Thursday, October 1, 2020

SVKARAI AGRAHARAM

 

சரித்திரம்  படைத்த சாம்பவர் வடகரை-10    J K  SIVAN    
சாம்பவர் வடகரையை பற்றிய  என் கண்ணோட்டத்தை வெறும் ஊர் எல்லை, அங்குள்ள தெருக்கள், கோவில்கள்,  ஆறு, வயல்கள் பற்றி மட்டும்  சொன்னால்  நிறைவு பெறாது.  அங்குள்ள,  அங்கிருந்த,  உயிரோவி



யங்களைப் பற்றியும் நாலு வார்த்தை சொல்லவேண்டும்.   முதலில் அங்கு வாழ்ந்த சில உன்னதர்களைப் பற்றி குறிப்பிடுகிறேன்.

ஜீவ சமாதிகள்.  

நான் சென்ற வருஷம் அங்கு சென்றபோது  சாம்பவர் வடகரை  அக்ரஹார  கிராமத்தில்,   வடபுறம்  மூன்று பேரின் ஜீவ சமாதிகள் பார்த்தேன். இந்த ஊரில்  ஐந்து சமாதிகள் இருந்தனவாம்.   இயற்கை உற்பாதத்தால்  வெள்ளத்தின்  போது  இரண்டு  சமாதிகள் இருந்த இடம்  தெரியாமல் கரைந்து  மறைந்து விட்டது. மற்ற மூன்றுமாவது  பாதுகாக்கப்படவேண்டும் என்ற  நல்லெண்ணத்தில்  இந்த கிராமத்தை சேர்ந்தவரும்  தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில்  மும்பையில்  தொழிலதிபருமாகிய ஹரி ஹர  ஐயர்  முன் வந்து  எஞ்சிய மூன்று  சமாதிகளை புனருத்தாரணம் செயது அதிஷ்டான  ஆராதனைகள் செய்வித்து,  சமாதி நிலத்தை சுற்றி  நாலாப்பக்கமுஜம் சுவர்கள் எழுப்பி புத்துப்பித்திருந்ததை பார்த்தேன்.   நான் இந்த  கிராம கட்டுரையை இப்போது எழுதிவருவதை படித்த ஒரு அன்பர் எனக்கு எழுதியது: 
Kris Chidambaram
Sir ஊருக்கு மேற்கே ஹனுமான் நதிக்கரையில் மூன்று யதீஸ்வரர்களின் (பிள்ளையார் கோவில் அருகே) பிருந்தாவனம் இருக்கிறது. சமீபத்தில்தான் புனருத்தாரணம் செய்யப்பட்டது. பார்த்தீர்களோ?''
''ஆஹா பார்த்தேனே, நன்றாக  சுற்று சுவர்கள் கட்டப்பட்டு நடுவே, புதுப்பிக்கப்பட்டிருந்த  அந்த மூன்று யதீஸ்வரர்களின் பிரிந்தாவனத்தை பார்த்தேனே,  அவர்கள் யார் என்று விவரிக்கமுடியுமா, படம் இருந்தால் அனுப்புங்கள் என்று எழுதியதற்கு, ''அவர்கள் என் அம்மாவின் முன்னோர்கள்'' என்ற ஒரு தகவல் தான் கிடைத்தது. 
ஜீவசமாதி அடைந்த ஐவர் யார் என்று விவரமும் தெரிந்தவர்கள் இல்லை. இருந்தபோதிலும்  ஹரிஹர அய்யர் முயற்சியால்  அவரது சொந்த செலவில்,   ஜீவசமாதி அதிஷ்டானங்களில் வருஷாவருஷம்  மஹாளய  துவாதசி புண்ய கால ஆராதனை  வழிபாடு  அன்னதானம் நடைபெற்று வருகிறது.  அந்தந்த வம்ச வாரிசுகளினால் இந்த ஜீவ  சமாதிகள் போற்றி வணங்கப்பட்டு  அரூபியான அந்த சந்யாசிகளின்  ஆசி  இந்த கிராம மக்களுக்கு ஒரு பாதுகாப்பாக இருந்து வருகிறது.    இது யார் யார்  சமாதி என்று கேட்டதில், அந்த அக்ரஹாரத்தில் வாழ்ந்து   அரசமரத்திற்கு எதிர்புறம் அந்த  ஊரில் தீட்சை பெற்று சித்தியடைந்த சன்யாசிகளின் சமாதிகள்  அவை  என  அறிந்தேன்.    ஆபத்  சந்நியாசம் வாங்கிக்கொண்டு முக்தி அடைந்தவர்களுக்கு சமாதி என்கிற அதிஷ்டானம் உண்டு.    சந்நியாசிகளை தகனம் செய்வதில்லை.  தேகத்தை  பூமியில் புதைத்து அதன்மேல் ஒரு சிறிய துளசி மாடம் (பிருந்தாவனம்) . அந்த மூன்று   பேரில் ஒருவர்   ஹெட்மாஸ்டர்  சிதம்பரம் ஐயர் தகப்பனார் என்று மட்டும் தான் தெரிந்தது.  மற்ற இருவர் யார் என்று தெரியவில்லை.  

இந்த மூன்று யதீஸ்வரர்களைத்தவிர  மற்ற சில பிரபல அக்ராஹார மனிதர்களை அறிவோம்:  
             
சாம்பவர்  வடகரை  ஒளி விளக்குகள் :                          

அழகுக்கு அழகு செய்தது போல சில உன்னத ஆத்மாக்கள் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள்   வாழ்ந்து மறைந்தாலும்  மனதில் நிறைந்தவர்களாக நினைக்கப் படுகிறார்கள்.   இப்படி அந்த ஊருக்கு  பெருமை  சேர்த்து   உயிரூட்டிய  இந்த  ஒளி விளக்குகள் பற்றி சொல்லாமல் போனால்  இந்த  கிராம சரித்திரம் நிறைவோ முழுமையோ  பெறாது.  அன்றிலிருந்து இன்றுவரை சாம்பவர் வடகரை கிராமத்தை வெளியுல குக்கு தங்கள் உழைப்பு, பெருமை, சக்தி, திறமையால் காட்டிய சிலரை நினைவு கொள்வோம்.  இந்த சாம்பவர் வடகரை   மண் பல அற்புத மனிதர்களை  உருவாக்கி  யிருக்கிறது. அழியாப்புகழ் பெட்ரா அந்த மா மனிதர்களால் கிராமமே பெருமையிலும் புகழிலும்  திளைக்கிறது.      
                                       
சாம்பவர் வடகரை  சுப்பையா பாகவதர்.  S.V.  சுப்பையா  பாகவதர்.   குறிப்பாக  ''சங்கீத  கலா ரத்ன  கிராமபோன் பிளேட்'  ஸ்வர்க ஸ்ரீ  சாம்பவர் வடகரை சுப்பையா பாகவதர்  சினிமா  நாடக சங்கீத உலகில் ஒரு  மைல் கல். அருமையான  குரல் வளம் படைத்த, கம்பீர உருவம்  முறுக்கு மீசையும்  வட்டமான கண்ணாடி யுடனும்  தலையில்  புஸ்  என்று முடியுடன் ஒரு கதாநாயகன். பாடும் நடிகன் என்று 1930ல் இருந்து இருபது  வருஷம் சக்ரவர்த்தியாக இருந்தவர். அவர் நடித்த பேசும் படங்கள்  நந்தனார் (1933), சுபத்திரா பரிணயம்  (1935)   கம்பர் (1938)  பக்த கௌரி (1941). அவர் கிராமபோனில்   பாடி பட்டி தொட்டிகளில் எல்லாம்  பிரபலமான  பாடல்கள் ஸ்ரீங்கார லஹரி , வாழையடி வாழை, ஜெயா ஜெயா கோகுல பாலா போன்ற  சாகாவரம் பெற்ற பாடல்கள். என் தந்தையார் நல்ல மூடில்,MOOD, சந்தோஷமான நேரத்தில் அடிக்கடி பாடும்  இந்த சிருங்கார லஹரி இன்னும் காதில் ஒலிக்கிறது. அப்போது எனக்கு ஐந்திலிருந்து  ஆறு ஏழு வயதுக்குள். 

சங்கீத பரம்பரையில் பிறந்த இந்த  ஊர் சுப்பையா   பாகவதர்  1935-ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் வெரைட்டி ஹால் டாக்கீஸ்,  கொல்கத்தா பயனீர் ஸ்டூடியோவில் தயாரித்த   ‘சுபத்ரா பரிணயம்’ எனும் படத்தில் நடித்தவர்.  அவர் தான் அர்ஜுனன் , டி.எஸ்.வேலம்மாள்  சுபத்திரை.  அந்த படத்தில்  மொத்தம் 42 பாடல்கள். ’ஜெயஜெய கோகுலபாலா’ என்று பாடியபடி படத்தில் தோன்றும் எஸ்.வி.சுப்பையா பாகவதர் தனித்தும்   சேர்ந்தும்  படத்தில் 19  பாட்டுகள்  பாடியிருக்கிறார் . வள்ளலாரின் “வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம்’ என்ற பாடலும் படத்தில் எஸ்.வி.சுப்பையா பாகவதர் குரலில் ஒலித்தது. படத்தை  இயக்கியவர்    புரபல்லாகோஷ் எனும்  வங்காளி .  யு ட்யூபில் இன்னும்  சுப்பையா பாகவதர் கிடைக்கிறார். நிறைய பாடல்களை இந்த அவரைப் பற்றி எழுதுமுன் கேட்டு அனுபவித்தேன். அற்புதமான  சங்கீத ஞானம். 

நாடகமேடை சங்கீத வித்வான் எஸ்.வி.சுப்பையா பாகவதர் மேடையில் அர்ஜுனன் என்று விளம்பர காகிதம் சொன்னால் போதுமாம்.  வண்டி கட்டிக்கொண்டு  எந்தெந்த  ஊரிலிருந்தோ  ரசிகர் கூட்டம்  சேர்ந்து விடும்.  அவ்வளவு ரசிகர்கள்  அவர் பாட்டுக்கு.   இந்த  சங்கீத வித்வானை நம்பியே  படங்கள் எடுத்தார்கள்  அப்போது.

மூன்று வருட இடைவெளிக்குப்பின்னர் வேல் பிக்சர்ஸ், கந்தன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த ‘கம்பர் அல்லது கல்வியின் வெற்றி” என்ற படம் எஸ்.வி.சுப்பையா பாகவதர் கம்பராக நடித்து 1938 ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படம் கம்பர் மகன் அம்பிகாபதி – அமராவதி காதல் பற்றிய படமல்ல என்பது குறிப்பிடத்தக்கது. மன்னன் குலோத்துங்கச் சோழனுக்கு கல்வியின் மேன்மையைத் தன் பட்டறிவால் கம்பர் எப்படி தெளிவுபடுத்துகிறார் என்பதே படம்.   அந்தக்காலத்தில் சினிமாப்படங்கள், கதைகளுக்கு, நாவல்களுக்கு ரெண்டு பெயர்கள் உண்டு. 

தமிழ் சினிமாவில் முதன்முறையாக தசாவதாரப் பாடல் (மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்கள்) பாடிய பெருமை எஸ்.வி.சுப்பையா பாகவதரையே  சேரும்.  இப்படி திரையில் பாடி நடித்து புகழைப் பெற்ற எஸ்.வி.சுப்பையா பாகவதர்.  சாம்பவர் வடகரை பெயருக்கு  புகழ்க்கொடி உயர்த்தியவர். கர்நாடக இசைமட்டுமின்றி கிராமிய, தெம்மாங்கு பாட்டிசைகளிலும் நாடகங்களில் பாடி மக்களைச் சொக்க வைத்தார்.

இன்னும்  சில  தாரகைகளைப் பற்றியும் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...