Tuesday, October 13, 2020

GEETHANJALI


 

கீதாஞ்சலி  62  J K  SIVAN  
தாகூர் 

                   62.  சுகம்.   சுகம்,   இதல்லவோ  சுகம் 

62.  When I bring to you coloured toys, my child, I understand why there is such a play of colours on clouds, on water, and why flowers are painted in tints---when I give coloured toys to you, my child.
When I sing to make you dance I truly Know why there is music in leaves, and why waves send their chorus of voices to the heart of the listening earth---when I sing to make you dance.
When I bring sweet things to your greedy hands I know why there is honey in the cup of the flowers and why fruits are secretly filled with sweet juice---when I bring sweet things to your greedy hands.
When I kiss your face to make you smile, my darling, I surely understand what pleasure streams from the sky in morning light, and what delight that is that is which the summer breeze brings to my body---when I kiss you to make you smile.

என் செல்வமே, கண்ணா, உனக்கு  விளையாட நான் கலர் கலராக  பொம்மைகள் வாங்கி வந்தேனே,  அப்போது தான்  எனக்கும்  புரிந்தது,  ஏன்  வானில்  மேகங்களுக்கு  இத்தனை வண்ணங்கள் என்று,   நீருக்கு ஏன்  இவ்வளவு  வித வித  நிறங்கள் என்று,  ஏன் எங்கு பார்த்தாலும்  பூக்களுக்கு   எண்ணமுடியாத அளவு  வர்ண ஜாலங்கள் என்று, ஆம்   குழந்தாய் , உனக்கு நான்  விளையாட  கலர் கலராக  பொம்மைகள் கொடுத்தேனே  அப்போது தான் புரிந்தது.
நீ  ஆட வேண்டும் என்று நான் பாடினேன்  அல்லவா அப்போது தான்  காற்றில்  இலைகள்   அசைந்து பாடுவது ஏன் என்று புரிந்தது.   அமைதியாக  பார்த்துக்கொண்டு கேட்கும் பூமித்தாயின் இதயம்  குளிர  ஏன்  கடலலைகள் ஓயாமல்  சப்தித்துக்கொண்டு  கம்பீரமாக    ஒன்று  சேர்ந்து இசைப்பது ஏன்  என்று புரிந்தது.  ஆமாம் இது நான்  நீ  ஆட  பாடினேன்  அல்லவா அப்போது தான் புரிந்தது.

நீ உன்  பிஞ்சு கரங்களை  ஆசையோடு  நீட்டி  அத்தனையும் எனக்கு கொடு என்று கேட்கும்போது  உனக்கு பிரியமான  இனிய  வஸ்துக்களை கொடுத்தேனே  அப்போது தான் புரிந்தது   ஏன்  புஷ்பங்கள்  சிறிதோ பெரிதோ  அதன்  வயிற்றில் நிறைய  சுவையான   தேனைச்  சேர்த்து வைத்துக்கொண்டு  வண்டுகளுக்காக காத்திருக்கிறது என்று.

எந்த  பழமும்  ஏன்  அதற்குள்  ஒரு வித சுவையை, இனிப்பை  பதமாக  கலந்து வைத்துக் கொண்டி ருக்கிறது என்று. 

ஆமாம்  கண்ணா,  நீ  ஆசையாக  எல்லாமே  எனக்கு என்று  நீட்டும் உன்   ஆசைக் கரங்களை  நிரப்ப  உனக்கு பிரியமான இனிய  வஸ்துக்களை கொண்டுவந்தேனே  அப்போது தான் புரிந்தது.
நீ  ஆசையோடு  சிரிக்க  உன்னை  இருகக்  கட்டி,உச்சி முகர்ந்து,  அணைத்து  இச் இச் என்று மாறி மாறி உன் முகம் நிறைய  முத்தங்களை கொடுத்தேனே  அப்போது தான் புரிந்தது என் கண்ணே,   ஏன்  காலை நேர  முதல் வெயிலின்   தங்க நிற கிரணங்கள்  பூமியைத் தொடும் போது,   ஆகாயத்திற்கு ஏன்  அத்தனை ஆனந்தம் என்று அதே போல்  என் உடலை  குளிர்ந்த  கோடைத்  தென்றல்  மென்மையாக  தொடர்ந்து வருடும் போது  SG  கிட்டப்பா  பாடுவாரே  ''  மேடையிலே வீசுகின்ற  மெல்லிய பூங்காற்றே, மென்காற்றின் விளை   சுகமே''  என்று  அதேதான்,   அதே தான்,

உன்னை  ஆசையோடு  நீ சிரிக்க  உன்னை  இருகக்கட்டி உச்சி முகர்ந்து அணைத்து  முகம்  பூரா  நான்  ''இச் இச்''   தரும்போது கிடைத்த சுகம். 

பகவானே   இந்த சுகமெல்லாம்  நீ  தருவது, நான் மகிழ  நீ யோசித்து முடிவெடுத்து தந்த  இணை யற்ற இனிய சுகங்கள்.
  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...