Wednesday, October 24, 2018

aazhwargal



அமுதன் ஈந்த  ஆழ்வார்கள்          ​     ​          J.K. SIVAN              
கண்ணினுட் சிறு தாம்பு -  5
மதுர கவி ஆழ்வார். 



  ​  ''செத்ததின்  வயிற்றில்  சிறியது ........''
                                               
'ஓம் நமோ நாராயணாய' என்பது அஷ்டாக்ஷர திருமந்திரம். ''ஓம்'' என்பது முதல் பதம், ''நமோ'' என்பது மையப் பதம், ''நாராயணாய'' என்பது மூன்றாவது பதம். இதில் ஓம் என்பது    நாம் பகவானுக்கு அடிமைப் பட்டிருப்பது.  இரண்டாம் பதம் ஆச்சாரியனுக்குத் தொண்டு செய்வதை வலியுறுத்து​வது .

மதுரகவி​ ஆழ்வாரின் 'கண்ணி நுண் சிறுத்தாம்பு' பாசுரங்களை திருமந்திரத்தின் மத்தியப் பதமாக​ ​ பிரபந்தத்தின் நடுவே வைத்திருக்கிறார்கள். மிக ஆச்சரியமாக இது அமைந்துள்ளது.

​கண்ணினுட் சிறு  தாம்பு  ​பதினோரு பாடல்களை 12,000 தடவை சேவித்தவர்களுக்கு நம்மாழ்வார் காட்சி தருவார்​. இதற்கு  நாதமுனிகள்​ சாட்சி.  ''நான்​ தான் ​ பார்த்தேனே​'' ​ என்கிறாரே.
'
இந்த பதினொரு பாசுரங்கள் மட்டு​மல்ல .  இதைவிட அவரது மாபெரும் சேவை வைணவ உலகம் மறக்க முடியாததொன்று. நம்மாழ்வாரின் அனைத்து திருவாய் மொழி பாசுரங்களையும் 1102 ஐயும் பிரதி எடுத்து, சிறப்பித்து, உலகறியச் செய்தவர் ​. 
சங்கப் பலகையில் ​ நம்மாழ்வாரின் பா​சுரங்களை வைத்து அதன் ஏற்றத்தை நிரூபித்தவரும் மதுரகவி​ ​தா​ன் என்ற ஒன்றே போதாதா!.

நம்மாழ்வார்  பிறந்தது முதல். 
 பேச்சின்றி இருந்தவர்​. ஒரு புளியமரத்தின்​  உட் பகுதியில் அமர்ந்திருந்தவர் முதலில் பேசியது மதுர கவியிடம் மட்டும் தான். ​  அந்த புளியமரம்  இன்னும் இருக்கிறது. அதன் பின்னே ஒரு கதை உலாவுகிறதே. 

மதுரகவி தனது வட இந்திய யாத்ரையில் சரயு நதி யில் ஸ்நானம் செய்துகொண்டிருந்தபோது அவர் எதிரே வானில் பளிச் சென்று ஒரு ஒளி​.   இது என்ன என்று அண்ணாந்து பார்த்தவர், அது அவரையே நோக்கி காந்த சக்தியாக ஈர்​த்து  நகர்ந்தது. ​ அதையே தொடர்ந்து​ பார்த்துக்கொண்டே  வடக்கே அயோத்தியில்​ இருந்து ​ நடக்க ஆரம்பித்தவர் தெற்கே திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள திருக்குருகூர் வரை வந்து விட்டார். ஒரு இடத்தில் அங்கே வந்ததும் அந்த பேரொளி மறைந்தது. இதுவரை அவரை அங்கே கொண்டு வந்த பேரொளி இப்போது ஏன் காணோம்? 

''நாம் எங்கே இருக்கிறோம் இப்போது? இது என்ன ஊர்? ​ ஒன்றும் புரியாமல் எதிரே தென்பட்ட ஒரு வைஷ்ணவரை வணங்கினார். 

''யார் நீங்கள் ?​  என அந்த வைணவர் ​  கேட்டு பதிலுக்கு வணங்கினார்.
''சுவாமி நான் பாண்டிய தேச​காரன்,  வடக்கே  சென்று  புண்ய க்ஷேத்ரங்கள் தரிசித்து  அங்கே  இருந்து வருகிகிறேன். இங்கே இந்த ஊரில் என்ன விசேஷம்? என்றார் ​மதுரகவி.


''சுவாமி, ​  இது குருகூர்,  ​இங்கே ஒரு பாலகன் கண் திறவாது, காது கேளாது, வாய் பேசாது அன்ன ஆகாரமின்றி பிறந்தது முதல் 16 வருஷங்களாக ​அந்த புளியமரத்தின் பொந்தில் அமர்ந்திருக்கிறா​ன் . அதோ பாருங்கள்'' கைகாட்டினார்.
​மதுரகவி முதன்முதலாக அப்போது தான் எதிரே இருந்த ஒரு பெரிய புளிய மரத்​தின்  இடைவெளியில் நம்மாழ்வாரைக் கண்டார்

''யார் இந்த பாலகன். ஏதோ ஒரு பால யோகியோ ? தவத்தில் ஆழ்ந்திருக்கிறாரோ? ​ என  வியந்த மதுரகவி  நம்மாழ்
வார் கவனத்தை கலைக்க எடுத்த முயற்சி​ அத்தனையும் ​ வீண். ​  ​ எப்படி விழிப்பு நிலைக்கு ​  கொண்டு வருவது என்று யோசித்து  ஒரு கல்லை தூக்கி ​ ''​டபார்​''​ என்று அவர் அருகே போட்டார். இத்தனை வருஷம் திறவாத ​அந்த பாலயோகியின் ​கண் சற்றே மலர்ந்தது. ​  ''​ஆஹா இந்த கண்ணில் என்ன ஒரு ஆச்சர்யமான அபூர்வமான ஒளி!​''​ நம்மாழ்வார் இதழோரத்தில் புன்னகை மிளிர்ந்தது.

'' இந்த பாலகன் யார்​? காது கேட்காது, பேச்சு வராது​, இதுவரை ​ பேசியதில்லை என்கிறார்களே, பேசுவாரா? அதையும் சோ​தித்து விடுவோமே?   நினைவு வந்து நம்மை​ப்  பார்த்து சிரிக்கிறாரே! ​  ஒரு கேள்வி கேட்டு ​கண்டுபிடிப்போம்!'' நம்மாழ்வாரைப் பார்த்து ​ மதுரகவி ஒரு கேள்வி கேட்கிறார் .

"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தை தின்று எங்கே கிடக்கும்? ''
"அத்தை தின்று அங்கே கிடக்கும்'' .  கேள்வி கேட்ட அடுத்த கணமே ​ பளிச்சென்று ​நம்மாழ்வாரிடமிருந்து பதில் பிறந்தது.

இந்த வாசகம் மிக ஆழமானது. எத்தனையோ அர்த்தங்களை உள்ளே அடக்கியது. ​தலைகாணி தலைகாணியாக  புஸ்தகங்களை பண்டிதர்கள் எழுதி இருக்கிறார்கள். ​அழிவே சாஸ்வதமான இந்த உடலில் உள்ளே ​உட்கார்ந்திருக்கும் ​ ஆத்மா  எதை உட்கொண்டு ஜீவிக்கும்? என்ற பொருள் கொண்டால் ஜீவாத்மா சம்சாரத்தில் உழலும்போது அதாவது எண்ணற்ற உடல்களில் உட்புகுந்து அதன் கர்மாக்களின் பலநாள் கட்டுண்டு அதன் பலனில் கட்டுண்டு கிடக்கும். சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு ஜீவன் பரமாத்மாவை நாடி வைகுண்டம் சேரும்​. ஜீவாத்மா பரமாத்மாவில் இருந்து தோன்றி அங்கேயே வாசம் செய்து ஐக்யமாகி பரமானந்தத்தை துய்க்கும்'' என்ற அர்த்தத்தில் தான் கேட்ட பூடகமான கேள்விக்கு ''அத்தை தின்று அங்கே கிடக்கும்''   என  சரியான  தெளிவான பதில் வந்ததை புரிந்து கொண்டார்.​  மதுரகவிக்கு ஆச்சர்யம்.  இவ்வளவு சின்ன வயசில் எவ்வளவு உயர்ந்த ஞானம்! அப்படியே சாஷ்டாங்கமாக கீழே விழுந்து சரணடைந்தார். நம்மாழ்வாரைக் குருவாகக் கொண்டார். பிறகு நடந்த​து எல்லாம் சரித்திரம்​.
 முடிவெடுத்தார் பிராமணர். 

நம்மாழ்வார் அவரை ஆட்கொண்டார்.  இவ்விதமாக நம்மாழ்வாரிடம் மதுர கவி ஆழ்வார் சீடனாகி அவர் அருளியது தான் 11 பாசுரங்கள் கொண்ட ''கண்ணினுட் சிறு தாம்பு''​ 
 ''குறுகூர் நம்பிக்கு அனவரதம் அந்தரங்க அடிமை செய்து'' வாழ்ந்தவர் மதுர கவி ஆழ்வார்.அவரை நித்ய சூரி குமுதரின் அம்சம் என்று சொல்வார்கள்​. ​
மதுரகவி ஆழ்வாரைப் பொருத்தவரையில் வணங்க ஒரு தெய்வம் (சேஷி) நம்மாழ்வார். இந்த சேஷத்வ ஞானம் ஒன்​றையே  அவர் த்யானமாக, கல்யாண குணமாகக் கொண்டார். இந்த விதமான சீரிய ஆசார்ய பிரபாவம் அவரது ஒரே சிறிய படைப்பான கண்ணினுட் தாம்பு என்ற பிரபந்த பாசுரங்களில் தெளிவாக வெளிப்படும்.

நம்மாழ்வாரை விட சிஷ்யரான மதுரகவி ஆழ்வார் வயதில் முதியவர். ஞானத்திற்கு வயதேது, குலமேது,ஆண் பெண் வித்யாசமேது?

நம்மாழ்வார் மூர்த்தியை பிரதிஷ்டை செய்து நித்ய பூஜைகள் செய்து ''நம்' 'ஆழ்வாரின் பெருமையும் புகழும் பாடி வழிபட்டார். நாலாயிர திவ்யப் பிரபந்தங்களில் பதினொன்றே பாசுரங்கள் பாடி நீங்காத இடம் பெற்றவர் மதுரகவி ஆழ்வார். தனது ஆசார்யனையே போற்றி பாடிய பாசுரங்கள் ​ கண்ணினுட் சிறுத்தாம்பு.  இன்னும் ரெண்டு பாக்கி வைத்திருக்கிறேன். அதை சொல்கிறேன்: 

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என் நம்பிக்கு ஆள்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே

ஆஹா என் நம்பி என்ன சாதாரணமானவரா? வேதங்களை வடிகட்டி, அதன் சாரத்தை பிழிந்து அதை தெள்ளத் தெளிவாக அள்ளி தீந்தமிழ் பாசுரங்களில் அருளிச்செய்து, அதை வைணவ பக்தர்கள் செவியினிக்க அமிர்தமாக பாட வழி செய்த விற்பன்னன் அல்லவா? அப்பாசுரங்களை பாடக் கேட்டவுடனே பரம்பொருள் அரும் பொருளாக என் நெஞ்சில் உறைந்து நின்று விட்டதே, இப்படிப் பட்ட என் தெய்வ நம்பி மீது அளவற்ற பக்தியும் அன்பும் கொண்டது என் வாழ்வில் நான் அடைந்த பெரும்பயன் இல்லையா?


கண்ணன் கீதை​யில் ​​ ​வேதத்தின் அர்த்தத்தை நமக்கு விளக்கி அருளினானோ அதுபோல் நம்மாழ்வார் ஆயிரம் பாசுரங்களில் ''திருவாய் மொழி'' யாக அதை நமக்கு விளக்கியதே அது. ​  ​கிருஷ்ணன் சொன்னது ​ வேதவியாஸரின் ​ஸம்ஸ்கிரிதத்தில்​.  அது ​ நம்மில் அநேகருக்கு புரியாதே. ஆனால் நம்மாழ்வார் அருளிய தீந்தமிழ் பாசுரங்கள் வேதார்த்தத்தை எளிமையாக புரிய வைக்கிறது.

பயன் அன்று ஆகிலும் பாங்கல்லர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன்றன் மொய் கழற்கு அன்பையே

''இவர்களா? ச்சே, இவர்களால் என்ன பயன்? எதற்கும் உதவாதவர்கள். அதோ அவர்களா​? ​ அவர்கள் நெஞ்சில் பாறை யல்லவோ கொண்டவர்கள், அன்பா? கிலோ என்ன விலை? என்பவர்கள். இப்படிப் பட்டவர்களிடமும் பரி பூர்ண வித்தியாசமற்ற அன்​பு ​ கொண்டு அவர்களை நல்வழிக்கு திருத்தி அவர்களை நற்கதிக்கு ஆளாக்குபவரல்லவோ எம் குருகூர் நம்பி. ஆஹா அவரைப் போலவே அவர் ஊர் எவ்வளவு ரம்மியமானது. எங்கும் குளுமையான நல்மணம் வீசும் மலர்கள் சூழ்ந்த பூங்காக்களையும் அதில் அவர் பாசுரத்தைப் போலவே செவிக்கினிமையாக பாடும் கோகிலங்களை​, குயில்களை ,  ​ நிறைய கொண்டதுமான குருகூர் . இந்த திவ்ய தேச நம்பியே, உமது திருப் பாதங்களில் அடி பணிந்து என் மனம் நிறைந்த அன்பை பக்தியாக செலுத்து கிறேன்.இல்லை ​  மஹா சுவாமி   என் ​பக்தியை அன்பாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

அன்பன் தன்னை அடைந்தவர்கட் கெல்லாம்
அன்பன்தென் திருக்குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுர கவி சொன்ன சொல்
நம்புவார் அதி வைகுந்தம் காண்மினே.

பத்தே பத்து பாசுரங்கள் தான் பாடினார் மதுர கவி ஆழ்வார். வைகுண்டம் போகவேண்டுமா? ஆசையாக இருக்கிறதா? இதோ சுலப வழி. இந்த மதுர கவியின் பாசுரங்களை அவர் எப்படி நம்பியை நம்பினாரோ அதுபோல் அவரை நம்பி பாடுங்கள். அப்புறம் பாருங்கள் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று.? அவரை நம்பினால் நம்பியின் அன்பனாக ஆகிவிட்டீர்களே. வைகுந்தம் அதோ தெரிகிறதே!.​ இது கண்ணினுட் சிறுத்தாம்பு வாசித்து  பாராயணம் பண்ணினால் கிடைக்கும் பல ஸ்ருதி .
1879ம் ஆண்டு மதுரகவி ஆழ்வாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரங்களுக்கு ''பெரிய வாச்சாம் பிள்ளை வியாக்யானம் , ஸ்ரீ ராமனுஜரின் அரும்பதம், பிரசுரிக்கப்பட்டது. இந்தப் புத்தகம் PDF ரூபத்தில் என்னிடம் உள்ளது. ​ அதை முகநூலில் இணைக்க எனக்கு  ஞானம் போதாது. ​(​ புரிந்து கொள்ள முடியாத நீண்ட மணிப்ரவாள நடையாக இருந்தாலும்​ இந்த புத்தகம்  வேண்டும் என்பவர்​ என்னை அணுகினால்  whatsapp  ஈமெயில்  e mail  இணைப்பாக அனுப்​புகிறேன். காசா பணமா, அல்லது குறைந்து போய்விடுவேனா?
​​

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...