திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள்
J K SIVAN
கிருஷ்ணனும் ராதையும் எங்கோ பிறந்த குழந்தைகள் என்றாலும் நமது வீடுகளில் உள்ள ஆண் பெண் குழந்தைகள் தான் நமக்கு ப்ரத்யக்ஷ கிருஷ்ணன் ராதைகள். வித்யாசமே இல்லை. மார்க் கொடுப்பதானால் மனது திருப்திக்கு பிருந்தாவன ஜோடிக்கு 100க்கு 1000 கொடுப்போம், (தேங்காய் ஸ்ரீனிவாசன் தில்லு முல்லு வில் கொடுப்பார் அது போல).
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் தானே. ரெண்டுக்கும் வித்யாசமே இல்லை. கள்ளம் கபடமறியாத, சாத்வீக உணவு பாலை மட்டும் அருந்தி, தங்கத்துக்கும் தகரத்துக்கும் வித்தியாசமில்லாமல் இருக்கும் அன்பே உருவான குழந்தைத்தனம் தான் முழுதுமாக கடவுளுக்கு. இவர்கள் நமக்கு குழந்தைகள். நாம் கிருஷ்ணனுக்கு குழந்தைகள்.
ஒரு முனிவர் தம்பதிகளின் பெயர் சுதபர் - ப்ரஸினி.
புத்ர பாக்யம் வேண்டி, நாராயணனை நோக்கி தவமிருந்தார்கள். நாராயணன் ரிஷி முன்னால் தோன்றினார்.
''முனிவரே எதற்கு என்னை அழைத்தீர்கள், உங்களுக்கு என்ன குறை?''
'' ஸ்ரீமந் நாராயணா, எங்களுக்கு புத்ர பாக்யம் வேண்டி தான் உன்னை நினைத்து தவமிருந்தேன்''
''ஆஹா உமது கோரிக்கை நிறைவேறும். விரைவில் உமக்கு ஒரு புத்ரன் பிறப்பான். திருப்தியா?''
''முழு திருப்தி இல்லை நாராயணா, நீயே எங்களுக்கு புத்திரனாக பிறந்தால் பரம திருப்தி''
'' ஆஹா அப்படியே ஆகட்டும்''
சீக்கிரமே அந்த ரிஷி பத்னி ப்ரஸினி வயிற்றில் உதித்த நாராயணன் (உதித் நாராயணன் இல்லை) ப்ரஸினி கர்பா என்ற பெயர் பெற்றான். இந்த ரிஷி தம்பதியர் அடுத்த பிறவியில் ரிஷி காஸ்யபர் -அதிதி தம்பதிகளாக பிறந்தபோது வாமனனாக மீண்டும் பிறந்தான். வசுதேவர்-தேவகியாக அவதரித்தபோது கிருஷ்ணனாக பிறந்தான்.
நமக்கு இதெல்லாம் இன்றைக்கு இதை படித்தபோது தான் தெரிகிறது. ஆனால் திருக்கோளூர் அம்மாளுக்கு படிக்காமலேயே அனைத்து விஷயங்களும் அத்து்படி போல இருக்கிறது. மோர் தயிரோடு எல்லாமே கரைத்து குடித்தவள் போல் இருக்கிறது. அவள் கேட்கிறாள் ராமானுஜரை : ''என்னைப்பார்த்து ஏன் இந்த திருக்கோளூரில் வசிக்காமல் எங்கோ போகிறாய் என்று, நான் என்ன தேவகியைப் போல் தவமிருந்து ஸ்ரீ நாராயணனையே பிள்ளையாக பெற்றவளா? என்ன அருகதை இருக்கிறது எனக்கு இந்த புனித மண்ணில் வசிக்க , நீங்களே சொல்லுங்கள்?"
No comments:
Post a Comment