Tuesday, October 13, 2020

KALIYUGAM


 

கலியுகம் 
                                                         
  என்ன நடக்கிறது  இங்கே?

பரீக்ஷித் மஹாராஜா,    கலியுகம் என்பது எப்படி இருக்கும்,  மக்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்று மேலும் சொல்கிறேன். கேளுங்கள்  என்று தொடர்கிறார் சுகப்பிரம்ம ரிஷி. 

ஸ்ரீமத் பாகவதம்  12.2. 6  ஸ்லோகம் இது தான்  

दूरे वार्ययनं तीर्थं लावण्यं केशधारणम् ।
उदरंभरता स्वार्थ: सत्यत्वे धार्ष्ट्यमेव हि ।
दाक्ष्यं कुटुम्बभरणं यशोऽर्थे धर्मसेवनम् ॥ ६ ॥

dūre vāry-ayanaṁ tīrthaṁ
lāvaṇyaṁ keśa-dhāraṇam
udaraṁ-bharatā svārthaḥ
satyatve dhārṣṭyam eva hi
dākṣyaṁ kuṭumba-bharaṇaṁ
yaśo ’rthe dharma-sevanam

க்ஷேத்ரம்  என்றால்  பகவான் அவதரித்த ஸ்தலம், புண்ய காரியங்கள் நடந்த இடம்,  பல மஹான்கள் சஞ்சரித்த, அவதரித்த,  வாழ்ந்த  இடம், சில  நல்ல பலன்களை கொடுக்கும் ஸ்தலம்  என்பதெல்
லாம்  மறந்து விடும்,  மறைந்துவிடும்.  எங்கோ  ஒரு  இடத்தில்  பூமியில் பள்ளத்தில் சற்று நீர் நிறைந்திருந்தால்  அது தான்  புனித ஸ்தலம், க்ஷேத்ரம் என்று கலியுகத்தில் ஒரு காலத்தில் மக்கள்  நம்பி  மகிழ்வார்கள். 

அழகு  என்பது சாமுத்திரிகா லக்ஷணம்  இல்லை.  ஒருவன் தலைமுடி ஸ்டைல் எப்படி  இருக்கிறதோ  அது தான் அழகு என்ற நிலை வந்துவிடும்.  இப்போது  MKT  பாகவதர்  கிராப்  யாராவது அழகு என்று ஒப்புக் கொள்வார்களா? ஒரு காலத்தில் கை  ரிக்ஷா இழுத்துக்கொண்டு போகிறவன், குதிரை வண்டி ஓட்டுபவன் கூட  அப்படி  ஒரு தலை முடி வளர்த்து   ''மன்மத லீலையை'' பாடிக்கொண்டு  போவதை  நானே சிறுவபதில் கோடம்பாக்கத்தில் பார்த்திருக்கிறேன். 
அமெரிக்காவில் புதுப்  புது  HAIR ஸ்டைல்.  ஏன்  நாம்  பார்க்கும்  IPL  விளையாட்டுகளில், ஒலிம்பிக் விளையாட்டுகளில்  பங்கேற்கும் சில  வீரர்கள், வீராங்கனைகள் தலையே  பொட்டுக்கூடை  தகவல் சொல்ல வில்லையா?  அதற்கென்றே  நிறைய  பணம் செலவு  செய்து  நம் வீட்டு பிள்ளைகள் தலையை அப்படி  அலங்கரித்துக் கொண்டு வந்து,  வீட்டில் தாத்தா  பாட்டி சாபம்  வாங்குவது தெரியாதா?   இப்போது கரோனா சமயத்தில் பலர் தலைகள்  முகங்கள்  எல்லாமே   ரிஷிகள் தலைகளாக  காண்கிறதே. அப்படியே  ஒருவேளை நிலைத்துவிடுமோ?

கண்டதை எல்லாம்  சாப்பிட்டு வயிற்றை வளர்த்துக் கொள்வது, நிறைத்துக் கொள்வது தான் வாழ்க்கையின்  லக்ஷியம் ஆகிவிடும். எவன்  அடாவடி அடித்து காரியம் சாதித்துக் கொள்கிறானோ அவனே  கெட்டிக்காரன், புத்திசாலி என்று மக்கள்  தீர்மானிப்பார்கள்.  அங்கே நியாயம், நேர்மை நாணயம்  காணாமல் போகும்.  

குடும்பத்தை நடத்துபவன்   சாமர்த்தியசாலி   அதி புத்திசாலி என்று கருதப்படுவான். 

ஆன்மிகம், பக்தி  வழிபாடு  என்பது  நாலு பேர் மெச்சுவதற்காக என்று ஆகிவிடும்.  

பகவானே   நாம் எங்கே போய்க் கொண்டி
ருக் கிறோம்.  சுகப்பிரம்ம ரிஷியே எப்படி உங்களால்  எங்கள் வாழ்க்கையை அப்போதே  ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்  புட்டு புட்டு வைக்க முடிந்தது?

இன்னும் சுகர்  என்ன சொல்கிறார் என்று அறிவோம். 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...