பேசும் தெய்வம்: J K SIVAN
1. ''அந்த துரைசாமி பிள்ளை ''
டாக்டர் சுந்தரராமன் அமெரிக்காவில் ஒரு பிரபல பல்கலைக்கழக கணித மேதை சுந்தரராமன் அதை விட முக்கிய விஷயம் அவர் காஞ்சி மஹா பெரியவா பக்தர். அவர் ''கடவுளோடு வாழ்ந்தேன்'' என்று எழுதியிருந்த ஒரு ஆங்கில கட்டுரை படித்தேன். பிடித்த சில அபூர்வ விஷயங்களை பகிர்கிறேன். என் எழுத்தில் அவர் பேசுவார், சொல்வார். பெரி
ய கட்டுரை. முக்கிய விஷயங்கள் ரொம்ப இருப்பதால் அதிகம் சுருக்க இயலாது. ஆகவே முடிந்தவரை சுருக்கமாக நாலு ஐந்து பாகங்களாக கொடுக்கிறேன்.
ய கட்டுரை. முக்கிய விஷயங்கள் ரொம்ப இருப்பதால் அதிகம் சுருக்க இயலாது. ஆகவே முடிந்தவரை சுருக்கமாக நாலு ஐந்து பாகங்களாக கொடுக்கிறேன்.
''1993ல் மனைவி லக்ஷ்மியோடு காஞ்சி சென்றபோது தரிசனம் கிடைக்கவில்லை. ரெண்டு நாள் வெயிட்டிங். மூன்றாம் நாள் பெரியவா சந்திரமௌலீஸ்வரர் பூஜை பண்ணுவதை பார்த்தோம் .அன்று சாயந்திரம் பெரியவா தரிசனம் பத்து பதினைந்து நிமிஷம் கிடைத்தது. பெரியவா அருகில் நின்ற ஒருவர்''பெரியவா நூற்றாண்டு ஜெயந்தி மலர் ஒன்று வெளிவரப் போகிறதே, அதில் பெரியவா ளுக்கு நெருக்கமான பக்தர்கள் சிலர் எழுதியதை பிரசுரிக்க எண்ணம். நீங்களும் உங்கள் அனுபவத்தை எழுதலாம்'' என்கிறார். சொன்ன வர் யார் என்று தெரியாது. பின்னர் அவர் தான் மேட்டூர் ஸ்வாமிகள் என்று அறிந்து மகிழ்ந் தேன்.
''பெரியவாளோடு என் அனுபவம் என்ன? யோசித்தேன்.
1957-58ல் ஓரிக்கை கிராமத்தில் விஸ்வரூப தரிசனம் கண்டது உடனே. ஞாபகம் வந்தது. ஒருநாள் ராத்திரி 9 மணிக்கு அருகில் இருந்த ஒருவரிடம் பெரியவா அப்போது சொன்னது
''சுந்தரராமனை மட்டும் இங்கே வரச் சொல்லு'
''அவர் இன்னும் ஆகாரம் எடுத்துக்கலை '''' பரவாயில்லை. சாப்பிடாமல் இருப்பது அவனுக்கு இப்போது பழக்கம் ஆகியிருக் கும்'' ஓரிக்கையில் உள்ளே நடு முற்றத்தில் பெரியவா. மேலே சந்திரன் ஒளி தான் வெளிச்சம்.
''என்னுடைய இளம் வயது சரித்திரம் உனக்கு தெரியுமா?''
''ஒண்ணுமே தெரியாது பெரியவா''
அரைமணி நேரம் போல பெரியவா ஏதோ விஷயங்கள் சொன்னார். இது நடந்தபோது நான் காலேஜ் மாணவன். தேதி நாள் எல்லாம் மறந்து போனாலும் 35-40 வருஷம் ஆனாலும் பெரியவா சொன்னது நன்றாக நினைவிருக்கிறது. மஹான்கள் சொல்லும் உண்மைகள் என்றும் காலத்தால் மாறாது.
பெரியவா பதிமூன்று வயதில் காஞ்சி மடாதிபதி, ஜகத்குரு ஆனவர். அப்போது மடத்தின் நிர்வாகம் சரியில்லை என்று தோன்றியது. அவருக்கு திருப்தி அளிக்க வில்லை. கடன் தொல்லை. மடத்துக்கு சொந்த நிலங்களில் இருந்து குத்தகை வசூல் நின்றிருந்தது.
'' நான் ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டம் யாருக்கும் தெரியவில்லை. நீ அதை எழுதுவியா?'' என்று சிரித்துக்கொண்டே கேட்டார் பெரியவா.
''பெரியவா என்னை சோதிக்கறேள். நான் ஒன்றுமே இல்லை. உங்களைப்பற்றி எழுத எனக்கு யோக்கிய தாம்சமே இல்லை.''
''சுந்தரராமா, நீ என்னைப்பத்தி எழுதப்போறே, நான் அதை கட்டாயம் படிக்கப்போறேன்'' என்று சிரித்தார்.
பெரியவா ஸ்னானம், தியானம் முடிந்து மீண்டும் கூப்பிட்டார்.
''உனக்கு பசிக்கும், உன்னை ஆறு வீடுகளில் வாரத்தில் ஒவ்வொருநாளும் ஒரு வீடாக சாப்பிட வைத்தேன். உனக்கு இது பிடிக்கலைன்னு தெரியும். நீ எப்படியும் கலாசாலை டிகிரி படித்து முடிக்க இந்த ஏற்பாடு பண்ணினேன். நீ காலேஜூக்கு புறப்படும்போது அந்தந்த வீட்டிலே சாப்பாடு ரெடியாகாவிட்டால் சாப்பிடாமலேயே பட்டினியோடு படிக்க போக உன் மனம் தயாராகவேண்டும் என்று தான் இந்த அர்ரேஞ்ஜ்மென்ட். அதனால் தான் சொன்னேன் நீ சாப்பிடாமலே இருக்க பழக்கமானவன் னு.''
என்னை முதலில் என்னோடு சேர்ந்து
சாப்பிடு என்கிறார். அரிசி பொறி அவல் பாலில் கலந்து. தானும் சாப்பிட்டு எனக்கும் கொடுத் தார். சாப்பிடும்போது முகத்தை கவனிக் கிறார்.பெரியவா முகத்தில் எவ்வளவு தாயன்பு. எனக்கு விஸ்வரூப தரிசனமா தருகிறார். இதற்கு மேல் சொல்ல முடியவில்லை.
பேசிக்கொண்டே பார்த்துக்கொண்டே இருந்தவர் தியானத்தில் மூழ்கி விட்டார். எதன்மேல் தியானம்? எப்படி இவ்வளவு சீக்கிரம்? ஒரே ஆச்சர்யம். அடிக்கடி அவர் சொன்ன வாக்கியம்
''எனக்கு எப்போதும் என் கஷ்டமான இளம்பருவ காலம் நினைவில் இருக்கிறது. நீ அதைப் பற்றி எழுதப்போகிறாய். நான் படிக்கப்போகிறேன்''
திரும்ப திரும்ப என் காதில் ரீங்காரம் செய்கிறது. அவர் கொடுத்த அவல் பொறிக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? எனக்கு அவரை முழுமையாக புரிந்து கொள்ள இயலவில்லையே''
அமெரிக்கா திரும்பினேன். 26மணி நேர விமான பயணத்தில் அமெரிக்கா திரும்பும்போது எட்டுமணிக்கு மேலாக மேட்டூர் ஸ்வாமிகள் சொன்ன வார்த்தை....
'' நெருக்கமானவர்கள் எழுதப் போகிறார்கள். நீயும் எழுது''
திரும்ப திரும்ப காதில் எதிரொலித்தது. .
1952 முதல் 1967 பதினைந்து வருஷகாலம் எனக்கு நேரம் கிடைத்த போதெல்லாம், பெரியவாளுக்கு ஒரு பணியாளாக நெருங்கி சந்தோஷமாக சேவை செய்ததை ஞாபகம் வைத்துக்கொண்டு அட்லாண்டிக் சமுத்திரம் மேல் பறந்தேன். அவர் இந்த ஏழைப்பையன் காலேஜ் படிக்கும் மாணவன், என்மேல் கருணை கொண்டு ஆசீர்வதித்ததை நினைத்துப் பார்த்தேன்.
''நிச்சயம் எழுதுவேன்'' . தீர்மானித்துவிட்டேன். அமெரிக்க வீட்டில் எழுத உட்கார்ந்தேன். இருவர் மட்டும் என் அறையில். புல்லாங்குழல் ரமணி மெல்லிசாக. லால்குடி ஜெயராமன் வயலினாக என்னோடு ஒலித்துக் கொண்டிருந்தார். எங்கிருந்து எழுத ஆரம்பிக்கலாம்? ஓரிக்கையில் அன்றிரவு பார்த்த விஸ்வ ரூப தரிசனத்திலிருந்து....?
எப்படி பெரியவா என் மேல் மட்டும் தனி அபிமானம் வைத்தார்? எத்தனையோ வருஷம் அவரை விட்டு பிரிந்து விட்டாலும் இன்னும் அவர் கடாக்ஷம் எங்கோ அமெரிக்காவில் இருக்கும் என்மீது இப்போதும் இருக்க என்ன காரணம்?. நான் அப்படி என்ன செய்துவிட்டேன்?
1985ல் மெக்சிகோவில் இருந்தேன். என் மருமான் பெரியவாளை பார்க்க காஞ்சிபுரம் போயிருக்
கான். கூட இருந்தவா கிட்டே பெரியவா அப்போ கேட்டாளாம்:
''என் மனசிலே ஒருத்தன் இருக்கானே, பறந்துபோனவன், அவன் யாரு தெரியுமா?'' பெரியவா எல்லோரையும் பார்த்தார்.
அரைமணி காத்திருந்தும் இந்த புதிருக்கு யாருக்கும் விடை தெரியலியே என்று பெரிய
வாளே பதில் சொல்லி இருக்கார்:
''அவன் தான் சுந்தரராமன், அந்த துரைசாமி பிள்ளை '' ஏன் என் மருமான் போன அன்றைக்கு மட்டும் இந்த கேள்வி? அதுவே இன்னொரு புதிர். மருமான் சந்துரு எழுதிய கடிதத்தில் இதை படித்ததும் விம்மி விம்மி அழுதேன். ஷாப்பிங் போய்விட்டு வந்த என் மனைவி ''ஏன் உங்க கண் கலங்கி இருக்கு. முகம்வெளுத்து வீங்கி இருக்கு?'' என்று கேட்டபோது பேசாமல் சந்துரு விடம் இருந்து வந்த லெட்டரை நீட்டினேன்.
''நீங்கள் அவரையே நினைத்துக் கொண்டிருப் பதால் பெரியவாளுக்கும் உங்க ஞாபகம்'' என்றாள். ஆமாம் 25 வருஷம் எப்போதும் அவர் என் மனதில் அல்லவா? அவரை விட்டு வந்துவிட்டது எவ்வளவு மடத்தனம். இனி அவரை நேரில் எந்த முகத்தோடு பார்ப்பேன்? 1967 நியூயார்க்லே கணக்கிலே டாக்டரேட் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்தேன். அதிலே என்னைப்பற்றி விவரம் கேட்டிருந்தது. ஒரு பாராவில் என்ன எழுதினேன் தெரியுமா:
''நான் ஏழைக் குடும்பஸ்தன். பல்கலைக்கழக படிப்பு கனவிலே கூட தேறாது. என் பூர்வ ஜென்ம புண்யம், காஞ்சி காமகோடி மட ஜகத்குரு பரமாச்சார்யா என் மேல் கருணை கொண்டு, படிக்க எப்படியோ அவர் அருளால் படித்தேன். அவர் அருள் மட்டும் இல்லையென்றால் இந்த விண்ணப்பம் எழுத வாழ்க்கையில் சந்தர்ப்பம் வந்திருக்காது''
1967லே எழுதினது இப்போ 1993லும் அப்படியே பொருந்தும். ''நீ நிச்சயம் எழுதுவே நான் படிப்பேன்'' மஹா பெரியவா வார்த்தை காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.......அது தான்.
தொடரும்....
No comments:
Post a Comment