Wednesday, October 10, 2018

KUNTHI PRARTHANAI

குந்தியின் பிரார்த்தனை   J.K. SIVAN 

      7.     ஒரு  தாயின்  குமுறல்

கிருஷ்ணனின் பூலோக கடமைகள் ஏறக்குறைய  நிறைவேறிவிட்டது.. அவன் துவாரகை சென்று சில மீதி காரியங்களை செய்ய வேண்டும்.  துவாபர யுகம் முடியும்  நேரம் வ ந்து விட்டது.  கலியுகம் வர காத்திருக்கிறது. 
நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது.  கிருஷ்ணனின் குதிரைகள் தயார் நிலையில் இருந்தும், தாருகன் கிருஷ்ணனின் உத்தரவுக்கு காத்திருக்கிறான். வெகு தூரம் துவாரகைக்கு பிரயாணம் செய்யவேண்டும்.   ஆனால் குந்தியோ கிருஷ்ணனை விட்ட பாடில்லை. கெஞ்சுகிறாள், கிருஷ்ணனைப்  போற்றுகிறாள், பிதற்றுகிறாள். அமைதியாக  கிருஷ்ணன் அவளை புன்சிரிப்புடன் பார்த்துக்கொண்டு ரசிக்கிறான்:  குந்தி தொடர்கிறாள்.

अप्यद्य नस्त्वं स्वकृतेहित प्रभो जिहाससि स्वित्सुहृदो sनुजीविन: ।
येषां न चान्यद्भवत: पदाम्बुजात्परायणं राजसु योजितांहसाम् ॥२२॥

''என் தெய்வமே, கிருஷ்ணா,  நீ எங்களுக்கு உதவியது கொஞ்சமா நஞ்சமா? எங்களை எதிர்த்து போரிட்டோர் எல்லாம் போய்விட்டனர், உன்னையே நம்பி, உன் கருணையால் உயிர் வாழும் நண்பர்களை, உன் திருவடி தொட்டு வணங்க வைத்து நீ  விடை பெருகிறாய்.

के वयं नामरूपाभ्यां यदुभि: सह पाण्डवा: ।
भवतो sदर्शनं यर्हि हृषीकाणामिवेशितु: ॥२३॥ 8.38
ke vayaṁ nāma-rūpābhyāṁ
yadubhiḥ saha pāṇḍavāḥ
bhavato ’darśanaṁ yarhi
hṛṣīkāṇām iveśituḥ

''நீ இன்றி , நாங்கள், 
பாண்டவர்கள்,  இந்த யது வின் நாம ரூப மஹிமையின்றி  கண்ணா,  வெற்றி பெற்று புகழ்  அடைந்திருப்போமா? எங்கள் நிலை, உயிரற்ற, உணர்ச்சியற்ற  பிரேதமாக அல்லவோ இருந்திருக்கும்.''

नेयं शोभिष्यते तत्र यथेदानीं गदाधर ।
त्वत्पदैरङ्किता भाति स्वलक्षणविलक्षितै: ॥२४॥  8.39

neyaṁ śobhiṣyate tatra
yathedānīṁ gadādhara
tvat-padair aṅkitā bhāti
sva-lakṣaṇa-vilakṣitaiḥ

''ஒன்று நிச்சயம்  கண்ணா,  இந்த ஹஸ்தினாபுரம் சாம்ராஜ்யம், இனி  உன் காலடி இன்றி, இப்போதிருக்கும் பொலிவை, மஹோன்னதத்தை,  இனி நிச்சயம் அடையப்போவதில்லை கிருஷ்ணா.

इमे जनपदा: स्वृद्धा: सुपक्वौषधिवीरुध: ।
वनाद्रिनद्युदन्वन्तो ह्येधन्ते तव वीक्षितै: ॥२५॥  8.40
ime jana-padāḥ svṛddhāḥ
supakvauṣadhi-vīrudhaḥ
vanādri-nady-udanvanto
hy edhante tava vīkṣitaiḥ

''ஆமாம்  கிருஷ்ணா,  இந்த  நாடே, நகரமே, தெருக்களே , உன் கடைக்கண் பார்வையால் எங்கும் வளமாக , செடியும், கொடியும், காயும்  கனியும், வேரும்  கிழங்குமாக, காடும் மலையும், வனமும்,  நதியும், மலையும் , கடலுமாக சுபிக்ஷமாக இருக்கிறதே, நீ சென்றபிறகு  இனி அந்த காட்சி மாறிவிடும்.''

अथ विश्वेश विश्वात्मन्विश्वमूर्ते स्वकेषु मे ।
स्नेहपाशमिमं छिन्धि दृढं पाण्डुषु वृष्णषु ॥२६॥ 8.41

atha viśveśa viśvātman
viśva-mūrte svakeṣu me
sneha-pāśam imaṁ chindhi
dṛḍhaṁ pāṇḍuṣu vṛṣṇiṣu

'' கிருஷ்ணா, என் தெய்வமே, பிரபஞ்ச காரணனே,  இனி எனக்கு உறவு ஒன்றில்லை,  பாசம் எவரிடமும்  இல்லை.  எல்லாம் நீ ஒன்றே''.

त्वयि मे sनन्यविष्या मतिर्मधुपते sसकृत् ।
रतिमुद्वहतादद्धा गङ्गेवौघमुदन्वति ॥२७॥ 8.42
tvayi me ’nanya-viṣayā
matir madhu-pate ’sakṛt
ratim udvahatād addhā
gaṅgevaugham udanvati

''கங்கை பிரவாகமாக கடலை நோக்கி ஓடுவது போல் என் மனம் விடாமல் உன்னை துரத்தி துரத்தி உன்னையே நாடி ஓடச்செய்வாய் கிருஷ்ணா.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...