ஆதி சங்கரர் J K SIVAN
நிர்வாண தசகம்
ஆதி சங்கரர் அருளியது 10 ஸ்லோகங்கள், தசகம். அதில் முதல் மூன்றை இதற்கு முந்தைய கட்டுரையில் பதிவிட்டேன். இது ரெண்டாவது. இன்னும் ஒன்று மீதி இருக்கும் மூன்று ஸ்லோகங்களைத் தாங்கி அடுத்த கடைசி கட்டுரையாக பதிவிடுவேன்.
न साङ्ख्यं न शैवं न तत्पाञ्चरात्रं न जैनं न मीमांसकादेर्मतं वा ।
विशिष्टानुभूत्या विशुद्धात्मकत्वात्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥४॥4
ந ஸாங்க்யம் ந சைவம் ந தத்பாஞ்சராத்ரம் ந ஜைநம் ந மீமாம்ஸகாதேர்மதம் வா |
விசிஷ்டாநுபூத்யா விசுத்தாத்மகத்வாத்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௪||4
''சாங்கிய கோட்பாடுகளா நீ என்று கேட்டால், ஹுஹும் நான் அதை சேர்ந்ததல்ல. அப்படி''யென்றால் சைவமோ? இல்லையே, அதுவும் இல்லை. வைணவர்கள் கடைபிடிக்கும் பாஞ்சராத்ரம் போல் இருக்கிறது என்று நினைத்தால் அதுவும் தவறு. சொல்லி விடுகிறேன் நான் ஜைன மதமோ, மீமாம்ச சாஸ்திரமோ சொல்பவை எதுவுமும் கிடையாது. ஏன் தெரியுமா இந்த ஆத்மா இருக்கிறதே அது பரிசுத்த தனித்த சத்யம், உண்மை. அது தான் நான். விழிப்பு, தூக்கத்தில், சகலத்திலும் இருப்பவன். நான் சிவன். எல்லாவற்றையும் அகற்றினாலும் அதன் பின்னும் நிலையாக இருப்பவன்.
न शुक्लं न कृष्णं न रक्तं न पीतं न पीनं न कुञ्जं न ह्रस्वं न दीर्घम ।
अरूपं तथा ज्योतिराकारकत्वात्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥५॥ 5
ந சுக்லம் ந க்ருஷ்ணம் ந ரக்தம் ந பீதம் ந பீநம் ந குஞ்ஜம் ந ஹ்ரஸ்வம் ந தீர்கம் |
அரூபம் ததா ஜ்யோதிராகாரகத்வாத்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௫||5
''எனக்கு என்று ஒரு நிறம் உண்டா என்று கேட்கலாம். நான் வெள்ளை நிறமோ, கருப்போ, சிவப்போ, மஞ்சளோ, எதுவும் இல்லையே. என் உயரம் பருமன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நான் உயரம் இல்லை, குட்டை இல்லை. குண்டும் இல்லை ஒல்லியுமில்லை. ஆகவே எந்த ஒரு நிறமோ, உருவமோ இல்லாத ஆத்மா. ஒளி ஸ்வரூபம். சாதாரண சிவன். தூக்கத்திலும் மறையாதவன். எல்லாம் அழிந்தாலும் அழியாத நிலையானவன்.''
न जाग्रन्न मे स्वप्नको वा सुपुप्तिर्न विश्वो न वा तैजसः प्राज्ञको वा ।
अविद्यात्मकत्वान्त्रयाणां तुरीयं तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥६॥ 6
ந ஜாக்ரந்ந மே ஸ்வப்நகோ வா ஸுபுப்திர்ந விச்வோ ந வா தைஜஸ: ப்ராஜ்ஞகோ வா |
அவித்யாத்மகத்வாந்த்ரயாணாம் துரீயம் ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௬||6
எனக்கு விழிப்பு நிலை என்று தனியாக எதுவும் இல்லை. கனவு காண்பவனும் அல்ல நான். எனக்கு தூக்கமும் கிடையாது. சுருக்கமாகச் சொன்னால் உங்கள் உலக வாழ்க்கையில் நீங்கள் காணும் உணர்வுகள் எதுவும் இல்லாதவன் நான். கனவில் தோன்றும் காட்சிகளில் என்னைக் காண முடியாது. எந்த உணர்ச்சியிலும் மகிழ்ச்சியோ, வருத்தமோ இல்லாதவன். என்னை உறவுகளில் தேடாதே. நான் மேலே சொன்னதெல்லாம் அவித்யா என்பார்களே அது தான். நான் அதல்ல. உனக்கு புரியும்படி ஒரு விஷயம் சொல்கிறேன் கேள். விழிப்பு, கனவு, தூக்கம் என்ற வழக்கமான நீ அறிந்த மூன்றும் கடந்து இன்னுமொன்று நாலாவதாக இருக்கிறது. அதற்கு பெயர் துரீய நிலை. அதில் இருப்பவன் நான். என் பெயர் அங்கே சிவன். தூக்கத்தையும் மற்றதையும் தாண்டி நிற்பவன். எது அகன்றாலும் அகலாமல் தனித்து நிலையாக நிற்பவன்.
न शास्ता न शास्त्रं न शिष्यो न शिक्षा न च त्वं न चाहं न चायं प्रपञ्चः ।
स्वरूपावबोधाद्विकल्पासहिष्णुस्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥७॥ 7
ந சாஸ்தா ந சாஸ்த்ரம் ந சிஷ்யோ ந சிக்ஷா ந ச த்வம் ந சாஹம் ந சாயம் ப்ரபஞ்ச: |
ஸ்வரூபாவபோதாத்விகல்பாஸஹிஷ்ணுஸ்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௭||7
'' நான் யார் என்று சொல்லும்போது நான் யாரெல்லாம், எதுவெல்லாம் இல்லை என்று சொல்லிக்கொண்டே வருகிறேன். இதோ மேலும் சில அடையாளங்களை சொல்கிறேன்.
நான் ஞானத்தின் பூர்வமா, ஆதாரமா? ரெண்டுமே இல்லை. நான் சாஸ்திரங்களோ அதை விளக்கும் புத்தகங்களோ இல்லை. நான் யாருக்கும் சிஷ்யனோ, எவருக்காவது குருவோ வென்றால் அதுவும் இல்லை.
நான் நீயுமில்லை, நான் நானுமில்லை. நான் இந்த உலகமே இல்லை. ஏன் இப்படி எல்லாம் சொல்கிறேன் என்றால் என்னை நான் சொன்ன லிஸ்டில் எதிலும் காண முடியாதே. நான் சிவன், சதா சிவன் , ஆத்மன், நான் தூக்கத்திலும் அதை கடந்தும் இருப்பவன். எல்லாமே இல்லாமல் போனாலும் அப்போதும் நிலையாக இருப்பவன்.
பிரம்மத்தை இதைவிட புரியும்படியாக சொல்ல முடியுமா? ஆதி சங்கரர் வாழ்ந்தது 32 வருஷங் களே என்றாலும் அதற்குள் முன்னூறு ஜன்மாவில் அறிந்துகொள்ளக்கூடிய விஷயங் களை நமக்கு அளித்தவர். நாம் தான் அவற்றை நன்றாக் பயன் படுத்தத் தவறுகிறோம்.
No comments:
Post a Comment