ஆதி சங்கரர் J K SIVAN
கங்காஷ்டகம் 1-2
கங்கை புனித நதி என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. நதிகளின் ராணி. சர்வ பாபங்களையும் கழுவி விளக்கும் பரிசுத்த தீர்த்தம். கங்கா ஜலம் என்றும் கங்கா தீர்த்தம் என்றும் வீட்டில் பூஜையறையில் ஒரு சின்ன சொம்புக்குள் வைத்து துளித்துளியாக பிரசாதமாக எல்லோருக்கும் தருகிறோம். அங்கே வடக்கே அதை எவ்வளவு அசுத்தப்படுத்தமுடியுமோ அப்படி கேவலப் படுத்துவதை தடுக்க, கங்கையை சுத்தப்படுத்த நமது மத்திய அரசு ஒரு தனி இலாக்காவையே வைத்திருக்கிறது. நல்லது நடக்கட்டும்.
ஆதி சங்கரர் கங்கையை எட்டு ஸ்லோகங்களில் வணங்கி வழிபடுகிறார். நாமும் கை கூப்பி அவரோடு சேர்ந்து அவர் சொல்லுவதை திருப்பி சொல்லும்போது அர்த்தமும் புரிந்து கொள்வோம்.
भगवति भवलीलामौलिमाले तवांभः
कणमणुपरिमाणं प्राणिनो ये स्पृशन्ति ।
अमरनगरनारिचामरमरग्राहिणीनां
विगतकलिकलंकातंकमंके लुठन्ति ॥ २॥
பகவதி பவலீலாமௌலுமாலே தவாம்ப
கணமணுபரிமாணம் ப்ராணிநோ யே ஸ்ப்ருசந்தி!
அமரநகர நாரீ சாமரக்ராஹிணீநாம்
விகதகலி கலங்காதங்கமங்கே லுடந்தி!
கங்கம்மா, உண்மையிலேயே நீ தான் அழகான குளிர்ந்த நறுமணம் வீசும் பணிமலரான புஷ்பம். எங்கள் சிவனின் ஜடாமுடியில் அற்புதமாக சுற்றி சுற்றி படர்ந்து அவனுக்கு அழகூட்டுபவள். சிவனையும் என்னையும் மகிழ்வூட்டுகிறாய். பார்க்க பார்க்க அலுக்காதவள் நீ. ப்ரவாஹமாக ஓ வென்று நீ ஓடினாலும் உன் ஒவ்வொரு துளியை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு வாயில் பருகினால் போதும். பல ஜென்ம பாபங்களை நீக்குபவளாயிற்றே. தேவலோக மங்கையர் வெண்சாமரம் வீசி உன்னை வணங்குபவர்கள் மடியில் தவழ்ந்து வந்தவள் அல்லவா நீ.
ब्रह्माण्डं खंडयन्ती हरशिरसि जटावल्लिमुल्लासयन्ती
खर्ल्लोकात् आपतन्ती कनकगिरिगुहागण्डशैलात् स्खलन्ती ।
क्षोणी पृष्ठे लुठन्ती दुरितचयचमूनिंर्भरं भर्त्सयन्ती
पाथोधिं पुरयन्ती सुरनगरसरित् पावनी नः पुनातु ॥ ३॥
ப்ரஹ்மாண்டம் கண்டயந்தீ ஹரசிரஸி ஜடாவல்லி முல்லாஸயந்தீ
ஸ்வர்லோகாதாபதந்தீ கனககிரி குஹா கண்ட சைலாத் ஸ்கலந்தீ!
க்ஷே£ணூப்ருஷ்டே லுடந்தீ துரிதசயசமூ:நிர்பரம் பர்த்ஸயந்தீ
பாதோதிம் பூரயந்தீஸுரநகரஸரித் பாவநீ ந:புனாது!!
क्षोणी पृष्ठे लुठन्ती दुरितचयचमूनिंर्भरं भर्त्सयन्ती
पाथोधिं पुरयन्ती सुरनगरसरित् पावनी नः पुनातु ॥ ३॥
ப்ரஹ்மாண்டம் கண்டயந்தீ ஹரசிரஸி ஜடாவல்லி முல்லாஸயந்தீ
ஸ்வர்லோகாதாபதந்தீ கனககிரி குஹா கண்ட சைலாத் ஸ்கலந்தீ!
க்ஷே£ணூப்ருஷ்டே லுடந்தீ துரிதசயசமூ:நிர்பரம் பர்த்ஸயந்தீ
பாதோதிம் பூரயந்தீஸுரநகரஸரித் பாவநீ ந:புனாது!!
அம்மா கங்காதேவி, உன்னைப் பற்றி நான் என்ன பார்த்தேன் சொல்கிறேன் கேள். ஸ்படிகம் போன்ற பரிசுத்த நீரை விண்ணிலிருந்து கொண்டுவருபவளே, இந்த பிரபஞ்சத்தை ரெண்டாக பிளப்பவளே, சிவனின் அலைஅலையான ஜடையில் நுழைந்து காட்டில் பாயும் நீரோடையாக வலம்வருபவளே, ஓவென்று மேலே விண்ணிலிருந்து பூமிக்கு பாய்பவளே, மேரு மலை குகைகளில், சந்தனக்காட்டில் பரவி சந்தனமணம் கமழ வெளிப்படுபவளே, மழைபோல் பூமியில் பொழிந்து குளிர்விப்பவளே, எத்தனை எத்தனைபேர் வந்து உன்னை வணங்கினாலும் அத்தனை பேர் பாபங்களை அழியச் செய்பவளே, சமுத்ரங்களை நிரப்புபவளே, எம்மைக் காத்தருள் தாயே.
No comments:
Post a Comment