ஸூர்தாஸ் - நங்கநல்லூர் J K SIVAN
47. '' விட்டேனா பார் உன்னை ''
எந்த குழந்தையும் தெய்வக் குழந்தை தான் இந்த உலகத்திலே. குழந்தையைக்கண்டு மகிழும்போது அது ஏழையோ, பணக்காரனோ , ஆணோ, பெண்ணோ,எந்த மதமோ இது போன்ற வித்யாசங்கள் ஒன்றுமே நம் மனதில் தோன்றுவதில்லை. இந்த வித்யாசங்கள் கண்ணில் தோன்றுவதற்கு காரணமே மனம் மாசு பட்டால் தான்.

இது ஒரு தெய்வமே குழந்தையாக அழகாக விளையாடிக் காட்டிய விஷயம்.
கோகுலத்தில் ஆச்சர்யமாக சிரிப்பும் கொஞ்சலும் எல்லா வீடுகளிலும் எதிரொலிக்கிறது. ஒரு பெரிய கூட்டமே நந்தகோபன் வீட்டில் எப்போதும் கூடி விடுகிறது.
யசோதைக்கு சந்தோஷம் கட்டுக்கடங்காமல் மற்ற கோபியர்களைக் கட்டிக்கொண்டு அணைத்துக்கொண்டு சிரிக்கிறாள். அப்படி எல்லோரும் மகிழ அங்கே என்ன நடந்தது?
குட்டிப் பயல் கிருஷ்ணன், கரி குண்டன், மெதுவாக தவழ ஆரம்பித்துவிட்டான். குப்புறப் படுத்துக்கொண்டு ஏதேதோ புரியாத சப்தம் எல்லாம் பண்ணுகிறான். அவன் பேச்சு மஹா ரிஷிகளுக்கு கூட புரிவது கஷ்டம் என்பது வேறு விஷயம்.
நந்தகோபன் வீட்டில் பெரிய காற்றோட்டமான முற்றம். அதில் தான் தவழ்கிறான் கண்ணன். கண்ணன் விளையாடும் இடம் என்று மண் தரையெல்லாம் மழமழவென்று பல வண்ணக் கண்ணாடிகளை உறுத்தாமல் பதித்திருக்கிறார்கள் யசோதையும் நந்தகோபனும்.
கிருஷ்ணன் பயல் குண்டு தலையை தூக்கி அசைத்து நீச்சல் அடிப்பது போல் தவழ்கிறான். தரையை அவன் கண் பார்த்த போது அவன் உருவம் தரையில் பதித்த வண்ணக் கண்ணாடியில் தெரிகிறது. அளவு கடந்த சந்தோஷம் அவனுக்கு. ஓஹோ என்னைப் போலவே இன்னொருவனா நீ ?
அதை உற்றுப் பார்க்கிறான் . பார்வையிலேயே அவன் அளவெடுப்பவன் அல்லவா? இவன் ராக்ஷஸன் இல்லை. நம்மவன். உடனே சிரிப்பு. குட்டிக் கைகளை நீட்டி குஞ்சு விரல்களால் அந்த உருவத்தைப் பிடிக்க முயல்கிறான். அது பிடிபடாததால் சிரிப்பு, குதூகல சப்தம். அதுவும் சிரிக்கிறது. கையை ஆட்டி இவனைப் பிடிக்க முயல்கிறதே. அவன் ஆனந்தமாக சிரிக்கும்போது ரெண்டே ரெண்டு பற்கள் மட்டும் மேல் அண்ணத்தில் சிறிதாக வெள்ளி மாதிரி வெள்ளை வெளேரென்று தோன்றி மறைகிறது. குட்டி பற்கள் இப்போது தான் முளைத்து மேலே தலை தூக்குகிறது. விடாமல் தனது உருவத்தைப் பிடிக்க முயற்சி அங்கே தொடர்ந்து நடக்கிறது.
இதைக் கவனித்து விட்டு தான் யசோதை ஆனந்தமாக தோழியர்களுடன் மகிழ்கிறாள்.
''கிருஷ்ணப்பா, இங்கே வாருங்கள், உங்கள் பிள்ளை செய்யும் ஜாலத்தை பாருங்கள், எத்தனை நேரமாக
மும்முரமாக இன்னொரு கிருஷ்ணனை பிடிக்க முயல்கிறான்.''
நந்தகோபனும் அவர்களோடு சேர்ந்து விழுந்து விழுந்து சிரித்து மகிழ்கிறான். நேரம் ஓடுகிறது.
''பாவம் டி யசோதை, குழந்தை எத்தனை நேரமா குப்புறப் படுத்து தவழ்ந்து கொண்டு காலை ஆட்டி, கையை ஆட்டி அந்த உருவத்தை பிடிக்க பிரயாசைப் படுகிறது. வயிற்றைப் பார் எவ்வளவு குழைகிறது. போ உடனே குழதையை எடுத்து பாலைக் கொடு''
உருவத்தை தேடும் கரு மாணிக்கத்தை கன்னத்தில் முத்தமிட்டு, ஆர்வத்தோடு கையில் எடுத்து முந்தானையை விலக்கி மார்போடு அணைத்துக் கொள்கிறாள் யசோதை. முந்தானைக்குள் மறைந்து விட்டான் மோஹனன் .
ஸார் பால் குடிப்பதில் இப்போது கவனமாக இருக்கிறார்? இனி அவரை தரிசிக்க திரை விலகவேண்டும். ''தெர தீயக ராதா...''. என்று பாட நான் தியாகராஜ ஸ்வாமிகள் இல்லையே.
ஸூர் தாஸ் ஒருவரால் தான் இப்படி கற்பனை செய்ய முடியும்.
Krishna Crawling
Chuckling, Kanha came crawling, Trying to catch His reflection In the bejewelled courtyard of Nanda. One moment He would stare at His shadow Then move His hands to hold it Chuckling in delight, two teeth showing Again and again He would try. Calling Nanda to come and see Yasoda watched in joy Then covering Sur's Lord with her aanchal She began to feed her boy.

No comments:
Post a Comment