குருவாயூர் உன்னி கிருஷ்ணன். அப்படிப்பட்ட பூந்தானத்தின் சிறந்த நூல் ''ஞானப்பான''த்தை தான் நாம் இப்போது படித்துக் கொண்டிருக்கிறோம்.
மலையாள பகவத் கீதை என்றே பெயர் பெற்றது இந்த ஞானப்பானம்.
“ഗുരുനാഥൻ തുണ ചെയ്ക സന്തദം
തിരുനാമങ്ങൾ നാവിന്മേൽ എപ്പോഴും
പിരിയാതെയിരിക്കണം നമ്മുടെ
നര ജന്മം സഫലമാക്കീടുവാൻ”
[Gurunaadhan thuna chaika santhatham
thirunaamangal naavinmel eppozhum
Piriyaatheyirikkanam nammude
nara janmam saphalamaakkiduvaan]

Request I, for the grace from my Guru without fail,
So that Lord’s holy names are always on my tongue,
And continue to be there forever without change,
So that this our, human birth becomes most fruitful.
குருவாயூரப்பா, என் குருநாதா, எனக்கு எந்நேரமும் எக்காலமும் என் நாவில் உன்னை சதா சர்வ காலமும் உச்சரிக்கும் நாமாக்களை இருக்கச்செய். என் வாழ்க்கை அப்போது தான் முழுமை பெறும். அர்த்தமுள்ளதாகும். யாரால் எப்போதும் கடவுளையே நினைத்துக் கொண்டிருக்க முடியும்? மனிதர்கள் தாமே நாம். எண்ணற்ற ஆசை பாச அலைகள் நம்மை தூக்கிக்கொண்டு வேறு எங்கோ தள்ளுகிறதே. வாழ்க்கையின் முக்கிய நோக்கமே மறந்து போகிறதே. பொறாமை, வெறுப்பு, கோபம், தாபம், ஏக்கம், ஏமாற்றம்... இதுகள் தானே நம்மை சாப்பிடுகிறது. கடவுளை நினைக்க எங்கே நேரம்?

தொடரும்
Excellent Sir 🙂🙏👍.. Thanks so much.
ReplyDelete