சரித்திரம் படைத்த சாம்பவர் வடகரை-14 J K SIVAN
'' S V KARAI AGRAHARAM TRUST''
ஒரு காலத்தில் அக்ராஹாரங்கள் பண்ணையார்களால் நிறைந்து இருந்தது. அவர்கள் அனைவருமே சுயமாக விவசாயத்தில் ஈடுபட்ட பெரிய நிலச்சுவான்தார்கள். ஏராளமாக தானம் தர்மம் செய்யும் மனமும் இருந்தது. பின்னர் இந்த நிலச்சுவான்தார்கள் காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள முனைந்து, பழைய வசதிகள் சுதந்திரங்களை இழந்து வெளி மாநிலங்களுக்கு குடியேறினர். தானசதர்ம பொது ஆலய பாரமாரிப்பு குறைந்து விடவே, சிதிலமான ஆலயங்கள், பொது மண்டபங்களை சீர்படுத்தி ஆன்மீக, தெய்வீக கலாச்சார செயல்பாடுகளை நிலைநாட்ட ஒற்றுமையோடு கிராம மக்கள் அனைவரும் ஈடுபட்டால் தான் பழைய பொலிவை அக்ரஹாரங்கள் பெற இயலும். இது பல கிராமங்களில் நடைபெற்றுவந்தால் சந்தோஷம். அந்தந்த ஊர் பூர்வீகர்கள் இதில் அக்கறை கொள்ளவேண்டும்.
இப்படி தமது கிராம நலத்தில் அக்கறை கொண்ட சிலர் எடுத்துக் கொண்ட பிரயாசை தான் சாம்பவர் வடகரை அக்ரஹாரம் ட்ரஸ்ட் நிறுவனம். 27.8 2014 அன்று பதிவு செய்யப்பட்டு இயங்குகிறது ஆரம்பத்தில் இளைய அங்கத்தினர்கள் நிறைய இருந்தனர். பிழைப்பு, உத்யோக காரணமாக பலர் கிராமத்தை விட்டு வெவ்வேறு நகரங்களுக்கு குடியேறி விட்டதால் நிர்வாக பணிகள் முழுதுமாக இபோது ஒரு தலை முறை முந்தியவர்களால் மட்டுமே கவனிக்கப்பட்டு இயங்குகிறது. 2015ல் இந்த டிரஸ்ட் நிறுவனம் தோன்றும் முன்பு, இங்கு ராமநாம உத்ஸவம், சீதாகல்யாணம் போன்ற கலகலப்பான உற்சாக நிகழ்ச்சிகளை ஊரில் இருந்த இளைய தலைமுறை தான் கவனித்துவந்தது. ஆரம்பத்தில் அக்ராஹாரத்தில் தெருவில் பந்தல் போட்டு இந்த வைபவங்கள் நடந்தது. டிரஸ்ட் நிறுவனம் தோன்றியபின் அன்னதான சாத்திரம் புதுப்பிக்கப்பட்டு வருஷா வருஷம் மேற்சொன்ன விழாக்கள் உற்சவங்கள் அங்கே போதிய இடவசதியுடன் நடைபெற்று வருகிறது.
சாம்பவர் வடகரை அக்ரஹாரம் டிரஸ்ட் என்ற ஒரு சேவை நிறுவனம் ஆரம்பிப்பதற்கான காரணம் இந்த தொன்மையான கிராமத்தின் அடையாளங்களை பெருமை சேர்த்த சின்னங்களை அழிவிலிருந்து மீட்டு முன்பு போல் ஆன்மீக, பக்தி, ஆலய வழிபாட்டு முறைகளை பின்பற்றி சிறப்பாக புத்துப்பிக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தால் தான். அன்னதான சத்திரம் கட்டிடம் மிகவும் சிதிலமடைந்த நிலையிலிருந்ததை புதுப்பித்திருக்கிறார்கள். ஊரில் திறந்த வெளி மயானபூமியில் அஸ்திவாரம் மேடை, கூரை அமைத்து மழையினால் பாதிப்பு ஏற்படாமல் கட்டிட உதவி செய்த ஸ்ரீ வெங்கடேஸ்வரன் கிருஷ்ணன் நன்றியோடு வணங்கப்படுகிறார். அவரது இந்த சிறப்பான ஈடுபாடு பெரிதும் பாராட்டப்படுகிறது. இந்த மயான பூமி அக்ரஹாரத்தின் கால்வாய் வடப்புறம், ஹனுமான் நதியருகே உள்ளது. இந்த இடுகாட்டை இறுதி ஈமக்கடன் செய்ய அடைவதற்கே பெரும்பாடாக இருந்தது. அங்கே வண்டி செல்லும் அளவிற்கு ஒரு பாதை அமைத்திருக்கிறார்கள். மயானத்தை அடையும் பாதையில் ஒரு பகுதி நிலம் ஸ்ரீ S.R கிருஷ்ண ஐயர் குடும்பத்தாரின் நன்கொடை. ஹனுமான் நதியை குறுக்கே கடந்து தான் மயான பூமி அடையும் நிலையில் இருந்ததால், ஸ்ரீ விட்டல்ராவ், அவரது மகன் ஸ்ரீ ஸ்ரீனிவாசன், அன்னார் குடும்பங்கள், ஆகியோர் இந்த கிராமத்தை தமது பூர்விகமாக ஏற்று ஆற்றைக்கடக்க ஒரு பாலம் அமைத்து தந்ததற்கு இந்த கிராமம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. மிகச்சிறந்த அந்திம யாத்திரை சேவை இது. S V K அக்ரஹார டிரஸ்ட் கிராம தெருவிலிருந்து பாலத்தின் உயரத்திற்கு சரிவாக ஊர்திகள் வசதியாகச் செல்ல சரிவான பாதை அமைத்திருக்கிறார்கள். இந்த டிரஸ்ட் நிறுவனத்தின் மற்றொரு சிறந்த செயல் வருஷா வருஷம் கிராமத்தில் ராமநாம உத்சவத்தை மீண்டும் தோற்றுவித்தது, வேதநாராயண பெருமாள் ஆலய கருடசேவையை தொடர்ந்து நடத்துவது, சாம்பவர் வடகரை அக்ரஹார ஆலயங்களின் பழுது பார்த்தல், பராமரித்தல், புனருத்தாரணம், வருஷாவருஷம் ஐயப்ப பக்தர்கள் கொண்டாடுதும் ஸாஸ்தா ப்ரீத்தி உபயதாரர்களுக்கு உதவுவது, யதீந்த்ரர்கள் சமாதி ஆராதனை அன்னதானம் செய்வோரோடு கலந்து உதவுவது போன்ற காரியங்கள். அக்ரஹாரத்தின் பழைய பஜனை மடத்தை புதுப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அக்ராஹார கோவில்களின் குடமுழுக்கு வைபவங்களை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்வது போன்ற சேவைகளில் மும்முரமாக பாடுபடுகிறது. இத்தகைய பொது காரியங்களுக்கு ஊர்மக்கள், வம்சங்கள்,குடும்பத்தினர் தாராளமாக நன்கொடை வழங்க டிரஸ்ட் நிர்வாகம் வேண்டுகோள் விடுக்கிறது.
சாம்பவர் வடகரை அக்ரஹாரத்துக்கு ஸ்ரீ ஸ்ருங்கேரி மஹா சன்னிதானம் பாரதி தீர்த்த ஸ்வாமிகள் அவரோடு வருகை தந்த ஸ்ரீ விதுசேகர பாரதி ஸ்வாமிகள் ஆகிய பூஜ்யர்களுக்கு அக்ரஹார டிரஸ்ட் நிர்வாக, அங்கத்தினர்கள் அனைவரும், ஊர் மக்களோடு கூடி பூரண கும்பத்தோடு சாஸ்திரோக்க்தமாக அழைத்து வேதநாராயண பெருமாள் ஆலயத்திற்கு விஜயம் செய்தது ஒரு பெரும் பாக்யம். ஒரு மறக்கமுடியாத வைபவம். ஆசார்யார் இங்கே அன்னதான சத்திர மண்டபத்தில் திரண்டுவந்த பக்தர்களுக்கு ஆச்சாரம், பக்தி, நித்யானுஷ்டானங்கள் ஆலய பராமரிப்பு வழிபாடு பற்றி நீண்ட உரையாற்றினார்.
அக்ரஹார ஆலயங்களில் நாள் கிழமை தவறாமல் விசேஷ காலங்களில் பூஜை, அர்ச்சனை, திருவிழாக்கள் ஊர்வலம் தொடரவேண்டும், என்ற எண்ணங்களை, நிஜமாக்க இந்த நிறுவனம் முயல்கிறது. செயல்பட்டும் வருகிறது.
2015ல் அகண்ட ராம நாம உச்சாடனம், சீதா கல்யாண மஹோத்சவம் இந்த நிறுவனத்தால் நிறைவேறியது. அதற்கு முக்கிய காரணம் இந்த சாம்பவர் வடகரை கிராம அக்ரஹார அங்கத்தினர்கள் நன்கொடையும் சரீர சம்பத்து ஆதரவும் தான்.
த்வாதசி அன்னதான சத்திர புனருத்தாரண வேலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சேவா நிறுவன அங்கத்தினர்கள், மற்றும் சாம்பவர் வடகரை பிராமணர் சமுதாய நிதி கை கொடுத்தது.

மீண்டும் விண்ணப்பிக்கிறேன். உங்கள் ஊர் அதன் தொன்மையான சிறப்பைப் பெற செய்வது உங்கள் கடமை. அது உங்களுக்குத் பெருமை. சாம்பவர் வடகரை அக்ர
ஹார பூர்வீகர்கள் எங்கிருந்தாலும் ஸ்ரீ SR கிருஷ்ணனை தொடர்பு கொண்டு டிரஸ்ட் செய்யும் நற்காரியங்களில் பங்கு கொள்ளுங்கள். அவர் தொலைபேசி என் (91) 9380196674.

சாம்பவர் வடகரை என் பூர்வீக கிராமம் அல்ல. அங்கு என்னை அழைத்து இந்த ஊரைப் பற்றி அறிந்து உங்களுக்குச்சொல்ல வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக SR கிருஷ்ணன், வேதநாராயணன், உள்ளூர் வாசிகள், எனக்கு போட்டோக்கள் தந்து உதவிய குமாரி வித்யா ஸ்ரீனிவாசன், குமாரி சந்தியா ராமச்சந்திரன் ஆகியோருக்கு சிறப்பு நன்றி .
No comments:
Post a Comment