ஆதி சங்கரர் J K SIVAN
நிர்வாண தசகம்
ஆதி சங்கரர் நர்மதை நதிக்கரையில் அரண்யத்தில் தனது குரு கோவிந்த பாதரை காண்கிறார்.
ஒரு மலையாள தேச பாலகன், சர்வ தேஜஸுடன் தனது எதிரே வணங்கி நிற்பதைக்கண்ட கோவிந்த பாதர் சங்கரன் மீது ஆர்வம் கொண்டு ''நீ யார் அப்பா?'' என்று கேட்கிறார். அவரை குருவாக வேண்டிய சங்கரர் அப்போது சொல்லிய பதில் தான் பத்து ஸ்லோகங்களாக (தசகமாக) நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்.

நிர்வாணம் என்றால் ஆடையின்றி இருப்பது அல்ல. அப்படி தான் நாம் எடுத்துக் கொள்கிறோம். உண்மையில் அது ஆத்மாவை குறிக்கும் சொல். இல்லாதது போல் இருப்பது. அதனால் தான் இந்த ஸ்லோகங்களில் ஆதி சங்கரர் ஆத்மாவை விவரிக்கும்போது நான் அது இல்லை, இது இல்லை என்று ஒவ்வொன்றாக கூறுகிறார்
தன்னை மனது தேகம், ஐம்புலன்கள் சம்பந்தப்படாத ஒரு பரிசுத்த ஆத்மாவாக, அறிவித்துக் கொள்கிறார்.
न भूमिर्न तोयं न तेजो न वायुर्न खं नेन्द्रियं वा न तेषां समूहः ।
अनैकान्तिकत्वात्सुषुप्त्यैकसि
ந பூமிர்ந தோயம் ந தேஜோ ந வாயுர்ந கம் நேந்த்ரியம் வா ந தேஷாம் ஸமூஹ: |
அநைகாந்திகத்வாத்ஸுஷுப்த்யைகஸி
குருதேவா, நீ யார் என்று என்னை கேட்டீர்களே, இதே கேள்வியை பல காலம் நானே என்னை, எனக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். நான் எது இல்லை, எது என்று ஒருவாறு புரிகிறது.
நான் இந்த பூமி அல்ல, நான் பூமியைச் சுற்றிலும் உள்ள நீரும் அல்லன். ஒளி தரும் அக்னியும் இல்லை. ஆகாசமும் நான் அல்ல. எங்கும் காணும் காற்றும் இல்லை நான். ஐம்புலன்கள் ஆட்டுவிக்கும் இந்த தேகமும் அல்ல. நான் சொன்னதெல்லாம் ஒன்று சேர்ந்த உருவமும் அல்ல. ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் நான் சொன்னதெல்லாம் நிரந்தரம் இல்லாதது. நான் சிவன் எனும் ஆத்மன். மூன்று நிலைகளிலும், தூக்கம், விழிப்பு, கனவு என்று எதிலும் உள்ளவன். எதுவுமே இல்லாமல் போனாலும் இருப்பவன்.'' இது நிர்வாண தசகத்தில் முதல் ஸ்லோகம்.न वर्णा न वर्णाश्रमाचारधर्मा न मे धारणाध्यानयोगादयोऽपि ।
अनात्माश्रयोऽहं ममाध्यासहानात्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥२॥2
ந வர்ணா ந வர்ணாச்ரமாசாரதர்மா ந மே தாரணாத்யாநயோகாதயோ(அ)பி |
அநாத்மாச்ரயோ(அ)ஹம் மமாத்யாஸஹாநாத்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||2||
குருநாதா, ஜாதி என்று மனிதர்கள் தங்களைத் தாங்களே, பிரித்துக் கொள்கிறார்களே . நான் அந்த, அல்லது எந்த ஜாதியும் இல்லாதவன், வாழ்க்கையில் பல படிகளாக, பருவங்களாக காண்கிறார்கள் அதில் ஒன்றும் நான் இல்லை, நான் மனிதர்கள் விதிக்கும் விதிகள் இல்லை. அதில் காண்கிற குணமும் இல்லை. நான் தியானமும் இல்லை, மந்திரமும் இல்லை, யோக வழிமுறையும் இல்லை. இந்த ''நான் '' ''எனது'' என்னும் எண்ணம் தானே எல்லா குளறுபடிகளுக்கும் காரணம். நான் அது ஒன்றுமே இல்லை. அப்படியென்றால் நான் உண்மையில் யார்? என்ற கேள்வி எழும்புகிறது.

நான் அந்த சிவன் எனும் ஆத்மன், தூக்கம் விழிப்பு கனவு எதிலும் உள்ளவன்.எல்லாவற்றையும் அகற்றினாலும் எஞ்சி மிஞ்சி நிற்பவன்.
3 अपि व्यापकत्वादितत्त्वात्प्रयोगात् स्वतः सिद्धभावादनन्याश्रयत्वात ।
जगत्तुच्छमेतत्समस्तं तदन्यस्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥९॥3அபி வ்யாபகத்வாதிதத்த்வாத்ப்ரயோகாத்
ஜகத்துச்சமேதத்ஸமஸ்தம் ததந்யஸ்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௯||
எங்கும் எதிலும் இருந்துதாலும் நான் ஒரே லட்சியமாக இருப்பவன். எனக்கு யாரும் அவசியமில்லை, எவரையும் எதிர்பார்த்து நான் இல்லை. எனக்கு நானே போதும். எதுவும் தேவை அற்றவன். உலகம் எனக்கு லக்ஷியம் இல்லை. நான் இல்லையே அது. நான் சிவன், சதா சிவன் , ஆத்மன், நான் தூக்கத்திலும் அதை கடந்தும் இருப்பவன். எல்லாமே இல்லாமல் போனாலும் அப்போதும் நிலையாக இருப்பவன்.
No comments:
Post a Comment