Tuesday, December 10, 2019

KARTHIKEYAN



கார்த்திகேயன் மாதம் J K SIVAN

எங்கள் கன்னிகா காலனியில் கண்கண்ட தெய்வம் என் மனதில் அழியாத இடம் பெற்ற திருமால்மருகன். நிறையபேர் திருமால் முருகனா என்று கேட்கும்போதெல்லாம் அப்படி அல்ல திருமாலின் மருமகன், மால் மருகன் என்று உறவை சொல்லி விளக்கவே நேரம் சரியாக இருக்கும்.

1983ல் எங்கள் காலனிக்கு வந்த முருகன் சுபிக்ஷத்தை தந்துகொண்டு தான் இருக்கிறான். கண்கண்ட தெய்வம்.

இளமை முருகு எனப்படும். முருகன் அழித்த சூரர்கள் வெளியே. உள்ளே நமக்குள் இருக்கும் ஆறு அசுரர்களை, அதாவது, ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம் இவற்றை கூர்வேல் கொண்டு அழிப்பவன்.

வெளியே நாம் பார்த்து போற்றும் அசுர சம்ஹார ஸ்தலங்கள் - சூரனை அழித்த திருச்செண்டூர், தாரகாசுரனை சம்ஹரித்த திருப்பரங்குன்றம். சூரபத்மனின் இன்னொரு ராக்ஷஸ சகோதரன் சிங்கமுகாசுரனை வதம் செய்த திருப்போரூர்.

அங்காரக, செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் விடியலில் குளித்து உள்ள உடல் தூய்மையோடு ஓதவேண்டியது சுப்பிரமணிய அஷ்டகம். கைமேல் பலன்.

ஆறுமுகன் பன்னிரு கரத்தான். வலது ஆறு கரங்களில் ஒன்று பயப்படாதே எனும் அபயஹஸ்தம். ஒன்று சேவல்கொடி எய்தியது. வஜ்ரம், அங்குசம், அஸ்திரம், வேல், ஆயுதங்கள் ஏங்கிய கரங்கள்.

இடது ஆறுகரங்கள் வரமளிக்கும் வரதஹஸ்தம், தாமரை, மணி மாலை, மழு, தண்டாயுதம், வில் ஆகியவற்றை ஏந்துபவை.

ஷண்முகனுக்கு சிறப்பானவை: ஷஷ்டி திதி, விசாகம், , சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய்,

முருகன் கங்கையால் கார்த்திகேய, காங்கேய, கௌரி தனயா என்று பாடுவோமே. அவனை காங்கேயன் என்று ஒரு பெயரால் வணங்குவது உண்டு.

சரவணப் பொய்கையில் உதித்ததால் சரவணன், சரவணபவன், (ஐயோ, ஹோட்டல் இல்லை. அது அவன் பெயரில் உள்ளது) கார்த்திகை பெண்கள் காத்து வளர்ந்ததால் கார்த்திகேயன். வடக்கே கார்த்திகேயன், குமாரன், ஸ்கந்தன் என்ற பெயர்கள் தான் தெரியும், குமார சம்பவம் முருகன் திரு அவதாரம் பற்றியது. வடக்கே முருகன் ஷண்முகம் அவ்வளவு பிரபலம் இல்லை. ளால் காத்து வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் ,

முருகன் தமிழ்க்கடவுள். வைதாரையும் வாழவைக்கும் தெய்வம். திருப்புகழ் அவனை பாடுவது. முருகன் அருளால் முதல் வார்த்தை முத்தைத்தரு என்று சொல்லி கொடுக்கப்பட்டு அருணகிரியால் இயற்றப்பட்டது.

சுப்பிரமணியன் யார் என்றால் அக்னி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்யகர்பன் ஆகியோர் சக்தியை எல்லாம் கலந்த ஒரு மொத்தஉரு. அவன் கூர்வேல் ஞானவேல், சக்திவேல் எனப்படுவது. சீர்காழியில் முருகன் அவதரித்த மனித உருவம் தான் திருஞான சம்பந்தர் என்பார்கள்.


முருகனை ஆண்டியாக பழனியில், திருப்பரங்குன்றம், திருத்தணியில் எல்லாம் வள்ளி தேவசேனை சமேதராக பார்க்கிறோம், அப்பனுக்கு உபதேசம் செய்த சுப்பனாக சுவாமிமலையில் ஞானஉருவமாக பார்க்கிறோம். மலைகள் உள்ள இடத்தில் எல்லாம் கந்தன் வாசம் செய்கிறான். இந்திய எல்லை தாண்டி வழிபடும் ஹிந்துக்கடவுள்களில் முக்கியமாக முருகன் உண்டு. மயில் வாகனன்.
ஓங்கார ஸ்வரூபன் முருகன்.

நண்பர்களே முருகன் கோவில்களுக்கு செல்வோர் முக்யமாக ஒரு முறை அவனை வலம் வருவது தான் சிறப்பு.

புத்துக்கோட்டைஜில்லாவில் ஒற்றைக்கண்ணூர் என்று ஒரு கிராமம். அங்கே தான் சோழ ராஜா ஆதித்தன் முருகனின் முதல் கோவிலை நிர்மாணித்தான் என்று வரலாறு. அங்கு யானை முருகன் வாகனமாக ஸ்தாபிக்கப்பட்டது.

முருகனை உபாஸிக்க ஸ்மரணை செய்யும் மந்திரம் ஷடாக்ஷரம், ஆறெழுத்து மந்திரம், ஓம் சரவணபவ:



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...