Wednesday, December 4, 2019

sri vishnu sahasranamam




ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் J K SIVAN

ஆயிர நாமன் (218 - 232) 24.அக்ரணீர் க்ராமணீ: ஸ்ரீமாந் ந்யாயோ நேதா ஸமீரண: ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத் || 218. அக்ரணீ : கடைசிவரை நம்மை யார் வழி நடத்திச் செல்கிறா232ரோ அவர். வேறு யார் ? விஷ்ணு தான். 219. கிராமணீ: கிராமங்களில் உள்ளவர்களை முன்னின்று நடத்துபவரை கிராமணி என்று அந்த காலத்தில் அழைத்தோம். ஒரு வகுப்பார் அப்படி பெயர் கொண்டவர்கள் இன்னும் இருக்கிறார்கள். ம.பொ.சி. அந்த வகுப்பை சேர்ந்தவர். இக பர உலக வாழ்வில் ஆன்மிக பயணத்தில் நம்மை முன்னின்று வழிநடத்துவர் விஷ்ணு கிராமணியார் . 220. ஸ்ரீமான்: ஒளி வீசும் ஞானவான் விஷ்ணு. 221. நியாயா: நேர்மை, நீதிமான்.ஸ்ருதி ஸ்ம்ரிதி சொல்லும் வழியில் நடக்க செய்பவர் 222. நேதா: நம் மீது அன்போடு பொறுப்போடு காக்கும் தலைவர். நேதாஜி என்று சுபாஷ் சந்திர போஸ் அழைக்கப்பட்டார். வாழ்க்கையில் நம் அனைவருக்கும் நேதாஜி விஷ்ணு அவர்கள். 223. சமீரணா: பிரபஞ்ச ஜீவன்களின் பஞ்சபிராண இயக்கத்தை கண்காணிப்பவர் விஷ்ணு. 224. சஹஸ்ரமூர்த்தா: எண்ணற்ற சிரங்களை கொண்டவர். தானே பலவாக, எல்லாமாகவும், காட்சி அளிப்பவர். எத்தனையோ வித தலைகள். 225. விஸ்வாத்மா: பிரபஞ்சத்தின் உள்ளே ஒளிர்கின்ற ஆத்மா. சர்வ ஜீவன்களின் சாரம். 226.ஸஹஸ்ராக்ஷன்: அகண்டாகாரன் விஷ்ணு. ஆயிரக்கணக்கான கண்களை உடையவன். 227. ஸஹஸ்ர பாத்: ரிக் வேத புருஷசூக்தத்தில் எண்ணற்ற உருவங்களை கொண்ட எல்லையில்லாத நிரந்தர ஆயிரமாயிரம் கண், சிரம், பாதங்கள் உடைய விஷ்ணு. 25.ஆவர்த்தநோ நிவ்ருத்தாத்மா ஸம்வருதஸ் ஸம்ப்ரமர்த்ந: | அஹஸ் ஸம்வர்த்தகோ வஹ்நி ரநிலோ தரணீதர: || 228. ஆவர்த்தனன்: காலத்தின் எல்லையில்லாத தோற்றம், மறைவுச் சுழலை கண்ணுக்கு தெரியாத டிரைவராக செலுத்துபவர். தொடர்ந்து இப்படி நிகழ்வது தான் சம்சாரத்தின் ஆவர்த்தனம். கச்சேரியில் தனி ஆவர்த்தனம் மாதிரி
''அர்ஜுனா, ஒவ்வொரு மனத்திலும் மாயையால் எண்ணற்ற எண்ணச்சுழல்களை உருவாக்கி அவற்றை அவரவர் வினைக்கேற்ப செயல் புரிய வைக்கிறேன் - கிருஷ்ணன்'' 229. நிவ்ரிதாத்மா: எதனுடனும் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ளாத தனித்துவமான பரமாத்மா. 230.ஸம்விரிதா: காட்சி , உணர்தல்,எண்ணுதல் எனும் ஜீவனின் அனுபவங்களில் பட்டும் படாமலும் விலகி நிற்கும் சத்ய ஸ்வரூபம். 231. ஸம்பிரமர்தனா: நிற்பதாக்ஷண்யமாக கொடியவர்களை, தீய எண்ணம் கொண்டவரை, புலன்களுக்கு அடிமைகளை, தண்டிப்பவர். 232. அஹஸ்ஸம்வர்த்தக : சூரியனின் ஒளியில் வாழும் சகல ஜீவராசிகளையும் ஒவ்வொருநாளும் புத்துணர்ச்சியோடு செயல்பட வைப்பவர்.''அடே, அர்ஜுனா, நான் தானடா சூரியனின் ஒளி, பூமிக்கு சக்தி, சந்திரனின் குளுமை, உஷ்ணம் எல்லாமே.'' என்றார் கிருஷ்ணனாக .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...