Tuesday, December 17, 2019

VISHNU SAHASRANAMAM



விஷ்ணு ஸஹஸ்ரநாமம் J K SIVAN
ஆயிர நாமன் (329-344)
ஆயிர நாமன் என்ற தலைப்பில் ஸ்ரீ விஷ்ணுவின் ஸஹஸ்ர நாமங்களை எளிதில் சுருக்கமாக அர்த்தம் புரிகிறமாதிரி எழுதி இருக்கிறேன். இது எனது ''ஐந்தாம் வேதம்'' என்ற முழு மஹாபாரத புத்தகத்தில் உள்ளது. ஐந்தாம் வேதம் ரெண்டு பாகங்களாக Rs 1000 நன் கொடைக்கு பரிசாக வழங்கப்படுகிறது. இந்த தொகை புத்தகத்தின் அச்சக கூலிக்கு மட்டுமே. மற்ற செலவினங்களை எங்களது டிரஸ்ட் நிறுவனம் ஏற்றுக்கொண்டதால் இந்த தொகை அந்த ரெண்டு புத்தகங்களுக்கான மதிப்பில் ரொம்ப குறைவானது. மொத்தம் 1000 பக்கங்கள், வண்ண படங்களோடு, உயர் ரக ஆர்ட் காகிதத்தில் அச்சடிக்கப்பட்டவை. இன்னும் சில பிரதிகளே உள்ளதால் வேண்டுபவர்கள் உடனே அணுகவும் 9840279080 வாட்ஸாப்ப் நம்பரும் இதுவே.
329. துர்யா: பிரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் எனும் முத்தொழிலை தாங்குபவர். 330 . வரதா : தன்னை சரணடைந்து வேண்டும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் தருபவர். இக பர நலன் அருள்பவர். 331.வாயுவாஹன: காற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர். ஏழுவித வாயுக்கள் உண்டு. அவை சப்த மாருதம் எனப்படும். அவற்றை நிர்மாணிப்பவர். 332. வாசுதேவா: வாசு என்றால் வசிப்பவன். ஜீவர்களின் மனதில் வசிப்பவன். தேவன் = தலை வனாக மிளிர்பவன். பிரபஞ்ச நாயகன். வசுதேவர் மகன் வாசுதேவன் என்று கண்ணனையும் குறிப்பிடும் நாமம். மஹாபாரதத்தில் உத்யோக பர்வத்தில் '' சூரியன் கிரணங்கள் எங்கும் வியாபிப்பது போல், ஜீவர்களாகிய வசுக்களிலும் உள்ளிருந்து இருந்து, தேவனாக ஸர்வத்தையும் ரக்ஷிப்பதால் என்னை வாசுதேவன் என்பார்கள் '' என்கிறார் கிருஷ்ணன். 333. பிருஹத் பானு: எண்ணற்ற கிரணங்களால் பிரகாசிப்பவர். பூவுலகில் சூரிய சந்திர ஒளியானவர். 334 ஆதிதேவ: எல்லாவற்றிற்கும் ஆதி காரணன். ஆதி மூலம். முதல் தெய்வம். விஷ்ணு. 335. புரந்தர: சிவனை திரிபுராந்தகன் என்போம். புரந்தர என்றால் நகரங்களை அழிப்பவர் என பொருள். ஜீவர்களின் திரி புரங்கள் விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்பன. அவற்றை அழிப்பவர் எனவும் ஸ்தூல, சூக்ஷ்ம, காரண சரீரங்களை தாண்டி துரீய நிலைக்கு கூட்டிச் செல்பவர் எனவும் அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம். 37. அஸோகஸ் தாரணஸ் தாரஸ் ஸூரஸ் ஸௌரிர் ஜநேஸ்வர: | அநுகூலஸ் ஸதாவர்த்த: பத்மீ பத்ம நிபேக்ஷண: || 336. அசோக : சோகமே இல்லாதவன். துயரம், துக்கம், துன்பம் அணுகாதவன். 337. தாரணா : சம்சார சாகரத்தை ஜீவர்கள் கடப்பதற்கு உதவுபவர். விஷ்ணு பாகவதம் ''பரமாத்மா நின்னை அன்றி யார் எம்மை ஜனன மரண சக்ரத்தின் சுழற்சியிலிருந்து விடுவிப்பவர்? என்று கேட்கிறது. 338. தாரா: மீண்டும் பிறவித்துன்பத்திலிருந்து காப்பவர், மீட்பவர். 339. சூர: பௌருஷத்தின் உருவம். தைர்யவான். 340. சௌரி: கிருஷ்ணனின் தாத்தா சூரசேனன். அந்த வம்சத்தினர் என்று காட்ட சௌரி என்ற பெயர் ஆயிரத்தில் ஒரு நாமம் விஷ்ணுவுக்கு. 341. ஜனேஸ்வர: மக்களின் நாயகன். மஹாவிஷ்ணு. சகல ஜீவ ரக்ஷகன். 342. அனுகூலா: எல்லோரும் விரும்புபவர். சர்வ ஜன பிரியர். 343. சதாவர்த்தா : எண்ணற்ற, நூற்றுக்கணக்கான உருவங்களைக்கொண்டவர். பிராணனாக எண்ணற்ற நாடிகளை தேகத்தில் இயக்குபவர். 344. பத்மீ : கரத்தில் தாமரை ஏந்தியவர். நமது ஆன்மீக வாழ்வை காட்டவே தாமரை நமது தேசிய மலர்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...